Friday, August 21, 2026

தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு பற்றிய செய்தியாளர் சந்திப்பு! - வல்லிபுரம் சுகுந்தன் (செயலாளர்)< தொல்காப்பிய மன்றம் (கனடா) -


[தொல்காப்பிய மன்றம் (கனடா) செப்டம்பரில் கனடாவில் நடைபெறவுள்ள 'இரண்டாவது தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2026 சம்பந்தமாக, செய்தியாளர் சந்திப்பொன்றை ஆகஸ்ட் 24 அன்று நடத்தவுள்ளது. அது பற்றிய தகவலை மன்றத்தின் செயலாளர் வல்லிபுரம் சுகுந்தன் பகிர்ந்திருந்தார். அதனை நண்பர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.]

வணக்கம்! கனடாத் தொல்காப்பிய மன்றத்தினால் 2026ஆம் ஆண்டு செப்டம்பர் 19, 20ஆம் தேதிகளில் 2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மார்க்கம் நகரின் பில் கோகர்த் மேல்நிலைப் பள்ளியில் (Bill Hogarth Secondary School) “தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க-கற்பிக்க கொண்டாட-பரவலாக்க வேண்டும்” என்னும் பொருண்மையில் நடாத்தப்படவுள்ளது.
இம் மாநாடு, ஆயிரம் பேர் ஒன்றுகூடும் நிகழ்வாகக் கனடாவில் இயங்கிவரும் 90க்கும் மேற்பட்ட தமிழ் மன்றங்கள், ஊர்ச் சங்கங்கள், கல்விக்கூடங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பெருமளவிலான நிதி மூலதனத்துடன் நடாத்தப்படவுள்ளது.

'காவியத்தலைவி ' காலத்தில் கரைந்தார்!


நடிகை செளகார் ஜானகியின் மறைவு பற்றிய தகவலை முகநூல் மூலம் அறிந்தேன். எனக்குப் பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். பாத்திரம் எதுவானாலும் அதனை ஏற்றுத் திறமையாகச் செய்வதில் வல்லவர். நடிகைகளில் துணிச்சலும், தன் திறமை மீதான செருக்கும், ஆங்கிலப் புலமையும் மிக்கவர். 

இவர் வாழ்க்கையே ஓர் எதிர்நீச்சல்தான். இளம் வயதில் கைக்குழந்தையுடன், மண முறிவு ஏற்பட்ட நிலையில், துணிச்சலுடன் வாழ்வை எதிர்நோக்கித் தன்னைத் தமிழ்த்திரையுலகில் நிலை நாட்டியவர்.  தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்தவர். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டாலும், தமிழ்த்திரையுலகில் மிகுந்த புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தார்.

Tuesday, August 18, 2026

தமிழகமும் , ஊழலும்!


தமிழக வெற்றிக்கழகம் தமிழ் நாட்டில் ஊழலை ஒழித்து விட்டதாகக் கதைக்கின்றார்களே, அது உண்மையா?  ஆராய்ந்து பார்த்தால் ஓரளவு உண்மை உண்டு.ஓரளவு பொய் உணடு.அதெப்படி வடிவேலு பாணியில் பதிலளிக்கின்றேன் என்று பார்க்கின்றீர்களா? இதோ என் விளக்கத்தைத் தெளிவாகக் கூறுகின்றேன். புரிந்து கொள்வீர்கள். இதற்கு உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிலவும் ஊழல் பற்றிய  அறிவைப்பெற்றிருப்பது அவசியம்.

ஊழலை இரு விதங்களாகப் பிரித்துபார்க்கலாம்: ஒன்று அரச அலுவலங்களில் ,அதிகாரிகள் மட்டத்தில் நிலவும் ஊழல்,  இதனை கீழ்மட்ட ஊழல் அல்லது Petty Corruption என்று குறிப்பிடலாம். அடுத்தது மேல் மட்டங்களில் நடைபெறும் ஊழல். இதனை  Grand Corruption என்பர். பெருந்திட்டங்களை அமுல்படுத்துகையில் அமைச்சர்கள் போன்ற மேலமட்ட அரசியல்வாதிகள் குறிப்பாக அமைச்சர்கள் மத்தியில்  நிலவும் ஊழல். 

Monday, August 17, 2026

எழுத்தாளர் குரு அரவிந்தனின் 'கதிரவன் குடும்பம்' நல்லதொரு சிறுவர் நூல்!


