Sunday, February 8, 2026
வ.ந.கிரிதரன் பாடல்கள் யு டியூப் சானல்! வரவேற்கின்றோம்!
நண்பர்களே! 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' என்னும் எனது 'யு டியூப் சானலு'க்கு உங்களை வரவேற்கிறேன். செயற்கை நுண்ணறிவை (AI) நாம் அனைவரும் ,பல் துறையில் இருப்பவர்களும், பொது மக்களும் ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த முடியும் என்பதற்கு ஓர் உதாரணம் இந்தச் 'சானல்'.
எனக்கு என் பாடல்களை இசையமைத்துப் பாடுவதைப் பார்க்க விருப்பமாகவிருந்தது. அதைச் சாத்தியமாக்கியுள்ளது செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவின் துணை இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும்? நான் ஓர் இசைக்குழுவின் உதவியை, பாடகர் உட்பட, நாடியிருக்க வேண்டும். அது மிகவும் இலகுவானதொன்றல்ல. அது பெரும்பொருட்செலவை வேண்டி நிற்பது. இவ்விதமானதொரு சூழலில்தான் எனக்கு செயற்கை நுண்ணறிவு உதவிக்கு வந்தது.
Monday, February 2, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
வ.ந.கிரிதரன் பாடல்: நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
இசை & குரல்: SUNO AI ஓவியம்: கூகுள் AI
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
பழம் பெருமை பேசுவதை நிறுத்தார்.
பழைய நூல்களை வாங்கவே மாட்டார்.
சமூகப் பிரிவுகள் வளர்த்தே வாழ்வார்.
சங்கத் தமிழரென்றே பொங்கி எழுவார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நம் தமிழரை நினைத்து விட்டால்
Sunday, February 1, 2026
வ.ந.கிரிதரன் பாடல்: ஏற்றம்மிகு உலகைச் சமைக்கவே சூழலைப் பேணுவோம்!
- இசை & குரல் - SUNO AI ஓவியம்: கூகுள் AI
நீலவண்ணக் கோள் ஒர் அற்புதம்!
காலவெளி தந்த பேர் அதிசயம்!
கண்ணுக்குக் தெரியாத உயிர்கள் எத்தனை!
கண்ணுக்குத் தெரியும் உயிர்கள் எத்தனை!
எண்ணற்ற உயிர்களின் இருப்பிடம் அல்லவா!
கண்ணுங் கருத்துமாகப் பேணுதல் கடமை அல்லவா!
வெறுமை சூழ் பேரண்டத்தில் உயிர் அல்லவா!
சிறுமைப் படுத்தல் தகுமோ முறையோ?
சூழலைப் பேணுவோம். தவறுகளைக் களைவோம்.
ஞாலத்தின் நிலையை மாற்றுவோம். நம் காலக் கடமையல்லவா!
நீலவண்ணக் கோள் ஒர் அற்புதம்!
காலவெளி தந்த பேர் அதிசயம்!
"அம்பிலி மாமே! ஒப மொக்கத கரண்ணே?" - ராஜு அங்கிள் நினைவுகள்!
ராஜு அங்கிளை (அம்மாவின் கடைசிச் சகோதரர்) நினைத்ததும் என் நினைவில் வரும் முக்கிய விடயங்களிலொன்று அவரது 'ரெகோர்ட் பிளேயர் ஸ்டாண்ட்' . மரத்தால் ஆன அழகான 'ரெகோர்ட் பிளேயர்' அமைப்பு அது. அவரை இசைப்பிரியர் என்றும் கூறலாம். மேனாட்டுப்பாடகர்களின் ஒலித்தட்டுகள் ( Records) தொடக்கம் சிங்கள 'பைலாப்' பாடல்களின் ஒலித்தட்டுகள் வரை பல பாடல்கள் அடங்கிய ஒலித்தட்டுகள் அவரிடமிருந்தன. ஜிம் ரீவ்ஸ் (Jim Reeves), எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley), பீட்டில்ஸ் (Beatles) போன்றோரின் ஒலித்தட்டுகள் அவரிடமிருந்தன. அவர் எழுபதுகளின் ஆரம்பத்திலேயே கனடா வந்து விட்டதால் , அது வரை எட்டாக் கனியாகவிருந்த அந்த ரெகோர்ட் பிளேயர் எமக்கும் எட்டும் கனியானது. அதன் பின் அங்குள்ள ஒலித்தட்டுகளை அவ்வப்போது ஒவ்வொன்றாகக் கேட்டு மகிழ்வதுண்டு. அவற்றிலொன்று என்னை மிகவும் கவர்ந்தது. அது ஒரு சிங்களப்பாடல். அதனைப் பாடியவர் யார் என்பது தெரியாது. ஆனால் கேட்ட முதல் தடவையே என்னைக் கவர்ந்துவிட்ட பாடல் அது. அண்மையில்தான் அப்பாடலை யு டியூப்பில் தேடிக் கண்டு பிடித்தேன். அதனைப்பாடியவர் அக்காலகட்டத்தில் புகழ்பெற்ற விளங்கிய சிங்களப்பாடகர் சி.டி.ஃபெர்ணாண்டொ என்று அப்போதுதான் அறிந்துகொண்டேன். அந்தப்பாடல்: "அம்பிலி மாமே! ஒப மொக்கத கரண்ணே?"
