Wednesday, November 20, 2024

அகிலின் கூடுகள் சிதைந்தபோது...

- எழுத்தாளர் அகில் -

போர்ச்சூழல் காரணமாகப் புகலிடம் நாடிய  பலரின் வாழ்க்கையுடன் அப்போர் தந்த வலிகளும் புலம்பெயர்ந்திருக்கும். போர்ச்சூழலில் தன் மனைவியை இழந்த ஒருவன் அவன். வீதியில் வாகனமொன்றால் அடிபட்டுக் குற்றுயிராகக் கிடக்கும் குருவியொன்றை, அதன் வலியினை அவனால் பொறுக்க முடியவில்லை. அதன் நிலை அவனது மனைவியின் மறைவை நினைவு படுத்துகிறது. புகலிட இலக்கியத்தின் , எழுத்துகளின் இன்னுமொரு முக்கிய அம்சம் பிறந்த மண் ஏற்படுத்திய, காலத்தினால் ஆற்ற முடியாத வலி சுமந்த உணர்வுகள். உளப்பாதிப்புகள்.ஜேர்சி கொஸின்ஸ்ககி என்னும் போலிஸ் அமெரிக்க எழுத்தாளர் நிறமூட்டப்பட்ட பறவைகள் Painted Birds என்னுமொரு நாவலை எழுதியிருப்பார். ஜூதச் சிறுவனாக இரண்டாவது உலக மகாயுத்தக் காலத்தில் ஐரோப்பாவெங்கும் தப்பிப்பிழைப்பதற்காக அவர் அலைந்து திரிந்தபோது அடைந்து பயங்கர, துயர் மிகு அனுபவங்களை அவரால் ஒருபோதுமே மறக்க முடியவில்லை. பல வருடங்களுக்குப் பின்னர் அவ்வனுபவங்களை எழுத்தி வடிக்கின்றார்.,. பிறந்த மண்ணின் அரசியல், போர்ச்சூழல்கள் ஏற்படுத்தும் வலிகள் காரணமாகப் புகலிடம் நாடிச் செல்லும் ஒருவரை அவர் இறுதிவரை அவ்வலிகள்  விடாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும். புகலிட இலக்கியத்தில் ஒரு வெளிப்பாடாக எப்பொழுதும் அவை இருந்துகொண்டேயிருக்கும்.

இன்னுமொரு கதை - அம்மா எங்கே போகிறாய்?   தன் குழந்தைகளுக்காகத் தன் வாழ்வையே தாரை வார்த்த விசாலாட்சி என்னும்  தாயொருத்தியை அவரது குழந்தைகள் இருவரும் பொருளியற் காரணங்களுக்காக உடலுழைப்புக்காக சுயநலம் மிகுந்து  பயன்படுத்துகின்றார்கள் என்பதையும் மகனும் , மகளும் அதே பொருளியற் காரணங்களால் பிரிந்து கிடக்கின்றார்கள் எனபதையும் , இவற்றின் விளைவாக அத்தாய் முதியோர் இல்லத்துக்குச் செல்லும் நிலை ஏற்படுவதையும் சுட்டிக்காட்டி , புலம்பெயர் சமூகத்தை விமர்சிக்கும் கதை.

No comments:

கனடாவில் வெளியான முதலாவது தமிழ்ச் சஞ்சிகை 'நிழல்'!

கனடாத் தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் பலர் போதிய ஆய்வின்றித் தவறான தகவல்களை உ ள்ளடக்கிக் கட்டுரைகளை எழுதி வருவதை அவதானிக்க முடிகின்றது. கனடாவ...

பிரபலமான பதிவுகள்