Monday, May 26, 2025

எழுநா பதிப்பகம் வெளியிட்ட மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' (1621 - 1948)


நண்பரும்,கட்டடக்கலைஞருமான மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு'  (1621 - 1948) என்னும்  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு நூல் எழுநா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. இது பற்றிய நண்பரின் முகநூற் பதிவு கீழே:

"இலங்கையில் இந்நூலின் விலை 4,800 ரூபா. இலங்கைக்கு வெளியே தேவைப்படுவோர் பதிவிலுள்ள இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். எழுநாவின் மற்றுமொரு பதிப்பாக இ.மயூரநாதன் அவர்களின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு' எனும் நூலினை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.  

தொடர்புகளுக்கு : இல:63, சேர்.பொன்.இராமநாதன் வீதி, கலட்டிச் சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.  |  +94 77 797 5029 "

 கட்டடக்கலைஞர் மயூரநாதன்

வாழ்த்துகள் மயூரநாதனுக்கும், எழுநா பதிப்பகத்திற்கும்.

Sunday, May 25, 2025

'டொரோண்டோ'க் காட்சி!


'டொரொண்டோ'  நகரை ஊடறுத்துச் செல்லும் உயர்த்தப்பட்ட , 'கார்டினர்' நெடுஞ்சாலையூடு செல்கையில் , என் மூத்த மகள் தமயந்தி எடுத்த புகைப்படம். இங்கு தெரிவது உலகப்புகழ் பெற்ற சி.என்.கோபுரம் (CN Tower). அதனருகில் தெரிவது ஆரம்பத்தில் 'ஸ்கை டோம்' (Sky Dome) என்றழைக்கப்பட்டு , தற்போது 'றோயர்ஸ் சென்டர்' (Rogers Centre) என்றழைக்கப்படும் , மூடித்திறக்கும் கூரை கொண்ட 'பேஸ்போல்' விளையாட்டரங்கு.

எடுக்கப்பட்ட இடத்திலிருந்து , கரு முகிற் பின்னணியில், மேல் நோக்கி விரியும் நகரத்துக் காட்சி எனக்குப் பிடித்திருந்தது. அதனால் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன். 'டொரொண்டோ'  நகரை ஊடறுத்துச் செல்லும் உயர்த்தப்பட்ட , 'கார்டினர்' நெடுஞ்சாலையூடு செல்கையில் , என் மூத்த மகள் எடுத்த புகைப்படம். இங்கு தெரிவது உலகப்புகழ் பெற்ற சி.என்.கோபுரம் (CN Tower). அதனருகில் தெரிவது ஆரம்பத்தில் 'ஸ்கை டோம்' (Sky Dome) என்றழைக்கப்பட்டு , தற்போது 'றோயர்ஸ் சென்டர்' (Rogers Centre) என்றழைக்கப்படும் , மூடித்திறக்கும் கூரை கொண்ட 'பேஸ்போல்' விளையாட்டரங்கு.

எடுக்கப்பட்ட இடத்திலிருந்து , கரு முகிற் பின்னணியில், மேல் நோக்கி விரியும் நகரத்துக் காட்சி எனக்குப் பிடித்திருந்தது. அதனால் இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.

அஞ்சலி: மறக்க முடியாத பேராசிரியர் நிமால் டி சில்வா!


பேராசிரியர் நிமால் டி சில்வா மறைந்த செய்தியினை என்னுடன் கட்டடக்கலை படித்த சக கட்டடக்கலை மாணவர்கள் அறியத்தந்திருந்தனர்.  ஆழ்ந்த இரங்கல். இவரை ஒரு விதத்தில் மறக்க முடியாது. அமைதியானவர். எப்போதும் மெல்லிய புன்னகையுடன் காணப்படுபவர். அன்பாக உரையாடுபவர். பாரம்பர்யக் கட்டடக்கலை என்னும் பாடத்தை எமக்குப் படிப்பித்தவர் இவர். நான் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு ஆய்வு நூலை எழுதுவதற்கு  இவரும் ஒரு காரணம்.

இவர் றோலன்ட்  சில்வா என்பவரின் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு என்னும் கட்டுரையை அறிமுகப்படுத்தியபோது அது என்னைப் பிரமிக்க வைத்தது. அநுராதபுர நகரம் பெளத்தர்களின் புனித நகர். இலங்கையின் ஆரம்ப ராஜதானிகளில் ஒன்று. பல புகழ்பெற்ற தாதுகோபங்களை உள்ளடக்கிய நகர். யாழ்தேவியில் கொழும்பு செல்லும் எவரும் அநுராதபுர நகரின் தாதுகோபங்களைக் காணாமல் செல்ல முடியாது. ரொலனட் டி சில்வாவின் ஆய்வின்படி பண்டைய அநுராதபுர நகரமானது நடுவில் சந்தையையும், நகரைச் சுற்றி வட்ட ஒழுங்கில் தாதுகோபங்களையும் கொண்டதாக விளங்கியது. என் கண் முன்னால் பண்டைய அநுராதபுர நகரம் விரிந்து பிரமிப்பைத்தந்தது.

பெளத்தர்களின் கட்டக்கலையில் வட்டம் முக்கிய பங்கினை ஆற்றுமொன்று. தாதுகோபங்கள் வட்ட வடிவமானவை. அது போல் நகரங்களின் நகர அமைப்பிலும் வட்ட வடிவம் ஆதிக்கம் செலுத்தியதை ரோரல்ன் சில்வாவின் அநுராதபுர நகர் அமைப்பு பற்றிய கட்டுரை புலப்படுத்தும். மாறாக, இந்துக்கள் கட்டடக்கலையில் சதுர (அல்லது செவ்வகம்) வடிவம் ஆதிக்கம் செலுததுவதை அவதானிக்கலாம்.

