Thursday, November 19, 2026

கவிஞர் சேரன் என்று அறியப்பட்ட பேராசிரியர் சேரன் மறைந்தார்!





தமிழ் இலக்கிய உலகில் தன் கவிதைகள் மூலம் நன்கறியப்பட்டவர் கவிஞர் சேரன். சிறிது காலமாகவே உடல் நிலை பாதிப்புற்றிருந்த கவிஞர் சேரன் மறைந்த தகவலை அவரது  சகோதரி அவ்வை விக்கினேஸ்வரன் முகநூலில் பகிர்ந்திருந்தார்.  அவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சேரன் கவிஞர்  மஹாகவியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.  கனடா, யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற சேரன் , பல வருடங்களாகக் கனடாவின் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல், மானுடவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். சட்டத்தரணியான ஷேர்ரி எய்கனை மணந்த இவர் அஞ்சானி, எல்லான் என்னும் இரு குழந்தைகளுக்குத் தந்தை.

Tuesday, November 17, 2026

அருண்மொழிவர்மனின் 'துணைக்கோடல்' நேர்காணல்களின் தொகுப்பு பற்றிய பார்வை! - வ.ந.கிரிதரன் -


அண்மையில் டொராண்டோவில் வெளியான எழுத்தாளர் அருண்மொழிவர்மனின் நூல்களிலொன்று 'துணைக்கோடல்'.  ஆளுமைகள் பலருடனான  அருண்மொழிவர்மன் நடத்திய நேர்காணல்களின் தொகுப்பு. நூல்  ஆளுமைகளின் தோற்றங்களை வெளிப்படுத்தும் கோட்டோவியங்களுடன் , சிறப்பாக வடிவமைக்கப்பட்டு 'தாய்வீடு' பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

நூலின் தலைப்பு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.  ஆளுமைகள் பலரின் ஆளுமைகளைப் பல்வேறு கோணங்களில் அறிந்திட எம் சிந்தனை விருத்திக்கு அவற்றைத் துணையாகக் கொள்ளக்கூடிய நேர்காணல்களை உ ள்ளடக்கிய நூலுக்கு மிகவும் பொருத்தமான பெயர். 

Monday, November 16, 2026

வ.ந.கிரிதரனின் பாடல் வரிகள்: சிந்தனை! வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5


வ.ந.கிரிதரனின் பாடல் வரிகள்: சிந்தனை! வ.ந.கிரிதரனின் குரலில் இசைத்துப் பாடுவது SUNO 5.5 ஓவியம் - ஜெமினி AI
சிந்தனை மட்டும் இல்லை என்றால் இத்தரையில் வாழ்வுக்கு அர்த்தம் உண்டா? இருப்புப் பற்றிய கேள்விகள் எத்தனை? இதற்கெல்லாம் அர்த்தம் எதுவும் உண்டா? சிந்தித்துப் பார்க்கின்றேன். சிந்தித்துப் பார்க்கின்றேன். சிந்தனைக்கு எட்டாத தொலைவில் புரிதல்கள். முப்பரிமாணச் சிறைக்குள் இருந்து கொண்டே எப்பொழுதும் சிந்தித்துப் பார்க்கின்றேன் ஆனாலும் தேடலுக்கு விடையெதுவும் இல்லை இதுவரை. தேடலை அதற்காக நிறுத்தவே மாட்டேன்.

Sunday, November 15, 2026

காலத்தால் அழியாத கானம்: 'காற்றினிலே வரும் கீதம்'


கல்கி அதிபர் சதாசிவத்தின் தயாரிப்பில், எழுத்தாளர் கல்கியின் திரைக்கதையில்  இசையமைப்பாளர்  எஸ்.வி. வெங்கட்ராமனின் இசையில், எல்லிஸ் ஆர். டங்கனின் இயக்கத்தில் வெளியாகிப் பெரு வெற்றி பெற்ற திரைப்படம் 'மீரா'.  திரையில் மீராவாக நடித்திருப்பவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'மீரா' திரைப்படத்தில்  21 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

'மீரா' திரைப்படப் பாடல்கள் எல்லாமே மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. அவற்றிலொன்றுதான் 'காற்றினிலே வரும் கீதம்' என்னும் காலத்தால் அழியாத இந்தக் கானம். இப்பாடல் வரிகளை எழுதியிருப்பவர் எழுத்தாளர் கல்கி.

