Sunday, November 15, 2026

காலத்தால் அழியாத கானம்: 'காற்றினிலே வரும் கீதம்'


கல்கி அதிபர் சதாசிவத்தின் தயாரிப்பில், எழுத்தாளர் கல்கியின் திரைக்கதையில்  இசையமைப்பாளர்  எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில், எல்லிஸ் ஆர். டங்கனின் இயக்கத்தில் வெளியாகிப் பெரு வெற்றி பெற்ற திரைப்படம் 'மீரா'.  திரையில் மீராவாக நடித்திருப்பவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'மீரா' திரைப்படத்தில்  21 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

'மீரா' திரைப்படப் பாடல்கள் எல்லாமே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. அவற்றிலொன்றுதான் 'காற்றினிலே வரும் கீதம்' என்னும் காலத்தால் அழியாத இந்தக் கானம். இப்பாடல் வரிகளை எழுதியிருப்பவர் எழுத்தாளர் கல்கி.

'மீரா' திரைப்படத்துடன் தன் நடிப்புலக வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

இப்பாடலை என் பால்யப்பருவத்தில் , இலங்கை ஒலிபரப்புக்  கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவையின் காலை ஒலிபரப்பில் ஒலிபரப்பாகும் பழைய பாடல்கள் ஒலிபரப்பாகும் 'நெஞ்சில் நிறைந்தவை' நிகழ்ச்சியில்  அடிக்கடி கேட்டிருக்கின்றேன். 

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரல், எளிமையான இன்பமூட்டும்  பாடல் வரிகள், செவிக்கின்பம் தரும் இசை இவை என்னை மிகவும் கவர்ந்தவை. 

பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=ikqFFjO_2cg

No comments:

கவிதை: சாற்றுதலும், தூற்றுதலும் , துயராற்றுதலும்! - வ.ந.கிரிதரன் -

உயிருடன் இருந்தபோது எங்கு போயிருந்தீர்கள்? உங்களுக்கு தர்க்கம் செய்ய நிறைய நேரம் இருந்ததே. எங்கு போயிருந்தீர்கள்? நேருக்கு நேர் தர்க்கம் செய...