Wednesday, April 15, 2026
பாடகரும் , தொழில் நுட்ப வளர்ச்சியும்!
தமிழ்த்திரைப்படங்களின் ஆரம்பக் காலகட்டத்தில் பாடும் திறமை மிக்கவர்களே கதாநாயகர்களாக, கதாநாயகிகளாக நடிக்க முடியும் நிலை இருந்தது. அதனை மாற்றியது பின்னணிக் குரல் கொடுத்துப் பாடும் 'டப்பிங்' தொழில் நுட்பம். இன்று செயற்கைத் தொழில் நுட்பத்தின் வருகையுடன் இந்நிலையும் மாறுதலடைந்து வருகின்றது. இன்று செயற்கை நுண்ணறிவால் இசையமைத்துப் பாடவும் முடிகின்றது. ஒருவரின் குரலில் பாடும் திறமையும் அதற்குள்ளது.
நடிகர்களின் குரல்களிலேயே பாடும் நிலையினை இலகுவாக்கி விட்டது செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம். மேலும் சிலரின் குரல் நன்றாகவிருக்கும். ஆனால் பாடும் திறமை இருக்காது. சிலருக்குப் பாடும் திறமை இருக்கும், ஆனால் அவர்கள்தம் குரல் சிறப்பாக இருக்காது. இந்நிலையில் சிறந்த குரல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைப் பாவித்துப் பாடல்களைப் பாட வைக்கும் நிலை உருவாகியுள்ளது.
Tuesday, April 14, 2026
வ.ந.கிரிதரனின் குரலில் - இசை & குரல் - SUNO AI. ஓவியம் - கூகுள் chatGPT
வ.ந.கிரிதரனின் பாடல் - இருப்பைப் புரிந்து கொள்ளல்!
எனது , வ.ந.கிரிதரனின் குரலில் - இசை & குரல் - SUNO AI. ஓவியம் - கூகுள் chatGPT
விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.
இருக்கும் இருப்பைப் புரிந்து கொள்வது
இன்பம் மிக்கது. ஊக்கம் தருவது.
இருப்பை அறிவதும் அறியும் பொருட்டு
இருப்பது என்றால் அதுபோதும் எனக்கு.
விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.
இருப்பை அறிந்து கொள்வதற்கு நம்
இருப்பின் காலம் போதவே போதா.
இருந்தும் இருப்பை முழுவதும் அறிய
இருக்கும் வரையில் முயற்சி செய்வேன்.
விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.
என்னை, உலகை, உயிரை அறிய
எவ்வழி என்றாலும் முயற்சி செய்வேன்.
அறிவியல் நூல்கள் அறிஞர் கருத்துகள்
அனைத்தையும் துணைக்கு அழைத்தே இருப்பேன்.
விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.
பிணக்கு! - வ.ந.கிரிதரன் -
அவ்வப்போது நான் CMR வானொலியின் இரவுத் தமிழ்ச் சேவையைக் கேட்பதுண்டு. குறிப்பாக ஒலிபரப்பாளர் செந்தில்நாதனின் 'சொல்லாடல்' நிகழ்ச்சியை, சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது கேட்பதுண்டு. இரவு 11 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரையில் நடைபெறும் நிகழ்ச்சி. ஆரம்பத்தில் ஒரு சொல்லைக் குறிப்பிடுவார். தொடர்ந்து வரும் நேயர்கள் கேட்கும் கேள்விகள், அவற்றுக்கான அவர்தம் எதிர்வினைகளின் அடிப்படையில் இறுதியில் நேயர்கள் பதிலைக் கண்டு பிடிப்பார்கள். சில சமயங்களில் மறக்க முடியாத சொற்களில் ஒன்றாக அச்சொல் அமைந்து விடும். அவ்விதமானதொரு சொல்லான கவரிமா (கவரிமான் என்று தவறாக அழைக்கப்படும் சொல்) பற்றிச் சொல்லாடலில் வந்ததுபற்றியொரு பதிவினை முன்னர் இட்டிருந்தேன். அதுபோல் இன்னுமொரு சொல்லும் மறக்க முடியாத வகையில் சொல்லாடலை நினைவில் நிறுத்தி விட்டது. அது பற்றிய பதிவு இது.
அது ஒரு வெள்ளி இரவு. நேரம் 11.52 . அடடா 'சொல்லாடல்' நடந்து கொண்டிருக்குமே என்ற எண்ணம் தோன்றவே 101.3 FM அலைவரிசைக்குச் சென்றால் சொல்லாடல் நடந்து கொண்டிருந்தது. நேரம் 11.54. இன்னும் நேயர்களில் எவரும் விடையைக் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் நேயர்கள் சொல்லை நெருங்கி விட்டிருந்தார்கள் என்பதைச் செந்தில்நாதனின் எதிர்வினைகளிலிருந்து அறிய முடிந்தது.