'மீரா' திரைப்படத்துடன் தன் நடிப்புலக வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டார் எம்.எஸ்.சுப்புலட்சுமி.

சுருட்டுச் சுப்பர் பாடுகின்றார்: "என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கை அணைக்க"


சுருட்டுச் சுப்பருக்கும், அவரது மனைவி பொன்னம்மா ஆச்சிக்குமிடையில் சிறு வாக்குவாதம். அவர்கள் 50  வருடங்களுக்கும் அதிகமாக ஒன்றாகம் திருமணம் செய்து வாழும் தம்பதி. அவ்வப்போது இவ்விதமான வாக்குவாதங்கள் ஏற்படுவதுண்டு. இப்பொழுது மனம் வாடி நிற்கும் பொன்னம்மா ஆச்சியைத்  தேற்றுவதற்காக  அவரை மெல்லமாக அணைத்துச் சுருட்டுச் சுப்பர் பாடுகின்றார்:

"என்னை விட்டால் யாருமில்லை
கண்மணியே உன் கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரெதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு"

Friday, November 13, 2026

முகநூல் முகமூடிகளே! - வ.ந.கிரிதரன் -






முட்டி மோதுகின்றார் முகநூலில்.
முகமூடிகள் அணிந்து வந்தும் 
முட்டி மோதுகின்றார்.
முகமூடி அணிந்தால் 
முகத்தை மறைக்கலாம் மூடர்களே!
மனத்தை மறைக்க முடியாது.
மதிகெட்ட மூடர்களால் நிறைந்து கிடக்கின்றது
முகநூல்.
முட்டாள்களுக்குக் கருத்துச் சுதந்திரம்
கசக்கும் பாகற்காய்.
கசக்கும் பாகற்காய் 
உடல் நலத்துக்கு நன்மை தரும்.
உள நலத்துக்கும்தான்.
மூடர் இவர் இதை அறியார்.
மூடர்களே! உங்களுக்கு என் 
முகநூற் பக்கத்தில் இடமில்லை.
முகநூலில் முகங்காட்டி வாருங்கள்.
முகம் மலர்ந்து வரவேற்பேன்.
மாற்றுக் கருத்துகளை
மனம் மகிழ்ந்து ஏற்பேன்.
முகமூடியில் வந்து துள்ளிக் குதித்தால்
மூடர்களே! உங்களுக்கு என்
முகநூலில் இடமில்லை.
முகம் மறைத்து 
மன வக்கிரம் காட்டுவதற்கு என்
முகநூல் நீங்கள் விளையாடும்
களமல்ல. உம் 
களத்தில் புகுந்து விளையாடுங்கள். என்
களத்தில் அல்ல.

சுருட்டுச் சுப்பர் பாடுகின்றார்: "வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது"



முகநூலில் நாளும் பொழுதும் வெளியாகும் இழப்புச் செய்திகளால் சுருட்டுச் சுப்பருக்கு இப்பொழுதெல்லாம் சுடலை ஞானம் வந்து விட்டது.

சுருட்டுச் சுப்பருக்கு இவ்விதமான சமயங்களில் துணை வருவது கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள்தாம். போத்தல் பனங்கள்ளை அடித்துக்கொண்டு, சுருட்டை ஊதிப் புகையை விட்டவாறு பாடுகின்றார்:
"வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?"
[மது அருந்துதல், புகை பிடித்தல் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்]

அ.செ.மு.வின் 'அடைக்கலக் குருவிகள்'

எழுத்தாளர் அ.செ.முருகானந்தனின் சிறுகதை இது.  'அடைக்கலக் குருவிகள்' என்பது தலைப்பு. 9.1.1949 வெளியான ஈழகேசரி பத்திரிகையிலுள்ளது. இது ...