Thursday, February 22, 2018

இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் , ஒரு பதிவுக்காக..... வ.ந.கிரிதரன் -

வ.ந.கிரிதரன்
இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் , ஒரு பதிவுக்காக, இங்கு தரப்படுகின்றன. பதிவு செய்தல் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட உரிமை. பதிவு செய்தலென்பது விமர்சனமல்ல. இணையத்தில் வலைப்பதிவுகளினூடு, மின்சஞ்சிகைகளினூடு எனப் பல்வேறு வழிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தையும் பதிவு செய்கின்றார்கள். இணையம் தரும் வசதியினைப் பாவித்துப் படைப்புகள் பற்றிய விபரங்களைப் பலருடனும் பகிரிந்துகொள்வதன் மூலம் ஒரு படைப்பாளியின் படைப்புகள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.  அது பயனுள்ளது. ஆக்கபூர்வமானது. படைப்புகள் வாசகர்களைச் சென்றடைவதற்கு இவ்விதமான பதிவுகள் முக்கியமானவை. இன்று காலம் மாறி விட்டது. இணையம் படைப்புகளை உடனுக்குடன் உலகின் சகல மூலைகளுக்கும் கொண்டு செல்கின்றது. மிகுந்த வல்லமை மிக்க ஊடகமான இணையத்தைத் திறனாய்வாளர்கள் மிக அதிக அளவில் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று நினைக்கின்றேன்.

1. தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட, நடத்துகின்ற இணைய சஞ்சிகைகளான திண்ணை, ஆறாந்திணை, அம்பலம், இசங்கமம், கூடல் போன்றவற்றில் எனது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.

2. எழுத்தாளர் பென்னேஸ்வரனால் வெளியிடப்படும் 'வடக்கு வாசல்' சஞ்சிகை சார்பில் வெளியான 'இலக்கிய மலர் 2008' இல் வெளியான கட்டுரை: இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்!  - வ.ந.கிரிதரன்
3. ஊடகவியலாளர் செந்தில்நாதனின் ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலருக்காக எழுதிய கட்டுரை: 'கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!'

4. தமிழகத்திலிருந்து வெளியாகும் 'துளிர்' இதழுக்காகப் பல வருடங்களுக்கு முன்னர் அறிவியல் கட்டுரை கேட்டிருந்தார்கள். அனுப்பியிருந்தேன். இதழில் வெளிவந்ததாகக் கூறியிருந்தார்கள். ஆனால், அந்த இதழ் என் கைகளுக்கு வந்து சேரவில்லை. எனவே என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை.

4. கணையாழியில் வெளியான எனது படைப்புகள்:

அ. கணையாழி பெப்ருவரி 1997 - அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் - வ.ந.கிரிதரன் (இதே தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் ஏறகனவே எனது கட்டுரையொன்று வெளிவந்திருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரை அதே பொருளை மையமாக வைத்துப் புதிதாக எழுதப்பட்ட கட்டுரை.)

ஆ. கணையாழி ஆகஸ்ட் 97 - சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன். (சூழல் பற்றிய கட்டுரை).

இ. கணையாழி ஜூன் 1996 - பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும் - வ.ந.கிரிதரன்

ஈ. 'சொந்தக்காரன்' (சிறுகதை) - வ.ந.கிரிதரன் (கணையாழி வெளியிட்ட கனடாச் சிறப்பிதழில் வெளியான கதை)

உ. ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்ஆர்தர் சி.கிளார்க்: நம்பிக்கை, தெளிவு, அறிவுபூர்வமான கற்பனை வளம் - வ.ந.கிரிதரன்ஆர்தர் சி.கிளார்க் (கணையாழி மே 2012)

ஊ. 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு .... வ.ந.கிரிதரன் -  கணையாழிக் கட்டுரை தொகுப்பு பற்றிய எனது விமர்சனக் கட்டுரை - செப்டம்பர் 1997 கணையாழி.