குழந்தைகளுக்கான 'கதிரவன் குடும்பம்' நல்ல நூல்., இது போன்ற வானவியல் பற்றிய நூல்கள் குழந்தைகளுக்கு அவர்கள்தம் சிறந்த எதிர்காலத்துக்கு முக்கியம். ஆங்கிலத்திலும் , தமிழிலும் இந்நூல் அமைந்திருக்கின்றது. அது இந்நூலின் நல்லதோர் அம்சம்.

சிறுவர் இலக்கியம் மானுட சமுதாயத்தைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானது. குழந்தைகளே நாட்டின் எதிர்கால நாயகர்கள். அவர்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதொரு படிக்கட்டு சிறுவர் இலக்கியம்.  

கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'நூல்களின் சங்கமம்' புத்தகக்கண்காட்சியில்.....


நேற்று ஸ்கார்பரோவிலுள்ள தமிழிசைக் கலாமன்றத்தில் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 'நூல்களின் சங்கமம்' புத்தகக்கண்காட்சி நடைபெற்றது. எழுத்தாளர்கள் பலரின் நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நடனக்கலைஞர்கள் தயாரித்தளித்த அவர்கள்தம் மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகள் பல நடைபெற்றன. வானொலி ஊடகக்கலைஞம், திருக்குறளில் மேதமை மிக்கவருமான ஜோதி ஜெயகுமாரின் நெறிப்படுத்தலில் மேடை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. பால்யப்பருவத்து மாணவர்கள் பலர் ,அழகான தமிழில் , சிறந்த பேச்சாளர்களைப்போல் ஏற்ற, இறக்கங்களுடன் தம் உரைகளை ஆற்றியது சிறப்பாக அமைந்திருந்தது. நடன நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய மாணவிகளுக்கு கலை, இலக்கிய உலகில் அறியப்பட்ட ஆளுமைகள் பலர் விருதுச்சான்றிதழ்களை வழங்கினார்கள்.

Saturday, August 15, 2026

டொரோண்டோ நண்பர்களின் கவனத்துக்கு - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின்'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு மேசை!


டொரோண்டோ நண்பர்களின் கவனத்துக்கு - கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின்'நூல்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு மேசை! 

டொரோண்டோ  வாழ் நண்பர்களின்  கவனத்துக்கு! நாளை ஆகஸ்ட் 16, 2026 , ஞாயிற்றுக்கிழமை  கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும்  'நூல்களின் சங்கமம்' நூல் கண்காட்சி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.  முகவரி -  தமிழிசைக் கலாமன்றம்,  1120 Tapscott rd, Scarborough, ON M1X 1E8.  தொடர்புகளுக்கு - ரவி கனகசபை - 416 - 301 - 9027 / முனைவர் வாசுகி நகுலராஜா  - 647  208 4148

Thursday, August 13, 2026

தாமரைச்செல்வியின் 'சுமைகள்'


இன்று எழுத்தாளர் தாமரைச்செல்வியின் 'சுமைகள்' நாவலின் புதிய பதிப்பு என்னை வந்தடைந்தது.  அதற்காக அவருக்கு என் நன்றி. எழுபதுகளின் இறுதியில் வாசித்த நாவல்களிலொன்று 'சுமைகள்'. அப்பொழுது வீரகேசரி பிரசுரமாக வெளியான நாவல்களில் பலவற்றை வாசித்திருக்கின்றேன். அ.பாலமனோகரனின் 'நிலக்கிளி', வ.ந.இராசரத்தினத்தின் 'கிரெளஞ்ச்ப் பறவைகள்', செங்கை ஆழியானின் 'வாடைக்காற்று' , கோகிலம் சுப்பையாவின் 'தூரத்துப் பச்சை', தெளிவத்தை ஜோசப்பின் 'காலங்கள்  சாவதில்லை', சொக்கனின் 'செல்லும் வழி இருட்டு' , கதைக்கனிகள் சிறுகதைத்தொகுப்பு ஆகியவை அவற்றுள் அடங்கும். 

கவிதை: வீரியம் குன்றாத விண்மீன்கள்! - வ.ந.கிரிதரன் -

வேட்டைநாய்கள் காத்திருப்பதைப் போல்  காத்திருப்பார்கள்.  காத்திருக்கும் காலத்தில்  காலத்தை ஓட்டியது தவிர வேறென்ன செய்தார்கள்? விருது பற்றிய அ...