என் எழுத்தார்வத்தை ஊக்குவித்தவர் ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கம்! - வ.ந.கிரிதரன் -


- இன்று பாரிஸில் ஊடகவியலாளர் எஸ்.கே.ராஜென் ஏற்பாட்டில் நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் 'ஈழநாடு' எஸ்.கே. காசிலிங்கம் அவர்களின் அமுத விழாவினையொட்டி வெளியான மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை. -


என்னால் ஒருபோதுமே ஊடகவியலாளர் எஸ்.கே.காசிலிங்கத்தை மறக்க முடியாது. ஒரு வகையில் என் எழுத்துலக வாழ்க்கைக்குச் சுழி போட்டது ஈழநாடு மாணவர் மலர் என்றால், அதற்குக் காரணமானவர் அப்போது மாணவர் மலருக்குப் பொறுப்பாக் இருந்த 'காசி' அவர்கள்.  அண்மைக்காலம் வரையில் அவரைக் காசி என்னும் பெயரிலேயே அறிந்து வைத்திருந்தேன். எஸ்.கே.காசிலிங்கம்தான் அவர் என்பதை அறிந்திருக்கவில்லை.

Thursday, May 22, 2025

இதய மருத்துவர் இராமசாமியின் ஆரோக்கியமான ஆலோசனைகள்!


இது என் மருத்துவ ஆலோசனை அல்ல. என் கருத்து மட்டுமே. 

மருத்துவர் இராமசாமியின் ((Dr. ramasamy) அறிவுரைகளை உள்ளடக்கிய காணொளிகளை நான் பார்ப்பவன். இவரது இதய நோய் சம்பந்தமான அறிவுரைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. மிகவும் ஆரோக்கியமான ஆலோசனைகளை வழங்கும் மருத்துவர்களில் ஒருவராக இவரை நான் அடையாளம் காண்கின்றேன். 

இருதய மருத்துவர்கள் பலர் கண்ணை மூடிக்கொண்டு பைபாஸ் சர்ஜரி, ஸ்டெண்ட் பொருத்துவதைப் பரிந்துரை செய்கின்றார்கள். இதயம் நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு, இரத்த ஓட்டம் நன்கு ஓடும் நிலையிலுள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் பலர் ஹார்ட் அட்டாக் வருவதைத் தடுப்பதற்காக பை பாஸ், ஸ்டென்ட்டைப் பரிந்துரை செய்வது தவறானது என்பதை இக்காணொளி மூலம் அறிய முடிந்தது. 

Saturday, May 17, 2025

அஞ்சலி: நாட்டியத்தாரகை 'குச்சுப்பிடி' ரங்கா விவேகானந்தன் ஆர்ஜண்டினாவில் மறைவு!


                                                                         * புகைப்படம் - India Sublime Arts

நாட்டியத்தாரகை ரங்கா விவேகானந்தன் அவ்ர்களின் மறைவை முகநூல் தாங்கி வந்தது.  ஆழ்ந்த இரங்கல். எமக்கு பரதநாட்டியம் என்றால் நாட்டியப் பேரொளி பத்மினி நினைவுக்கு வருவார்.  வையந்திமாலா நினைவுக்கு வருவார். குமாரி கமலா நினைவுக்கு வருவார். பத்மா சுப்பிரமணியம் நினைவுக்கு வருவார். இவர்கள் எல்லாரும்  அறுபதுகளில், எழுபதுகளில் நாடறிந்த நாட்டியத் தாரகைகள்.  இவர்களைப்போல் சிலரே இலங்கையில் அறியப்பட்டிருருந்தார்கள். அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் 'குச்சுப்பிடி' ரங்கா விவேகானந்தன். இவர் புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் சகோதரி.  இவரது சகோதரி கோகிலா வரதீஸ்வரன் கனடாவில் வசித்து வருகின்றார். ரங்கா விவேகானந்தன் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர்

Friday, May 16, 2025

வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' - திருத்திய இரண்டாம் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பு


வ.ந.கிரிதரனின் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' -  திருத்திய இரண்டாம் மின்னூற் பதிப்பு அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது.  இதன் பிடிஃஃப் கோப்பினை இணையக் காப்பகத்திலிருந்து பதிவிறக்கி வாசிக்கலாம். இணைப்புகள் இறுதியில் தரப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதித்தலைநகர் நல்லூர். நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு எவ்வாறிருந்திருக்கும் என்பதை வெளிப்படுத்தும் ஆய்வு நூலிது. வரலாற்றுத் தகவல்கள், இடப்பெயர்கள் மற்றும் பழந்தமிழர்தம் கட்டடக்கலை, நகர அமைப்புக் கோட்பாடுகள் ஆகிவற்றின் அடிப்படையில் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு எவ்வாறிந்திருக்கும் என்பதை வெளிப்படுத்தும் ஆய்வு. இத்துறையில் வெளியாகியுள்ள முதனூல். இது மேலும் பல ஆய்வுகளுக்கு வழி வகுக்கும்.

இதன் முதற் பதிப்பு ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு), மங்கை பதிப்பகம் (கனடா) ஆகியவற்றின் வெளியீடாக 1996இல் வெளியானது. இதன் திருத்திய பதிப்பு தற்போது மின்னூலாக வெளிவருகின்றது.  விரைவில் அச்சு வடிவிலும் வெளிவரவுள்ளது.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.

வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு. இசை & குரல்: AI SUNO  | ஓவியம்: AI வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல. வரலாறு  உற்ப...