*சூழலைப் பாதுப்பதன் அவசியமும், மனித குலத்தின் வளர்ச்சியும் - வ.ந.கிரிதரன் பற்றி எழுத்தாளர் ஜெஃபிர்தெளஸ் ராஜகுமாரன் (கோவை) எழுதிய வாசகர் கருத்து (கணையாழி செப்டம்பர் 1997 இதழின்  வாசகர் எதிரொலியில் வெளியானது): 'சூழலைப் பாதுகாப்பதன் அவசியமும் மனித குலத்தின் வளர்ச்சியும்' என்ற வ.ந.கிரிதரனின் கட்டுரை சிந்தனையை கிளறிவிட்ச்க் கூடிய வகையில்  அமைந்துள்ள சிறந்த கட்டுரை.  பச்சை வீடு விளைவு பற்றியும், அமில மழையின் அபாயம் குறித்தும் எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்? மிக அதிக அளவில் காற்று, தூய்மைக்கேடு அடைந்து விடுகிறது இப்போது.  வாகனங்களின் புகை, கண்டதையும் போட்டு எரிப்பது, விபத்துக்களில் எரிவது, குற்றங்கள் செய்யும்போது எரிப்பது, அடிக்கடி  பெட்ரோல் கிணறுகள் பற்றியெரிவது...  இவையெல்லாம் கட்டுப்படுத்தாதவரை சூழலைப் பாதுகாக்கவே முடியாது. பிணங்களை எரியூட்டுவதைக்கூட நிறுத்தியாக வேண்டும்.  இனி புதைப்பதால்  மண்ணுக்கு உரமாகும்.  காற்றுத் தூய்மைக் கேட்டையும் தடுக்கலாம். அரசுதான் இதை உணர்த்த வேண்டும். 'சுற்றுப்புறச்சூழல்..' என்று போட்டி வைத்தால் மட்டுமே நம் படைப்பாளிகள்  இது குறித்து மாய்ந்து... மாய்ந்து எழுதுவார்கள்.  இனியாகிலும் எதிர்கால சந்ததிகள் நன்றாக வாழவேண்டிய , உலகம் செழிப்புடன் தூய்மையானதொரு உலகமாகவும் இருக்கவும் மக்களுக்கு உணர்த்த வேண்டியது நம்மைப் போன்ற படைப்பாளிகள் கடமை. சூழல் பாதுகாப்பை நிறையவே எழுதுவோம் நலமுடன் வாழ்வதற்காக.

கணையாழி ஜூலை 1996இல் வெளியான வாசகர் எதிரொலியில் வெளியான கருத்துகள் சில (எனது 'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும்' கட்டுரை பற்றியது):

*கிரிதரனின் பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டட கலையும் பற்றிய கட்டுரை நிறைய செய்திகளை அறிந்து கொள்ள உதவியது.  - தமிழ்ப்பரிதி (நெல்லிக்குப்பம்).

*வ.ந.கிரிதரனின் கட்டடக் கலை கட்டுரை சுருக்கமாக இருப்பினும் நிறைய விவரங்களைத் தருகிறது. - இரா. கதைப்பித்தன் (மதுரை)

* கவிதா பதிப்பகம் (தமிழ்நாடு) தொகுப்பு வெளியிட்டுள்ள கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு நூலில் எனது பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக்கலையும், அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் ஆகிய கணையாழியில் வெளியான இரு கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

தமிழ் கம்ப்யூட்டர் சஞ்சிகையில் வெளியான கட்டுரைகள்:

1. மைக்ரோசாஃப்டின் வெப் சேர்வர் - வ.ந.கிரிதரன் (தமிழ் கம்ப்யூட்டர் ஜூன் 14-27, 1999
2. விண்டோஸ்  என்டி கட்டமைப்பு - ஒரு பார்வை - வ.ந.கிரிதரன் (தமிழ் கம்ப்யூட்டர் அக்டோபர் 4-17, 1999)

கணையாழி, சுபமங்களா ஆகியவற்றில் வாசகர் கடிதங்கள் இரண்டும் எழுதியிருக்கின்றேன். சுபமங்களாவில் வெளியான கடிதம் எஸ்.பொ ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றி கூறிய கருத்துகள் பற்றியது. கணையாழி மே- 1996 இதழில் மார்ச் 1996இல் வெளியான பாவண்ணனின் 'குறி' சிறுகதை பற்றி எழுதிய எனது கடிதம் வெளியாகியுள்ளது. அது கீழே:

