Thursday, January 8, 2026
வ.ந.கிரிதரனின் பாடல் -கல்லுண்டாய் நினைவுகள்!
வ.ந.கிரிதரனின் பாடல் -கல்லுண்டாய் நினைவுகள்!
இசை & பாடல் - SUNO AI ஓவியம் - Google AI
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
நகருக்குப் படையெடுப்பர் தொழிலாளர்.
நானும் கூடவே சைக்கிளில் செல்வேன்.
அராலி வடக்கில் நான் வசித்தேன்.
அக்கால நினைவுகள் விரிகின்றன.
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
அராலிப் பாலத்தில் இறால் பிடிப்பர்
அதிகாலையில் தொழில் செய்யும் தொழிலாளர்.
அங்குதான் வழுக்கியாறு கடலுடன் சங்கமிக்கும்.
அதுவோர் அகத்தின் இனிய நினைவு.;
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
தொலைவில் நவாலி ம்ணற் குன்றுகள்.
தவமியற்றும் துறவிகள் போலிருக்கும்.
காற்றிலாடும் பசும் வயல்கள்.
கிளிகளும் கூட்டமாகப் பறக்கும்.
அதிகாலைகளில் , அந்திவேளைகளில்
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.
தந்தை பெரியாரின் பார்வையில் தமிழரும், திராவிடரும், தென்னிந்தியரும்!
Wednesday, January 7, 2026
நூல் அறிமுகம் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 'திரவிடத்தாய்'
நூல் அறிமுகம் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 'திரவிடத்தாய்'
தமிழம் -> திரவிடம் -> திராவிடம்!
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய நூல் 'திரவிடத்தாய்'. இதன் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரன். திராவிடம் என்னும் சொல் தமிழம் என்னும் சொல்லிலிருந்து உருவான சொல் என்பது தேவநேயப் பாவாணரின் கருத்து,. இதனை வலியுறுத்தும் இந்நூல் முக்கியமானது.
திராவிடம் என்று வடக்கு நாட்டவர் தமிழை அழைத்தனர். அதனால்தான் கால்ட்வெல் தமிழிலிருந்து வந்த மொழிகளைத் திராவிட மொழிகள் என்றழைத்தார். அதாவது தமிழ் மொழிகல், தமிழை அடியாகக் கொண்ட மொழிகள். முனைவர் அரியேந்திரன் மொழியியல் அறிஞர் தமிழ் வேர்ச்சொல்லிலிருந்து வடமொழி உட்படப் ஐரோப்பிய மொழிச் சொற்கள் பல தோன்றின என்பதையிட்டு ஆய்வுகள் பல செய்தவர். அவர் பாவாணரின் வழி வந்தவர்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் , திராவிடம் தெக்கணம் பற்றி...
"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! "
இப்பாடல் மனோன்மணீயம் பெ. சுந்தரனார் எழுதிய மனோன்மணீயம் காப்பியத்தில் வரும் தமிழ்த்தெய்வ வணக்கம் என்னும் பாயிரத்தில் வரும் வரிகள். இப்பாடல் தெளிவாகத் தென்னிந்தியாவைத் தெக்கணம் என்றும் , தமிழ் நாட்டைத் திராவிட நல் திருநாடு என்றும் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். இதனால்தான் 1914ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்திலுள்ள தமிழ்ச்சங்கங்கள் பலவற்றில் தமிழ்த்தாய் வாழ்த்தாக இப்பாடல் பாடப்பட்டு வந்தது.
அதனால்தான் தமிழ் மொழிக்காக, அதன் வளர்சசிக்காகத் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்,திராவிடக் கழகத்தினர் திராவிடம் என்னும் சொல்லைத் தமிழகத்தைக் குறிக்கப்பாவித்தனர். திராவிடக் கழகத்தினர் திராவிட் மொழி என்று குறிப்பிட்டது தமிழை. திராவிட நாடு என்று குறிப்பிட்டது தமிழ் நாட்டை.
அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தபோது இப்பாடலைத்தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக்க வேண்டுமென்ற கோரிக்கை பலமாக எழுந்தது. அதை அவர் நிறைவேற்றுவதற்குள் அறிஞர் அண்ணா மறைந்து விட்டார். அதனால்தான் கலைஞர் அதன் பின் ஆட்சிக்கு வந்ததும் அக்கோரிக்கையை நிறைவேற்றினார்.
Tuesday, January 6, 2026
வ ந கிரிதரன் பாடல் காட்சியும் சித்து விளையாட்டும்!
[ வ.ந.கிரிதரன் பாடல்கள் - https://www.youtube.com/@girinav1 - செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள்.]
வ ந கிரிதரன் பாடல் காட்சியும் சித்து விளையாட்டும்!
இசை & குரல் - SUNO AI ஓவியம் - Google AI
கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?
சிந்தையின் சித்து விளையாட்டு என்றால்
விந்தைமிகு விரிஉலகம் அனைத்தும் பொய்மையா?
பொய்மையை உண்மையென எண்ணி இருப்பதே
வையகத்தில் நம்வாழ்வு என்பதும் சரியா?
கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?
Monday, January 5, 2026
இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர் பாலு மகேந்திரா!
இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக இந்திய மத்திய அரசின் தேசிய விருதினை பெற்றவர் பாலு மகேந்திரா! - வ.ந.கி -
இந்தியச் சினிமா உலகில் இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவுக்காக இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர் இவர். இவர் இயக்கத்தில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள் மூன்று தடவைகள் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன. ஆறு தடவைகள் சிறந்த இயக்குநருக்கான பிலிம்ஃபெயர் விருதினைப் பெற்றவர். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இப்பொழுது இவர் யாரென்று அறிந்திருப்பீர்கள். ஆம்! இவர்தான் பாலு மகேந்திரா.
வ.நகிரிதரன் பாடல் - வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு!
வ.நகிரிதரன் பாடல் - வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு!
இசை & குரல் - SUNO AI ஓவியம் - AI
சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.
சதுரங்கத்தில் வெற்றி பெறுவதற்கே
சிந்தித்து நகர்தல் முக்கியமே.
மண்ணில் வெற்றி பெறுவதற்கே.
எண்ணி நகர்தல்; அவசியமே.
சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமிங்கே விளையாட்டே.
முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் ஆங்கில மொழிபெயர்ப்பில் பெருந்தொற்றுக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics'!
முனைவர் கே.எஸ்.சுப்ரமணியன் மொழிபெயர்த்துத் தொகுத்த ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு 'Lockdown Lyrics' . 'டிஸ்கவரி புக் பேலஸ்' பதிப...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...
-
அண்மையில் முகநூலில் என் பதின்ம வயது யாழ் நகரத்துத் திரையரஙகுகள் மற்றும் பார்த்த திரைப்படங்கள் பற்றிய நனவிடை தோய்தலைப் பதிவு செய்திருந்தேன...
-
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in ...


