முகமூடிகள் அணிந்து வந்தும்
முட்டி மோதுகின்றார்.
முகமூடி அணிந்தால்
முகத்தை மறைக்கலாம் மூடர்களே!
மனத்தை மறைக்க முடியாது.
மதிகெட்ட மூடர்களால் நிறைந்து கிடக்கின்றது
முகநூல்.
முட்டாள்களுக்குக் கருத்துச் சுதந்திரம்
கசக்கும் பாகற்காய்.
கசக்கும் பாகற்காய்
உடல் நலத்துக்கு நன்மை தரும்.
உள நலத்துக்கும்தான்.
மூடர் இவர் இதை அறியார்.
மூடர்களே! உங்களுக்கு என்
முகநூற் பக்கத்தில் இடமில்லை.
முகநூலில் முகங்காட்டி வாருங்கள்.
முகம் மலர்ந்து வரவேற்பேன்.
மாற்றுக் கருத்துகளை
மனம் மகிழ்ந்து ஏற்பேன்.
முகமூடியில் வந்து துள்ளிக் குதித்தால்
மூடர்களே! உங்களுக்கு என்
முகநூலில் இடமில்லை.
முகம் மறைத்து
மன வக்கிரம் காட்டுவதற்கு என்
முகநூல் நீங்கள் விளையாடும்
களமல்ல. உம்
களத்தில் புகுந்து விளையாடுங்கள். என்
கருத்துரிமை ஏற்பவருக்கு,
கண்ணியம் காப்பவருக்கு,
பொறுப்புணர்ந்து தர்க்கம்
புரிபவருக்கு,
சொற்களில் அவச்
சொற்கள் தவிர்ப்பவருக்கு,
எப்பொழுதும் என் முகநூலில்
எதிர்க்கருத்துக் கூறிடினும்,
இடமுண்டு. வரவேற்பேன்.
கண்ணியம் அற்று
கடுஞ்சொற்கள் வீசும்
மூடர்களுக்கு உரியதல்ல என்
முகநூல்.
.png)
No comments:
Post a Comment