சென்ற மார்ச் மாதக் கணையாழி இதழில் வெளிவந்த பாவண்ணனின் 'குறி' நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு சிறுகதையைப் படித்த உணர்வைத் தந்தது. இந்தச் சிறுகதையில் பல விசயங்களைப் பாவண்ணன் தொட்டுச் சென்றிருக்கின்றார்.  சாதாரண மனிதனொருவனின் வாழ்வை எவ்விதம் இன்றைய இந்தியாவின் கட்சி அரசியல் சிதைத்து விடுகின்றதென்பதை அழகாக உணர்த்தியுள்ளார். படித்து முடித்தபொழுது இனம் புரியாததொரு சோகம் நெஞ்சைத் தொட்டுச் செல்வதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒரு தனி மனிதனின் வாழ்வை எவ்விதம் அவன் வாழும் சமுதாயச் சூழல் பாதித்துவிடுகின்றதென்பதை வைத்து மேல் நாட்டு நாவலாசிரியர்கள் பல நாவல்களையே படைத்துச் சென்றிருக்கின்றார்கள். காப்ஃகாவின் 'விசாரணை' நாவலின் கதாநாயகனாகட்டும், போரிஸ் பாஸ்டர்நாக்கின் 'டாக்டர் ஷிவாகோ'வாகட்டும் , பாவண்ணனின் குறி சொல்லும் பண்டாரமாகட்டும் எல்லோருடைய வாழ்க்கையுமே அவர்களது வாழ்வின் காலகட்டத்துச் சமுதாயச் சூழல் கொடூரமாகத்தான் சீரழித்து விட்டிருக்கின்றது.

இன்று உலகெங்கனுமே மனித உரிமைகள் மீறப்பட்ட, மறுதலிக்கப்பட்ட நிலையில் வாழும் மக்கள் எல்லோரினதும் பிரதிநிதிகளாகவே இத்தகைய கதாபுருஷர்களைக் காண முடிகின்றது.  நாட்டுக்கு நாடு, மக்களுக்கு மக்கள் நிலவுகின்ற சமுதாய, அரசியல் சூழல்களென்னவோ வேறுபட்டவையாக இருந்தபோதிலும் மனிதனொருவனின் இருப்பை இவை எல்லாமே ஏதோவொரு வகையில்  சீரழித்துத்தான் வந்திருக்கின்றன.; வருகின்றன.  ஜனநாயகத்தின் இருப்பிடமாகக் கருதப்படும் இந்தியாவில் நிலவுகின்ற கட்சி அரசியல் தனி மனிதனை எவ்விதம் பாதிக்கின்றதென்பதை விளக்குமொரு குறியீட்டுக் கதையாகத்தான் என்னால் 'குறி'யைப் பார்க்க முடிகின்றது. பாவண்ணனின் இன்னுமொரு பலம் இவரது எழுத்து நடை. - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகக் கொண்டு ஆண்டுதோறும் வெளியாகும் கூர் 2011(கனடா) இலக்கிய மலரில் வெளியான கட்டுரை: 'புலம்பெயர்தலும், புலம்பெயர் இலக்கியமும், தமிழரும்'. இக்கட்டுரை தமிழகத்தில் தாமரை டிசம்பர் 2012 இதழிலும் வெளியாகியுள்ளது. பின்னர் கீற்று இணைய இதழிலும் மீள்பிரசுரமாகியுள்ளது.'

எழுத்தாளர் திலகவதியால் வெளியிடப்படும் .அம்ருதா சஞ்சிகையில் வெளியான கட்டுரை: ஆர்தர் சி.கிளார்க்: - வ.ந.கிரிதரன் (அம்ருதா ஏப்ரல் 2012)

அமரர் சுஜாதா அறக்கட்டளையும், ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடாத்திய (உலக ரீதியிலான) அறிவியற் சிறுகதைப் போட்டியில் வட அமெரிக்காவுக்கான ரூபா 5000 பரிசினைப் பெற்ற சிறுகதை 'நான் அவனில்லை' . இது பின்னர் ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட அறிவியற் சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.

ஆனந்தவிகடன் நடாத்திய பவள விழாச் சிறுகதைப் போட்டியில் குட்டிச்சிறுகதையாக நான் அனுப்பிய சிறுகதை குட்டிக்கதையாகி 'பல்லிக்கூடம்' என்னும் பெயரில் ரூபா 3000 பரிசினைப் பெற்று பிரசுரமாகியுள்ளது.

தாயகம் (கனடா)வில் வெளியான எனது சிறுகதைகளிலொன்று: ஒரு மாட்டுப் பிரச்சினை. இதுவே எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, எழுத்தாளர் எஸ்.பொ. தொகுத்து , தமிழகத்தில் மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'பனியும், பனையும்' தொகுப்பில் வெளியான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை'. பலரின் கவனத்தையும் பெற்ற எனது சிறுகதைகளிலொன்று இச்சிறுகதை.

கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த சுபமங்களா மார்ச் 1995 இதழில் ஜேர்சி கொசின்ஸ்கியின் Being There' பற்றிய எனது நூல் விமரிசனம் வெளியாகியுள்ளது.

முனைவர் வெற்றிச்செல்வன் 'ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்' ஆய்வு நூலில் எனது படைப்புகளைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அக்கட்டுரை ஏழாந்திணை இலக்கிய மலரிலும் வெளிவந்துள்ளதாக அறிகின்றேன்.