கலை, இலக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் ஊடகவியலாளரும் , கலைஞருமான கிருபா கந்தையா!
ஊடகவியலாளரும், கலைஞரும், புகைப்படப்பிடிப்பாளருமான கிருபா கந்தையா அவர்களின் 'தடயத்தார்' 'யு டியூப் சானல்' சத்தமின்றி முக்கியமானதொரு பணியினை ஆற்றி வருகின்றது. 'டொரோண்டோ'வில் நடைபெறும் கலை, இலக்கிய நிகழ்வுகளைக் காணொளிகளாக்கி இந்தத் 'தடயத்தார்' சானலில் பதிவிட்டு வருகின்றார் கிருபா கந்தையா. 'தடயத்தார்' சானல் கலை, இலக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்வதன் மூலம் ஆவணப்படுத்தி வருகின்றது. இது அவ்வளவொன்றும் இலகுவான செயலல்ல. கடும் உழைப்பினையும் , அர்ப்பணிப்பையும் வேண்டுமொரு செயல்.
இது போன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். அது அவசியமானதும் கூட. இதுவரை இவரது இந்தச் சானலைப் பார்க்காதவர்கள் சென்று பாருங்கள். பிடித்திருந்தால் அதைப் பாராட்டுங்கள். அதைச் 'சப்ஸ்கிரைப்' ( Subscribe) செய்யுங்கள். எவ்விதப் பணமும் கொடுக்கத்தேவையில்லை. இவ்விதம் செய்வதன் மூலம் கிருபா கந்தையா அவர்களின் உழைப்பை, ஆரோக்கியமான பணியை நீங்களும் அங்கீகரிக்கின்றீர்கள்.
Friday, January 30, 2026
காலத்தால் அழியாத கானம்: "உண்மை அன்பின் உருவாய் என் முன் வந்தாயே"
'பாக்தாத் திருடன்' திரைப்படத்துக்கு ஒரு முக்கியத்துவமுண்டு. எம்ஜிஆரும், வையந்திமாலாவும் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படம் என்ற முக்கியத்துவம்தான் அது. 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' வரிசையில் அராபியச் சூழலில் பின்னப்பட்ட கதை.
என்னைப்பொறுத்தவரையில் இப்படத்துக்கு இன்னுமொரு முக்கியத்துவமுண்டு. எழுபதுகளில் கொழும்பில் மீள் வெளியீடாக வெளியானபோது இத்திரைப்படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது. ஜெஸிமா திரையரங்காக இருக்க வேண்டும். அதே காலகட்டத்தில் 13ஆவது தடையாக வெளியான 'குலேபகாவலி' அறுபது நாட்களைக் கடந்து ஓடியது.
தமிழில் நூலாக வெளிவந்த முதலாவது சரித்திர நாவலை எழுதிய பெண் எழுத்தாளர் சிவநயனி முகுந்தன்! - வ.ந.கிரிதரன் -
தமிழக எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் 'பாண்டிய நெடுங்காவியம்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதியிருக்கின்றார். மூன்று பாகங்களை உள்ளடக்கிய இந்நாவலின் மூன்று பாகங்களும் வானதி பதிப்பக வெளியீடுகளாக வெளிவந்துள்ளன. முதற் பதிப்பு வெளியான ஆண்டு 2015. இந்நூலின் பின்னட்டையிலும், உள்ளே விமர்சகர் ஒருவரின் திறனாய்விலும் தமிழில் சரித்திர நாவல் எழுதிய முதலாவது பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையா?
2012ற்கு முன்பே இவர் சரித்திர நாவல் அல்லது நாவல் எழுதியிருந்தால் அக்கூற்றினை ஏற்றுக்கொள்ளலாம். அப்படி நடந்த மாதிரித்தெரியவில்லை. உண்மையில் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் சிவநயனி முகுந்தன் தற்போது கனடாவில் வசிக்கின்றார். இவர் ஒரு 626 பக்கங்களைக் கொண்ட சரித்திர நாவலொன்றை எழுதியிருக்கின்றார். இவர் கனடாவில் 'வேல்விழியாள் மறவன்' என்னுமொரு சரித்திர நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். வெளிவந்த ஆண்டு 2012. வெளியிட்ட பதிப்பகம் - 'வித்தக விருட்சம்'. இதன் படி தமிழில் சரித்திர நாவல் எழுதிய பெண் எழுத்தாளர் ஶ்ரீஜா வெங்கடேஷ் அல்லர். பின் யார்? எழுத்தாளர் சிவநயனி முகுந்தனே. [அனுஷா வெங்கடேஷ் என்னும் பெண் பெயரிலும் 'காவிரி மைந்தன்' என்னும் சரித்திர நாவலும், வேறு சில நாவல்களும் வெளியாகியுள்ளன. இவற்றை எழுதியவர் ஆண் எழுத்தாளரான ஆர்.வெங்கடேஷ்]
முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் ஆங்கில மொழிபெயர்ப்பில் பெருந்தொற்றுக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'!
முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் மொழிபெயர்த்துத் தொகுத்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics' . 'டிஸ்கவரி புக் பேலஸ்' பதிப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
