Tuesday, November 3, 2026

எழுத்தாளருர் இரா.முருகன் மறைந்தார்!


எழுத்தாளரும் , என் முகநூல் நண்பர்களில் ஒருவருமான இரா.முருகன் மறைந்த செய்தியினை முகநூல் தாங்கி வந்தது. வழக்கம்போல் முகநூல் தாங்கி வந்த எதிர்பாராத இழப்புச் செய்தி. ஆழ்ந்த இரங்கல்.
'பதிவுகள்' இணைய இதழின் ஆரம்பக் காலத்தில் தமிழகத்து எழுத்தாளர்கள் பலருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர்களில் இரா முருகனும் ஒருவர். இவரது எழுத்தை முதலில் நான் அறிந்து கொண்டது, தொண்ணூறுகளில், ஸ்நேகா பதிப்பகம் வெளியிட்ட இவரது கணனி பற்றிய நூலொன்றின் மூலம். அப்போது என் நூல்களிரண்டையும் ஸ்நேகா பதிப்பகம் வெளியிட்டிருந்தது.

நாவல், சிறுகதை, கட்டுரை என இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகத்தன்மை மிக்கது. இவரது இலக்கியப் பங்களிப்புக்காக 2024இல் விஷ்ணுபுர விருது இவருக்கு வழங்கப்பட்டது.
சென்ற வருடம் இவர் தனது முகநூல் பக்கத்தில் தீராநதியில் வெளியான 'எம்.டி.வாசுதேவன் நாயருடன் நடத்திய நேர்காணலை' பகிர்ந்திருந்தார். அதில் நாவலாசிரியர் அவரது நாவலான நாலுகெட்டு நாவல் பற்றிய கருத்துகளில் இருந்த குழப்பம் பற்றி அப்பதிவின் கீழ் என் கருத்தைத்தெரிவித்தபோது , அதனை உள்வாங்கிப் பதிலளித்திருந்தார்.
இவரை நான் ஒருபோதும் நேரில் சந்தித்ததில்லை. இவரை நினைத்தால் இவரது தனித்துவம் மிக்க முழிக்கும் விழிகளும், நட்பு ததும்பும் இலேசான புன்னைகையும் நினைவுக்கு வரும்.
மீண்டும் என் ஆழ்ந்த இரங்கல்.

No comments:

வ.ந.கிரிதரன் பாடல் வரிகள்: மாறுதல் என்பது இயற்கையின் நியதி.

வ.ந.கிரிதரன் பாடல் வரிகள்: மாறுதல் என்பது இயற்கையின் நியதி. இசைத்துப் பாடியது - Gemini AI  | ஓவியம் - Gemini AI மாறுதல் என்பது இயற்கையின் நி...