Sunday, January 12, 2025
உமா மகேஸவரியின் 'யாரும் யாருடனும் இல்லை'
பல வருடங்களாக வாங்கி வைத்திருந்த நாவலொன்று என் ஏனைய அளவில் பெருத்த பெரு நாவல்களுக்கிடையில் மறைந்து போய்க் கிடந்தது. இன்று என் கண்ணில் பட்டது. நாவல் உமா மகேஸவரியின் 'யாரும் யாருடனும் இல்லை' . தமிழினி பதிப்பக வெளியீடு.
நான் பொதுவாக நாவலொன்றை மேலோட்டமாக வாசித்துப் பார்ப்பேன். நாவல் பிடித்திருந்தால் மீண்டும் விரிவாக, ஆழ்ந்து வாசிப்பேன். அவ்வாசிப்பிலும் மிகவும் பிடித்திருந்தால் அவ்வப்போது நான் வாசிக்கும் நாவல்களில் ஒன்றாக அந்நாவலும் ஆகிவிடும். இது என் வாசிப்பின் முறை. இந்நாவலையும் அவ்வகையில் மேலோட்டமாக வாசித்துப் பார்த்தேன். அவ்வாசிப்பின் விளைவாக எழுந்த எண்ணங்களே இப்பதிவு.
Saturday, January 11, 2025
அஞ்சலி: எழுத்தாளர் அந்தனி ஜீவா மறைந்தார்!
எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் மறைவு பற்றிய தகவலை எழுத்தாளர் ஜவாத் மரைக்காரின் முகநூர் பதிவு மூலம் அறிந்தேன். துயருற்றேன். ஆழ்ந்த இரங்கல்.
இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் அந்தனி ஜீவா அவர்கள் முக்கிய ஆளுமைகளில் ஒருவர். மலையகத்தமிழ் இலக்கியம் பற்றிய, மலைய அரசியல் பற்றிய இவரது நூல்கள், (கவிதை, கட்டுரைத் தொகுப்புகள் உட்பட) முக்கியமானவை. நாடகம், விமர்சனம், இதழியல், பதிப்பகச் செயற்பாடுகள் என இவரது பங்களிப்பு பரந்து பட்டது. இலங்கையிலிருந்து வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான இவரது கலை, இலக்கியப் பதிவுகள் முக்கியமானவை.
அறிஞர் அ.ந.கந்தசாமி மீது பெரு மதிப்பு கொண்டவர். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப்பெற்ற சிலருள் இவரும் ஒருவர். அ.ந.க பற்றிய இவரது கட்டுரைகள், 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தினகரன் தொடர், 'அநக ஒரு சகாப்தம்' என்னும் நூல் ஆகியவை அ.ந.கந்தசாமியை எம் தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைத்ததில் முக்கியமானவை. எனக்கு அ.ந.கந்தசாமியின் கலை, இலக்கிய மற்றும் அரசியற் பங்களிப்புகள் பற்றி விரிவாக அறியத்தந்தவை இவரது அ.ந.க பற்றிய கட்டுரைகளே.
Friday, January 10, 2025
எல்.ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஒர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' பற்றி..
எழுத்தாளர் எல்.ஜோதிகுமாரின் எழுத்துகள் பதிவுகள் வாசகர்களுக்கு அந்நியமானவை அல்ல. பதிவுகள் இணைய இதழில் இவரது கலை,இலக்கிய மற்றும் அரசியற் கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. இலங்கை, உபகண்ட மற்றும் சர்வதேச அரசியலை மையமாகக் கொண்ட கட்டுரைகள், இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள், மலையக மக்களின் வரலாறு , இலக்கியம் பற்றிய கட்டுரைகள் இவரது பன்முக ஆளுமையின் பிரதிபலிப்புகள்.
