Tuesday, November 12, 2024

வ.ந.கிரிதரன் பாடல் - காலவெளிக் குழந்தைகள் நாம்


இசை & குரல்: AI SUNO | ஓவியம் : AI

காலவெளிக் குழந்தைகள் நாம்

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

இருக்கும் இருப்பைப் புரிந்து கொள்ளல்
இன்பம் மிக்கது. ஊக்கம் தருவது.
இருப்பை அறிதல் அறியும் பொருட்டு
இருப்பது என்றால் அதுபோதும் எனக்கு.

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

இருப்பை அறிந்து கொள்வதற்கு நம்
இருப்பின் காலம் போதவே போதா.
இருந்தும் இருப்பை முழுவதும் அறிய
இருக்கும் வரையில் முயற்சி செய்வேன்.

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

என்னை, உலகை, உயிரை அறிய
எவ்வழி என்றாலும் முயற்சி செய்வேன்.
அறிவியல் நூல்கள் அறிஞர் கருத்துகள்
அனைத்தையும் துணைக்கு அழைத்தே இருப்பேன்.

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

இருப்பை அறிதல் புரிதல் தரும்.
இருக்கும் முரண்களை இல்லாது  ஒழிக்கும்.
காலவெளிக் குழந்தைகள் நாம் என்பதை
கருத்தில் வைக்க உதவி செய்யும்.

விரிந்து கிடக்கிறது பேர் அண்டம்.
புரிந்து கொள்ளவே முயற்சி செய்கின்றேன்.

No comments:

கவிதை: நடிப்புச் சுதேசிகளும், ஆனை பார்த்த அந்தகர்களும்! - வ.ந.கிரிதரன் -

* ஓவியம் - AI இலக்கியம், அரசியல், விமர்சனம்.. ஆட்டம் சகிக்க முடியவில்லை. விளக்கமற்ற விமர்சனம் இவர்களுக்குத் 'தண்ணீர் பட்ட பாடு'. விள...

பிரபலமான பதிவுகள்