Wednesday, November 20, 2024

தமிழ்நதியின் 'மாயக்குதிரை'

- எழுத்தாளர் தமிழ்நதி -

கலைவாணி ராஜகுமாரன் என்னும் கவிஞராக அறிமுகமாகித் தமிழ்நதியாக வளர்ந்த  தமிழ்நதியின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. கவித்துவமான மொழியில் விரியும் இவரது புனைகதைகள் வாசிப்பதற்கு உவப்பானவை. இவருக்கென்று தமிழகத்தில் ஒரு வாசகர் கூட்டமே உண்டு.

இவரது மாயக்குதிரை கூறும் பொருளையிட்டு முக்கியத்துவம் மிக்கது. சூதாடும் பழக்கம் புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர் ஃபியதோர் தச்த்யேவ்ஸ்கியையும் விட்டு வைக்கவில்லை. 

பொதுவாகக் கனடாவில் சீன இனத்து மக்கள் மத்தியில் ஆண்கள் , பெண்கள் பலர் சூதாடுவதில் பெருவிருப்பு மிக்கர்கள் என்பதை அறியலாம். சூதாட்டம் பொழுதுபோக்காக இருக்கும் மட்டும் பெரிதாகப் பாதிப்பில்லை.ஆனால் அதுவே போதையைப் போல் ஒருவரை அடிமைப்படுத்துகையில் ஏற்படும் பாதிப்புகள் பல. குடும்பங்களைப் பிரிய வைக்கின்றது. குடும்பமொன்றின் பொருளாதாரத்தைச் சிதைக்கின்றது. பலரின் உயிரை எடுத்திருக்கின்றது. தமிழ்நதியின் 'மாயக்குதிரை' புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் நிலவும் சூதாட்டத்துக்கு அடிமையான போக்கைப் பெண் ஒருத்தியின் சூதாட்டப் பழக்கத்தின் வாயிலாக எடுத்துரைக்கின்றது.

No comments:

தெணியானின் 'குடிமைகள்' சமூக விடுதலைக்கான அறை கூவல்! - வ.ந.கிரிதரன் -

தெணியானின் 'குடிமைகள்' நாவல் இலங்கைத் தமிழ் நாவல்களில் முக்கியமான நாவல்களிலொன்று. 'ஜீவநதி' பதிப்பகம், 'கருப்புப் பிரதிகள...

பிரபலமான பதிவுகள்