நல்லூர் ராஜதானி நகர அமைப்பு நூல் பற்றி ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரம் கணையாழியில் நூல் மதிப்புரை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர் அஜயன் பாலாவும் ஆறாந்திணை இணைய இதழில் நூல் மதிப்புரை எழுதியிருக்கின்றார். திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் 'டெய்லி நியூஸ் பத்திரிகையில் விமரிசனம் எழுதியுள்ளார்.

அமெரிக்கா சிறுகதைத் தொகுப்பு பற்றி எஸ்.சாமிநாதன் அவர்கள் புதிய பார்வை சஞ்சிகையில் விமர்சனம் எழுதியிருக்கின்றார்.

இவை தவிர எனது சிறுகதைகள் பற்றிய புகலிடச் சிறுகதைகள் என்னும் பொருளில் ஆய்வுக்கட்டுரைகள் தமிழகக் கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மாணவர்களால் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.  அவை பற்றிய விபரங்கள் கீழே:

1. The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora:A Reading of Selected Short Stories of V.N. Giridharan By Dr.Gnanaseelan Jeyaseelan.

2. Fractured Self: A Study of V.N. Giritharan’s Selected Short Stories.  A dissertation submitted to the University of Madras in partial fulfilment of the requirements for the award of the degree of Master of Philosophy in English under choice based credit system By M. Durairaj

3. ‘SEEKING THE INVISIBLE HUMANNESS IN AN ALIEN LAND’ A review of the Diasporic issues as revealed through the selected Short stories of V.N. Giridharan By Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women -

4. Void Within – The Migration of an Albatross into an Unsolicited Province – A Study on the Writings of the Canadian Tamil Writer V.N. Giritharan By Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D. Assistant Professor in English, LRG Government Arts College for Women

முனைவர் ஆர். சீனிவாசனை ஆசிரியராகக் கொண்டு இணையத்தில் வெளியாகும் 'புதிய பனுவல்' சர்வதேசச் சஞ்சிகையில் The ‘Translocal’ Nationalism of the Sri Lankan Tamil Diaspora:A Reading of Selected Short Stories of V.N. Giridharan என்னும் முனைவர் ஞானசீலன் ஜெயசீலனால் எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரை பிரசுரமாகியுள்ளது. இவ்வாய்வுக் கட்டுரைகளை எழுதிய அனைவருமே இணையத்தில் வெளியாகிய (குறிப்பாக 'பதிவுகள்' இணையச் சஞ்சிகையில்)  எனது படைப்புகளை மையமாக வைத்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவற்றில் பெரும்பாலானவை இன்னும் நூலுருப்பெறவில்லை. நூலுருப்பெற்ற படைப்புகளை மையமாக வைத்தே ஆய்வுகளைச் செய்பவர்களுக்கு மத்தியில் இவர்கள் விதிவிலக்கானவர்கள்; முன்மாதிரியானவர்கள் கூட. இணையத்தின் முக்கியத்துவத்தையும் இத்தகைய ஆய்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

 தொண்ணூறுகளில் வீரகேசரி வாரவெளியீட்டில் எனது அறிவியற் கட்டுரைகள் சில வெளிவந்தன. அவை பற்றிய தகவல்கள் ஒரு பதிவுக்காக.

இந்தியச் சஞ்சிகை, மலர்களில் வெளியான எனது ஆக்கங்கள் , ஒரு பதிவுக்காக.....1. விளக்கங்காணும் 'வெளிநேரப்' பிரபஞ்சம்! அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்! - வ.ந.கிரிதரன் - வீரகேசரி வாரவெளியீடு. 15.9.1991
2. அடர்த்தியுள் ஒளிந்திருக்கும் பிரபஞ்ச சூனியங்கள்! ஆறுதல் அற்று விரையும் அண்டப் பொருட்கள்! - வ.ந.கிரிதரன் - வீரகேசரி வாரவெளியீடு. 5.4.1992.
3. அதிசயமா...ன அடிப்படைத் துணிக்கைகள்! பெளதிகக் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தும் உண்மைகள்! விசைகளே பிரபஞ்சத்தின் அத்திவாரங்கள்! - வ.ந.கிரிதரன் - 2.2.1992
4. சூத்திரங்களினால் துலங்கும் பேரண்டச் சூக்குமங்கள்! அச்சை விட்டு விலகிச் செல்லும் பிரபஞ்சக் குடும்பங்கள்! - வ.ந.கிரிதரன் - வீரகேசரி வாரவெளியீடு! - 8.12.1991
5. பிரபஞ்ச மாயங்கள்! கரும் ஈர்ப்பு மையங்கள்! விண்ணிலே சூழ உள்ளவற்றைப் பொறிவைத்துப் பிடிக்கும் ஈர்ப்பு வலயங்கள்! - வ.ந.கிரிதரன் - வீரகேசரி வாரவெளியீடு.- 10.11.1991

