"நிலவைப் பிடித்துச் - சிறுகறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதிந்த முகம்,"
நா,பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் நாவலில் நாயகன் அரவிந்தன் நாயகி பூரணியைப்பற்றி எழுதிய கவிதை. நா.பா தனது நாவல்களில் இது போன்ற கவிதை வரிகளை அதிகமாகப் பாவிப்பார். எழுத்தாளர் கல்கியும் பொன்னியின் செல்வனில் இது போன்று தனது கவிதை வரிகளைப் பாவித்திருப்பார். நினைவுக்கு வருகின்றது.
குறிஞ்சி மலரில் வரும் அரவிந்தனின் பூரணி பற்றிய கவிதை வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை.




