Tuesday, November 26, 2024

அறிஞர் அ.ந.கந்தசாமியின் (A.N.Kandasamy) டிரிபியூன் ஆங்கிலக் கட்டுரைகள்! - வ.ந.கிரிதரன் -


அறிஞர் அ.ந.கந்தசாமி என அவரது பன்முகப் புலமை காரணமாக அழைக்கப்பட்ட எழுத்தாளர் அ.ந.கந்தசாமி ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். அவரது  மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் நானா ஐம்பதுகளின் ஆரம்பத்தில் சுதந்திரனில் தொடராக வெளியானது. பேராசிரியர் பேட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத - அராபிய உறவுகள்' பற்றிய கட்டுரையின் கருத்துகளைத் தமிழில் விளக்கும் வகையில் இன்ஸான் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

1965 - 1966 காலகட்டத்தில் இலங்கையிலிருந்து  வெளியான டிரிபியூன் ஆங்கிலச் சஞ்சிகையில் அர்த்தசாஸ்த்திரம் பற்றிய, வள்ளுவர் பற்றிய கட்டுரைகளுடன் மேலும் சில கட்டுரைகளை அ.ந.கந்தசாமி எழுதியுள்ளார். அவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து வெளியான வேறு பல ஆங்கில பத்திரிகை, சஞ்சிகைகளில் அவரது ஆங்கிலக் கட்டுரைகள் வெளியாகியிருந்திருக்கக் கூடும். அவை பற்றிய விபரங்கள் மேலதிக ஆய்வுகள் மூலம் பெறப்பட வேண்டும்.


எழுத்தாளரும் , ஆய்வாளருமான  தனேஷ் இன்டிகா விரும்பெருமா அவர்கள் அ.ந.க.வின் டிரிபியூன் கட்டுரைகள் பற்றிய விபரங்களையும், பிரதிகளையும்  இலங்கையின் சுவடிகள் திணக்களத்திலிருந்து பெற மிகவும் உதவியாகவிருந்தார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி.

அ.ந.க.வின் டிரிபியூன் ஆங்கிலக் கட்டுரைகள் விரைவில் பதிவுகள்.காம் வெளியீடாக, அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகும். பின்னுமொரு சமயத்தில் அச்சுப்பதிப்பாகவும் வெளியாகும். முதலில் அ.ந.க.வின் படைப்புகள் எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அதற்காகவே அவை முதலில் அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்புகளாக வெளியாகின்றன.


டிரிபியூனின் வெளியான அ.ந.கந்தசாமியின் ஆங்கிலக் கட்டுரைகள் வருமாறு:


1. In Search of A Historical Jesus  - Tribune Aug. 28, 1965
2. 'Was Hitler Another Dr.faustus? - Tribune Sep. 11, 1965
3, Valluvar-1! What is unique? Three sided genius.     - Tribune, Oct. 16, 1965
4. Valluvar -2 ON PRINCES and STATECRAFT Tribune, Oct. 23, 1965:
5. Valluvar 3 Love , Sex and Life - Tribune Oct. 30, 1965    
6 .From The Pages of Arthasastra - A Playboy in Ancient India - Tribune Nov. 20, 1965
7. From the pages of arthasastra! Hoarders, Blackmarketeers & Smugglers!  - Tribune, December 4,1965
8 .From The Pages of Arthasastra:  Ladies And De - Luxe Bars - tribune Dec. 18, 1965
9. From The Pages of Arthasastra: Kautiliya and the Burning of Widows - Tribune Jan. 5, 1966
11. From The Pages of Arthasastra - Curfew - mtime in a mauryan City - Tribune Jan. 19, 1966
12. From The Pages of Arthasastra - Government Servants in Ancient India - Tribune Feb. 18, 1966
13. Review 'IBI KATTA' in Tamil - Tribune April 11, 1966
14. From The Pages of Arthasastra -  Mechanised Warfare in Ancient India - Tribune June 1, 1966

பதிவுகள்.காம் அமேசன் - கிண்டில் பதிப்புகளாக வெளியிட்ட அ.ந.கந்தசாமியின் படைப்புகள் பற்றிய விபரங்கள் வருமாறு:

கவிதைத்தொகுப்பு - 'எதிர்காலச் சித்தனின்  பாடல்'
நான் ஏன் எழுதுகிறேன் (கட்டுரைகள்ம் கவிதைகள், சிறுகதைகள் அடங்கிய அ.ந.க பற்றிய அறிமுக நூல்)
நாவல்- மனக்கண்

இவற்றையும் 'மதமாற்றம்' (நாடகம்), வெற்றியின் இரகசியங்கள் (வாழ்வின் வெற்றிக்கான உளவியல் நூல்) ஆகிய நூல்களையும் நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம்., அதற்கான இணைய இணைப்பு


No comments:

வரலாற்று ஆவணம்: எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மறைவைத் தெரிவிக்கும் தினகரன், வீரகேசரி பத்திரிகைச் செய்திகள்!

 எழுத்தாளர் அ.ந.கந்தசாமி            எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மறைவுச் செய்தியைத் தெரிவிக்கும் தினகரனின் 15.2.1968 பதிப்பு. நன்றி; சுவடிகள...

பிரபலமான பதிவுகள்