Wednesday, November 20, 2024

ஜோர்ஜ் இ.குருஷேவின் ' ஒரு துரோகியின் இறுதிக்கணம்'

- எழுத்தாளர் ஜோர்ஜ் இ.குருஷேவ் -

'தேட'லில் வெளியானது. புகலிட இலக்கியத்தின் ஓரம்சம். புகலிடத்தில் வாழ்ந்தாலும், பிறந்த மண்ணின் தாக்கங்கள், வலி இவையெல்லாவற்றையும் கடந்து செல்ல முடிவதில்லை. ஜோர்ஜ்.இ.குருஷேவின் இக்கதையில் போராட்டச்சூழலில் விடுதலைக்காகப்போராடியவர்களால் புரியப்பட்ட  மனித உரிமை மீறல்கள் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுகின்றன.

இவரது முக்கியமான ஆரம்பக் காலத்துச் சிறுகதையொன்று அது கூறும் பொருளையிட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்று தமிழர்களின் ஆயுத ரீதியிலான யுத்தம் முடிந்து விட்டது. ஆனால் யுத்தம் முடிந்து இன்று வரையில் அக்காலகட்டத்துத் தவறுகளை, மனித உரிமை மீறல்களையிட்டு இன்னும் நாம் விரிவாக ஆராயவில்லை. சுய பரிசோதனை செய்யவில்லை. மிகவும் எளிதாகக் கண்களை மூடிக்கொண்டு கடந்து செல்கின்றோம்.ஆனால் யுத்தம் பெரிதாக வெடித்த காலகட்டத்திலேயே இவர் அதில் இடம் பெற்றிருந்த தவறுகளுக்கெதிராகப் பலமாகக் குரல்கொடுத்திருக்கின்றார். அவற்றைக் களைய வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். போராட்டம் என்னும் பெயரில் ஆளுக்காள் ,ஒருவரையொருவர் துரோகிகளாக்கி மண்டையில் போட்டிக்கொண்டிருந்த காலகட்டத்தைக் கடுமையாக விமர்சிக்கும் இவரது சிறுகதையான 'ஒரு துரோகியின் இறுதிக் கணங்கள்’ கருத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்டிருக்கும் கதையென்றாலும், அதன் பொருளையிட்டு முக்கியமானது.

துரோகியாக்கப்பட்டு மண்டையிலை போடப்பட்ட ஒருவன் தன் கதையை விபரிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் கதை வாசிப்பவர் உள்ளங்களை உலுப்பும் தன்மை மிக்கது. எளிய நடையில் பின்னப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே மின்னும் வசனங்கள் வாசிப்பவர் உள்ளங்களைத் தட்டி எழுப்புவை.

No comments:

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்