Thursday, November 7, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்



இசை & குரல் - AI SUNO | ஓவியம் - AI

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

நேரம் கடந்து சிந்திப்பேன் எப்போதும்.
தூரம் பற்றிச் சிந்திப்பேன் அப்போது.
காலத்தின் அடுக்குகள் தாங்கி நிற்கும்
விண் பற்றிச் சிந்திப்பேன் தப்பாமல்.

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

இரவு வானில் சுடர்கள் ஒளிரும்.
உறக்கம் மறந்து கிறக்கம் கொள்வேன்.
இரவு வான் அறிவியல் புத்தகம்.
இவ்விதமே நான் எப்போதும் எண்ணுவேன்.

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

இருப்பு பற்றிச் சிந்தித்தால் இங்கு
இருக்காது மோதல்கள் ஒருபோதும் ஒருபோதும்.
இரத்தக் களரிகள் இருக்காது இருக்கும்
இன்னுலகில் இருப்பர் மானுடர் எங்கும்.

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

இருப்பு பற்றிச் சிந்தித்தால் மறையும்
அறியாமை இருள். ஆணவ இருள்.
புரியாத நிலையால் மானுடர் இங்கு
எரிக்கின்றார் எழில்மிகு உலகை எப்போதும்.

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

இருப்பு பற்றிச் சிந்திப்போம் எப்போதும்.
இருக்கும் இருப்பில் இன்பம் பொங்கிட
இருப்பு பற்றிச் சிந்திப்பது அவசியம்.
இருக்கும் வாழ்வில் இன்புற்று இருப்போம்.

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

நேரம் கடந்து சிந்திப்பேன் எப்போதும்.
தூரம் பற்றிச் சிந்திப்பேன் அப்போது.
காலத்தின் அடுக்குகள் தாங்கி நிற்கும்
விண் பற்றிச் சிந்திப்பேன் தப்பாமல்.

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

இரவு வானில் சுடர்கள் ஒளிரும்.
உறக்கம் மறந்து கிறக்கம் கொள்வேன்.
இரவு வான் அறிவியல் புத்தகம்.
இவ்விதமே நான் எப்போது எண்ணுவேன்.

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

இருப்பு பற்றிச் சிந்தித்தால் இங்கு
இருக்காது மோதல்கள் ஒருபோதும் ஒருபோதும்.
இரத்தக் களரிகள் இருக்காது இருக்கும்
இன்னுலகில் இருப்பர் மானுடர் எங்கும்.

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.

இருப்பு பற்றிச் சிந்தித்தால் மறையும்
அறியாமை இருள். ஆணவ இருள்.
புரியாத நிலையால் மானுடர் இங்கு
எரிக்கின்றார் எழில்மிகு உலகை எப்போதும்.

இருப்பு பற்றிச் சிந்திப்பது என்றால்
விருப்பு எனக்கு. பெரு விருப்பு.






No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்