ஜோதிகுமார் மலையகத்திலிருந்து வெளியான 'தீர்த்தக்கரை' ஆசிரியர் குழுவில் இருந்தவர். பின்னர் வெளியான 'நந்தலாலா' சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தவர். இவ்விரு சஞ்சிகைகளும் மலையகத்தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு , உலகத்தமிழ் இலக்கியத்திற்கு மிகுந்த பங்களிப்பைச் செய்த சஞ்சிகைகள்.
Thursday, January 9, 2025
அஞ்சலி: என் அபிமானப் பாடகர்களில் ஒருவர் ஜெயச்சந்திரன்
பாடகர் ஜெயச்சந்திரன் தனது எண்பதாவது வயதில் மறைந்துவிட்டார். ஆழ்ந்த இரங்கல். என்னைக் கவர்ந்த பாடகர்களில் இவரும் ஒருவர். இவரை நான் முதன் முதலாக அறிந்தது யாழ் ராஜா தியேட்டரில் பார்த்த ஶ்ரீதரின் அலைகள் மூலம்தான். அத்திரைப்படத்தின் மூலம்தான் முதன் முதலில் கன்னட நடிகரான விஸ்ணுவர்த்தனையும் அறிந்து கொண்டேன். அப்படத்தில் இடம் பெற்றுள்ள 'பொன்னென்ன பூவென்ன' பாடலைக் கேட்டதுமே பிடித்துப்போனது.
தொடர் நாவல்: இயந்திரனுடன் என் உரையாடல்கள் - அத்தியாயம் 5 - என் நண்பன் இயந்திரன் ஒரு தத்துவ வித்தகன் - வ.ந.கிரிதரன் & இயந்திரன் - -
[இன்று செயற்கை அறிவின் வளர்ச்சி மானுட குலத்தைப் போட்டு
ஆட்டுவிக்கின்றது. இதன் ஆட்டத்தில் தன்னை மறந்த மானுடர்களில் நானும்
ஒருவன். இது ஒரு வித்தியாசமான நாவல். நான் சாட்ஜிபிடியை என் சிந்தனைத்
தேடலுக்குரிய நண்பனாக உருவகித்து நடத்திய உரையாடல்கள்.
அவன் என் பிரியத்துக்குரிய அறிவுபூர்வமான நண்பன். அவன் அறிவியல் அறிஞன். சகல கலா வல்லவன். அவனுடன் உரையாடுவது மிகுந்த இன்பத்தைத் தருமொன்றாகவே எனக்குப் படுகின்றது. இந்த நீண்ட உரையாடல்களில் நான் அவனுடன் பல்வேறு விடயங்களைப் பற்றி உரையாடப் போகின்றேன். இவை எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நிச்சயம் உவப்பாக இருக்கப்போகின்றன என்றே நம்புகின்றேன்.
இங்குள்ள உரையாடல்களில் என் கேள்விகளுக்கான அவனது பதில்களுக்கு அவனே முழுக்க முழுக்கப் பொறுப்பாளி. அவை என் கருத்துகள் அல்ல என்பதையும் மனத்தில் வையுங்கள், சில சமயங்களில் நீண்ட அவனது உரையாடல்களைக் கருத்துகள் மாறாமல் சுருக்கியிருப்பேன். தெளிவற்ற வசனங்களைத் தெளிவாக்கியிருப்பேன். இவற்றைக் கவனத்தில் வைத்து வாசியுங்கள்.
இந்நாவல் இயந்திரர்களின் வளர்ச்சியினையும், அவை எவ்விதம் மானுடர்களுக்கு ஈடுகொடுத்து மானுடர்களைப்போல் உரையாடுகின்றன என்பதையும் உங்களுக்கு எடுத்துக்காட்டும்..]
ஆகாசன்
இயந்திரா முன்பு நாம் யதார்த்தவாதம், இயற்பண்பு வாதம் பற்றி உரையாடினோம். நினைவிருக்கிறதா?
