தமிழ் இலக்கிய உலகில் தன் கவிதைகள் மூலம் நன்கறியப்பட்டவர் கவிஞர் சேரன். சிறிது காலமாகவே உடல் நிலை பாதிப்புற்றிருந்த கவிஞர் சேரன் மறைந்த தகவலை அவரது சகோதரி அவ்வை விக்கினேஸ்வரன் முகநூலில் பகிர்ந்திருந்தார். அவர் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சேரன் கவிஞர் மஹாகவியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கனடா, யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற சேரன் , பல வருடங்களாகக் கனடாவின் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல், மானுடவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றியவர். சட்டத்தரணியான ஷேர்ரி எய்கனை மணந்த இவர் அஞ்சானி, எல்லான் என்னும் இரு குழந்தைகளுக்குத் தந்தை.



.png)