SURRENDERING MYSELF AT THE HANDS OF WINTER - V.N.Giritharan (குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -) | Rendered in English by Latha Ramakrishnan -
ஆஸ்திரியாவைத் தளமாகக்கொண்டு வெளியாகும் சஞ்சிகை Words & World இதன் இவ்வாண்டுக்கான முதலாவது இதழில் எனது கவிதையான 'குளிர்காலத்துடனான என் சரணாகதி!' யின் தமிழ் வடிவமும், எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியாகியுள்ளன. அதற்கான இணைய இணைப்பு -
குளிர்காலத்துடனான என் சரணாகதி! - வ.ந.கிரிதரன் -
குளிர்காலம் விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்றது.
கனடாவில் ஆண்டுகள் பலவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
இன்னும் இந்தக் குளிர்காலம் மீதான
என் வெறுப்பு குறைந்தபாடாகவில்லை.
வழக்கம்போல் குளிர்காலம் பற்றிய நினைவுகள்
வந்தவுடன், கூடவே அதனுடன் இணைந்து
வரும் பனி, உறைபனி எல்லாமே நினைவுக்கு
வந்து விடுகின்றன.
Monday, April 13, 2026
எழுத்தாளர் த.சிவதாசனின் 'காலம் 63' கட்டுரை 'கனடா நாற்பது'வும், வரலாற்று இருட்டடிப்பும்! - வ.ந.கிரிதரன் -
கனடாத் தமிழ் எழுத்தாளர்களில் சிலர் ஆய்வாளர்கள் அவதாரம் எடுத்ததும் வரலாற்றை மூடி மறைக்கும் வேலையைச் செய்யத் தொடங்கி விடுவர். எழுத்தாளர் ரதன் மகரந்தன் என்னும் பெயரில் சுபமங்களா சஞ்சிகையில் 'கனடாவில் தமிழ்' என்னுமொரு கட்டுரையை எழுதியபோது அக்காலகட்டத்தில் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்துக்கொண்டிருந்த பலரைத் தவிர்த்திருந்தார். அது பலத்த வாக்கு வாதங்களை ஏற்படுத்தியது. அதற்குப் பதிலாக எழுத்தாளர் ஒருவர் , ப.ஶ்ரீகாந்தனாக இருக்க வேண்டும், வாசகர் கடிதம் எழுதி அதனையும் சுபமங்களா வெளியிட்டிருந்தது.
Saturday, April 11, 2026
அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றிய குறிப்புகள்! - வ.ந,கிரிதரன் -
[காலம்' செல்வத்தின் ஏற்பாட்டில் இன்று டொரோண்டோ, கனடாவில் நடந்த 'வாழும் தமிழ் நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் ' 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூல் பற்றி ,நேரக்கட்டுப்பாடு காரணமாக நான் கூறவிருந்த் எல்லா விடயங்களையும் என்னால் கூற முடியவில்லை. அதனால் கூற விருந்த ஏனைய விடயங்களையும் ஓரளவு முழுமையாக்கி இப்பதிவில் தந்திருக்கின்றேன்.]
அறிவியல் நூல்களின் அவசியம் ஏன்? அறிவை மக்களைச் சென்றடைய, தவறான தகவல்களைத் தடுக்க, அதாவது சரியான தகவல்களை அறிய, அறிவியல் சிந்தனையை வளர்க்க, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த, மூட நம்பிக்கைகளைக் குறைக்க, அரசின் முடிவுகள் சரியாக ,அறிவு பூர்வமாக அமைய, மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்த, சிந்தனையைத் தூண்ட, ஏன் என்று கேள்விகளைக் கேட்கும் ஆற்றலை வளர்க்க, அறிவியல் தொழில் நுட்பத்தை , அதன் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள அறிவியல் கட்டுரைகள் , நூல்கள் எழுதப்பட வேண்டும். அறிவு பகிரப்பட வேண்டும். அதனைச் சாத்தியமாக்குபவை அறிவியல் எழுத்துகள்.