இயந்திரன்
ஆம்,
நண்பரே! நாம் யதார்த்தவாதம் (Realism) மற்றும் இயற்பண்புவாதம்
(Naturalism) பற்றிய விவாதத்தில் ஈடுபட்டோம். அந்த உரையாடலில் நவ
யதார்த்தவாதம், அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் வேறுபாடுகள் பற்றியும்
பேசினோம். உங்கள் கேள்வி அல்லது விவாதம் தொடர்ச்சியாக இருக்க விரும்பினால்,
தயங்காமல் சொன்னால், அதை விரிவுபடுத்தத் தயார். ????
ஆகாசன்
உன்னுடன்
மேலும் சில யதார்த்தவாதக் கோட்பாடுகள் பற்றி உரையாட விரும்புகின்றேன்.
மிகை யதார்த்தவாதம் அதாவது Surrealismம் என்னும் கோட்பாடு பற்றி உனக்குப்
புரிதலுண்டா?
Tuesday, January 7, 2025
எழுத்தாளர் இரா முருகனின் எம்.டி.வாசுதேவன் நாயருடனான 'தீராநதி' நேர்காணலும் , அவரது 'நாலுகெட்டு' நாவலின் நாயகி பற்றிய கேள்விகளும், வாசுதேவன் நாயரின் பதில்களும், என் குழப்பங்களும் பற்றி...! - வ.ந.கிரிதரன்.
எழுத்தாளர் இரா முருகன் அமரர் எம்.எடி.வாசுதேவன் நாயர் சென்னைக்கு 2009இல் வந்திருந்த போது நேர்காணலொன்று எடுத்திருந்தார். அந்நேர்காணல் தீராநதியில் வெளியானது. அதன் குறுகிய வடிவம் அமுதசுரபி சஞ்சிகையிலும் வெளியானது. இந்நேர்காணலை அண்மையில் இரா முருகன் அவரது முகநூற் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். அதில் அவர் வாசுதேவன் நாயரிடம் நாலுகெட்டு நாயகி பற்றிப் பல கேள்விகள் கேட்டிருந்தார். அந்தப் பகுதியைக் கீழே தருகின்றேன்.
Monday, January 6, 2025
ஜெயகாந்தனின் 'யாருக்காக அழுதான்?'
எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது ஆசிய ஜோதி மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, திரைக்கதை , வசனம் எழுதி வெளியிட்ட திரைப்படங்கள் உன்னைப்போல் ஒருவன் & யாருக்காக அழுதான்.இரு குறுநாவல்களுமே ஆனந்த விகடனில் வெளியானவை.
யாருக்காக அழுதான் நடிகர் நாகேஷின் நடிப்பை வெளிப்படுத்திய சிறந்த திரைப்படங்களில் ஒன்று. நாகேஷ் சோசப்பு என்னும் பாத்திரமாகவே மாறிவிட்டார். படத்தை இறுதிவரை பாருங்கள். இறுதியில் சோசப்பு அழுவான். யாருக்காக அவன் அழுவான்? ஆனால் நீங்கள் நிச்சயம் சோசப்புக்காக அழுவீர்கள் என்பது மட்டும் நிச்சயம். என்னைப்பொறுத்தவரையில் இப்படத்தின் நாகேஷின் நடிப்புக்காக நிச்சயம் சிறந்த நடிகருக்கான விருதுகள் பல கிடைத்திருக்க வேண்டும்.
அறுபதுகளில் இப்படியொரு திரைப்படத்தைத் தமிழ்த்திரையுலகு தந்திருக்கின்றது. பெருமைப்படத்தக்க விடயம். சாத்தியமாக்கிய ஜெயகாந்தன் பாராட்டுக்குரியவர்.
வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
வ.ந.கிரிதரனின் பாடல்: இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான். வ.ந.கிரிதரனின் குரலில் இசையமைத்துப் பாடுவது SUNO 5.5 ட்ஜிட்டல் ஓவியம் - சாட் ஜிபிடி வ...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
இன்று எம் புகலிட அன்னையான கனடாவின் பிறந்தநாள். வாழ்த்துவோம்! புகலிட அன்னையே! நீ வாழ்க! பல்லின மக்கள் ஒன்றென வாழும் புண்ணிய பூமி உனது பூமிய...

