Wednesday, November 20, 2024

வ.ந.கிரிதரனின் 'நவீன விக்கிரமாதித்தன்' நாவல் பற்றிய குறிப்பொன்று!


எனது ஓவியா பதிப்பகம் வெளியிட்ட 'நவீன விக்கிரமாதித்தன்' நாவலைப்பற்றி எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி தன் கருத்தினைத் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். அவரது பதிவுக்கு நன்றி. அதனைக் கீழே தந்துள்ளேன். மேற்படி நாவலை நூலகம் இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு - https://noolaham.net/project/1139/113857/113857.pdf

எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திராவின் பதிவு கீழே;

"பதிவுகள்' எனும் வலைத்தளத்தை நடாத்திவரும் வ. ந. கிரிதரன் அவர்கள் சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் என பல்வேறு வகையான இலக்கியங்களைத் தொடர்ந்து எழுதிவருகிறார்.

'நவீன விக்கிரமாதித்தன்' என்ற இந்த நூலில் உரைநடையும் கவிதைகளும் இணைந்திருக்கின்றன. அவர் இதனை ஒரு நாவல் எனவகைப்படுத்துகிறார். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களின் 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்' என்ற நூலை எப்படி நாவலா இல்லையா என விவாதிக்கலாமோ, அதேபோல இதனையும் விவாதிக்கலாம். ஆனால், அந்த விவாதங்களுள் நான் செல்லவிரும்பவில்லை. அ. முத்துலிங்கம் அவர்கள் அந்த நூலில் அவரின் சுயசரிதையைப் பதிய விரும்பிருக்கிறார் என்றால் இந்த நூலில் கிரிதரன் தனது லட்சிய/நிஜ வாழ்க்கைத்துணையைப் பற்றியும் அவரின் நண்பர்களைப் பற்றியும் அவரின் தேடல்கள் பற்றியும் பதிய விரும்பியிருக்கிறார் எனலாம்.சூழலைப் பேணவேண்டியதன் அவசியத்தைப் பற்றி, இலக்கியத்தின் வகைகளைப் பற்றி,  பிரபஞ்சத்தின் விந்தைகளைப் பற்றி,  அறிவியலைப் பற்றி  - என பலவிடயங்களைப் பற்றி இது பேசுகிறது.  அறிவுபூர்வமான வாதங்களின் ஊடாகவும் உரையாடல்கள் ஊடாகவும் பேசப்படும் இந்த விடயங்களை வாசிப்பவர்கள் யாவரும் ஏதோ ஒரு புதிய விடயத்தையாவது அறிந்துகொள்வர் என்பது நிச்சயம். உதாரணத்துக்கு, ஓட்டகம் மாமிசம் சாப்பிடுமென்பதை இதன்மூலம்தான் நான் அறிந்துகொண்டேன். அவர் தான் தேடிக் கற்றுக்கொண்டவற்றை எங்களுக்கு spoon feed ஆகத் தந்திருக்கிறார்.

பொதுவில் நாங்கள் பேசும்போது ஒவ்வொரு முறையும் பேசுபவரை விழித்துப் பேசுவதில்லை என்பதால் கண்ணா, கண்ணம்மா என ஒவ்வொரு முறையும் விழிப்பது சற்று வாசிப்புக்கு இடைஞ்சலாக இருந்தது. மற்றும்படி நல்லதொரு வாசிப்பனுபவம் எனக்குக் கிடைத்திருந்தது. நன்றி கிரிதரன்."

No comments:

வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்

    கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...

பிரபலமான பதிவுகள்