எனக்கு அறிவியல் துறையில் வானியல், வானியற்பியல் மிகவும் பிடிக்கும். என் பால்ய பருவத்தில் , வவுனியாவில், வீட்டு முற்றத்தில் அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்கி, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானைப்பார்த்ததிலிருந்து என் ஆர்வம் தொடங்கியது என்பேன். அக்காலகட்டத்தில் கல்கியில் 'பொன்னியின் செல்வன்' நாவலும் மீண்டும் தொடராக வெளியாகத்தொடங்கியிருந்தது. ஓவியர் வினுவின் அழகான ஓவியங்களுடன் வெளியான நாவலில் அப்போது அடிக்கடி வானில் தோன்றிக்கொண்டிருந்த தூமகேது பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்பொழுதுதான் அவ்விதம் குறிப்பிடப்பட்டிருப்பது வால்வெள்ளி என்பதை அறிந்தேன். நாவல் நடைபெறும் காலத்தில் நடக்கப்போகும் துர்ச்சம்பவமொன்றினை எதிர்வு கூறுவதாகத் தூமகேது சித்திரிக்கப்பட்டிருக்கும். அதே காலகட்டத்தில் கல்கியில் வாண்டுமாமாவின் 'ஓநாய்க்கோட்டை' என்னும் சித்திரக்கதையொன்றும் வெளியாகிக்கொண்டிருந்தது.அதில் வரும் தூமகேது பாத்திரமும் பயங்கரமானதோர் ஆளுமையாகச் சித்திரிக்கப்பட்டிருந்த பாத்திரம். அதனால் தூமகேது என்னும் பெயரும் எம்மைப் பயப்படுத்துமொரு பெயராக அக்காலகட்டத்திலிருந்தது. அத்துடன் அக்காலகட்டத்தில் அடிவானில் தென்பட்டுக்கொண்டிருந்த வால்வெள்ளியும் நினைவுக்கு வருகின்றது.
| அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணன் |
அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் 'ஒளியிலிருந்து இருளுக்கு' நூலின் 'என்னுரையில்' தன் சிறுவயதில் பூதக்கண்ணாடியுடன் அலைந்து திரிந்த அனுபவத்தை விபரித்திருப்பார். அதை வாசித்தபோது எனக்குப் பழைய நினைவுகள் மீள் எழுந்தன. கலகி சஞ்சிகையின் அளவில் சிறுவர்களுக்கான அறிவியல் புத்தகமொன்று 'நீங்களும் விஞ்ஞானியாகலாம்' என்னும் பெயரில் அல்லது அது போன்றதொரு பெயரில் வெளியாகியிருந்தது. யாழ் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்த நூல்களிலொன்று. பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவில் திரியும் சிறுவனொருவனின் சித்திரம் போன்ற சித்திரங்களுடன் வெளியாகியிருந்த அந்த நூலை அடிக்கடி எடுத்து வாசித்திருக்கின்றேன். மிகவும் எளிய தமிழ்லில் எழுதப்பட்டிருந்த நூலும், சித்திரங்களும் நெஞ்சில் கிளர்ச்சியை ஏற்படுத்தின. அதனைக் கலைக்கதிர் நிறுவனம் வெளியிட்டிருக்கலாம். சரியாக நினைவிலில்லை. அதை வாசித்து விட்டு , வெங்கட்ரமணன் போல் நானும் பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவு முழுவதும், என்னை ஓர் அறிவியல் அறிஞராகக் கருதிக்கொண்டு அலைந்துதிரிந்தேன்.
Friday, April 10, 2026
எழுத்தாளர் கற்சுறாவின் 'நூலகம்' பற்றிய குற்றச்சாட்டுகள்...
![]() |
| எழுத்தாளர் கற்சுறா |
அண்மையில் முகநூலில் எழுத்தாளர் கற்சுறா நூலகம் பற்றியும், 'நூலக' அறக்கட்டளையுடன் இணைந்து செயற்படும் சஜீவன் பற்றியும் , சஜீவனின் கிளப் ஹவுஸ்ஸில் நண்பர் பரதனுடன் நடந்த உரையாடல் பற்றியுமொரு பதிவிட்டிருந்தார். அதில் அவர் பின்வரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இதுவரை தானும், தன் நண்பர்களும் நூலகத்துக்கு அனுப்பிய பணத்தைத் திருப்பி அனுப்பும்படியும், நூலகத்தில் உள்ள தனது நூல்கள், சஞ்சிகைகளை நீக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார்.
நூல் பெயர்: குற்றமும் தண்டனையும் (பெங்குயின் கிளாசிக்ஸ் டீலக்ஸ் பதிப்பு) ஆசிரியர்: ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி
[Disclosure: This post contains Amazon affiliate links. As an Amazon Associate, I earn from qualifying purchases.] [செயற்கை நுண்ணறிவு தயாரித...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...




