முகநூலில் நாளும் பொழுதும் வெளியாகும் இழப்புச் செய்திகளால் சுருட்டுச் சுப்பருக்கு இப்பொழுதெல்லாம் சுடலை ஞானம் வந்து விட்டது.
சுருட்டுச் சுப்பருக்கு இவ்விதமான சமயங்களில் துணை வருவது கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள்தாம். போத்தல் பனங்கள்ளை அடித்துக்கொண்டு, சுருட்டை ஊதிப் புகையை விட்டவாறு பாடுகின்றார்:
"வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?"
[மது அருந்துதல், புகை பிடித்தல் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்]

No comments:
Post a Comment