Wednesday, November 20, 2024

சுமதி ரூபனின் ' அமானுஷ்ய சாட்சியங்கள்'

- எழுத்தாளர் சுமதி ரூபன் -


அக்கா ஸ்பொன்சர் பண்ணிக் கனடா வரும் ஓரிளம் பெண் அவளது அக்கா குடும்பத்துடன் தங்கியிருக்கின்றாள். அவளுக்கு அக்கா புருஷன் கொடுக்கும் பாலியல் ரியிலான தொல்லைகளைச் சகித்துக்கொண்டு , தாய் தந்தையரும் வரும் வரையில் அக்காவுடன் வாழ்கின்றாள். அவளது மனநிலையினை விபரிக்கும் கதை. அத்தான் என்றால் அப்பழுக்கற்றவர் என்று எண்ணும் அக்கா. மாப்பிள்ளை தங்கம் என்று எண்ணும் பெற்றோர். இவர்களுக்கு மத்தியில் அவள் மிகவும் இலகுவாகக் கனடாச் சட்ட உதவியை நாடியிருக்கலாம். அப்படி நாடியிருந்தால் அவளது அக்கா புருசன் சிறைக்குள் சென்றிருப்பான். அவள் ஏன் அவ்விதம் செய்யவில்லை? 

இங்குள்ள கலாச்சாரச் சூழலில் இது போன்ற விடயங்களை ஆதரிப்பார்கள். சட்டங்களும் துணையாகவிருக்கும், ஆனாலும் அவள் அதைச் செய்யவில்லை. அக்கா புருசனிட,மிருந்து தப்புவதற்காகத் தனியாகச் சென்று விடவும் முயற்சி செய்கின்றாள். அதையும் அக்கா தடுத்து விடுகின்றாள். அவள் தனியாகக் சென்று விட்டால் சமூகத்தில் தங்கள் மதிப்பு சிதைந்து போய்விடுமென்று அக்கா கூறுகின்றாள். அக்காவிடம் அத்தான் பற்றிய உண்மையினைக் கூறியிருக்கலாம். ஆனால் அதை அவள் நம்புவாளா என்பது சந்தேகமே. அவ்வளவு தூரம் அவள் தன் கணவரை உத்தமராக நம்புகின்றாள். அக்கா புகலிடக் கலாச்சாரத்தில் ஊறியவளாகவிருந்திருந்தால் அவளிடம் உண்மையைத் தெரிவித்திருக்கலாம். நம்பியிருக்கக்கூடும். ஆனால் அவளோ பிறந்த மண்ணின் கலாச்சாரக் கூறுகளுக்குள் மூழ்கிக் கிடப்பவள். அவற்றை மீற விரும்பாதவள். புகலிடத்தில் இரு கலாச்சாரத் தாக்கங்களுக்குள்சிக்கி மன உலைச்சலுடன் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு வாழும் ஒரு பெண்ணின் கதையைக் கூறும் கதை சுமதி ரூபனின் 'அமானுஷ்ய சாட்சியங்கள்'

இக்கதையில் இன்னுமொரு முக்கிய விடயம். இதன் நாயகி அத்தானின் பாலியல் வன்முறைகளை விபரிப்பதில் தயங்கி நிற்கவில்லை. இவ்விதமான மொழியைக் கையாள்வதற்கு உதவியாகவிருப்பது புகலிடச் சூழல். பிறந்தமண்ணில் இதுப்போன்ற விபரித்தல்களைச் செய்யவும் முடியாது. அப்படிச் செய்தால் குறிப்பாக அதையுமொரு பெண் செய்தால் போர்க்கொடி தூக்கியிருப்பார்கள். இதுவும் புகலிட இலக்கியக்குரிய தனித்தன்மையாகக் கருதலாம்.

1 comment:

Admin said...

நன்று.பாராட்டுகள்

புகலிடத்து எழுத்தாளர்களே! ஒரு வேண்டுகோள்!

புகலிடத்துக் கலை,இலக்கியவாதிகள் பலர் தனிப்பட்ட தாக்குதல்களில் நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமான வழிகளில் தம் பொன்னான நேரத்தைச் ச...

பிரபலமான பதிவுகள்