மேலுள்ள கட்டுரைகள் வானியற்பியல் (Astrophysics) பற்றியவை. சார்பியல் தத்துவம் (சிறப்பு, பொது), விரிந்து செல்லும் பிரபஞ்சத்தின் இயல்பு, அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய குவாண்டம் இயற்பியல், கரும் ஈர்ப்பு மையங்கள் (Blackholes) பற்றிய விரிவான கட்டுரைகள். கட்டுரைத் தலைப்புகளை வீரகேசரி மெருகூட்டி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவற்றைப் பிரசுரித்த வீரகேசரி நிறுவனத்துக்கு நன்றி. இவை பற்றிய வாசகர் கடிதக் குறிப்புகள் சில கீழே:

1. சுவையான கட்டுரை: 2.2.92 ஆம் திகதிய வீரகேசரி வாரவெளியீட்டில் விசைகளே பிரபஞ்சத்தின் அத்திவாரங்கள் எனும் தலைப்பில் விரிவாகியிருந்து கட்டுரை படிக்கப் படிக்கச் சுவையாகவே இருந்தது. அணுக்கருக்களின் ஆய்வில் எதிர் ஏற்றமும், நேர் ஏற்றமும் கொண்ட உண்மைகள் தெளிவாக விளங்கியதுடன் இவ்வாய்வுகளில் ஈடுபட்டு நோபல் பரிசுகளையும் பெற்ற விஞ்ஞானிகளையுன் அறியக் கூடியதாக இருந்தது. தொடர்ந்தும் இவ்வாறான பெளதிகௐ கண்டுபிடிப்புகள் பற்றி வெளிப்படுத்தும் உண்மை அம்சங்களை கேசரியின் மூலம் அறிய விரும்புகிறேன். - செல்வன் ஆ.பாரிஸ்டர் உக்குவளை (16.2.1992)

2. கடந்த வார கேசரியில் பிரசுரமாயிருந்த பொது அறிவு விடயங்கள் அனைத்தும் அறிவை வளர்க்கும் அற்புதப் படைப்புகளாக அமைந்திருந்ததில் அளவில்லா மகிழ்ச்சி. குறிப்பாக 'ஆறுதல் அற்று விரையும் அண்ட பொருட்கள்' மற்றும் 'மனோதிடம் சிறபுற மானிடப் பிறவி பயன்மிக்கதாகும்' இரண்டும் சிந்தையை சிறக்க வைத்தன. - எஸ்.மாலினி , நானுஓயா -(12.4.1992)

3. ஐயா! வீரகேசரி வாரவெளியீடு கிழமைக்கு கிழமை புதிய பல அம்சங்களைத் தாங்கிப் புதுப்பொலிவுடன் வந்து எம்மையெல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுகின்றது. 15.9.1991 அன்று வெளியாகிய வீரகேசரி வெளியீடு தாங்கி வந்த அனைத்து அம்சங்களும் பயனுள்ளவை. பாராட்டுக்குரியவை....... 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்ற தலைப்பில் ஐன்ஸ்டைனின் கோட்பாடுகளும், விளக்கங்களும் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தன. ... தொடரட்டும் என்றும் கேசரியின் சேவை! -  ஜோசப் அருள்தாஸ், வாழைச்சேனை (22.9.1991)

மேலுள்ள கட்டுரைகளில் 'அண்ட வெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' பற்றிய கட்டுரையில் ஏற்பட்ட பிழைதிருத்தம் பற்றிய குறிப்பு கிழே: 'அண்ட வெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' எனும் கட்டுரையின் கடைசிப்பந்திக்கு முதற்பந்தியில் வெளி, நேரம் என்னும் நான்கு பரிமாணங்களை உள்ளடக்கி என்று வந்திருக்கவேண்டிய பகுதி 'வெளி', நேரம், பொருள், சக்தி என்று தவறுதலாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதனைச் சுட்டிக்காட்டி எழுதிய பிழை திருத்தக் கடிதம் 29.9.1991 வீரகேசரி வாரவெளியீட்டு வாசகர் 'வாசகர் கணைகள்' பகுதியில் பிரசுரமாகியிருந்தது.

  ngiri2704@rogers.com

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்