Wednesday, January 28, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.


வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.


இசை & குரல்:  SUNO AI    ஓவியம்: AI

நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.

எண்ணங்கள் இல்லையென்றால் என்ன உண்டு?
எண்ணங்கள் எம்மை வழிநடத்தும் பாதைகள்.
எண்ணங்களை மீறி ஒன்றும் இல்லையா புறத்தே.
எண்ணங்களே எம் வாழ்வின் ஆதாரங்கள்.

நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.
நினைவுகளே இருப்பின் ஆணி வேர்.

Tuesday, January 27, 2026

" ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்" பாடலைப் பாடிய பாடகி திருமதி கனகாம்பாள் சதாசிவம் மறைந்தார்! ஆழ்ந்த இரங்கல்!


எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் பிரபலமாகவிருந்த இசைக்குழுக்கள் பலவற்றில் பாடிப்புகழ் பெற்றவர் பாடகி கனகாம்பாள் சதாசிவம். கண்ண்ன் - நேசம் இசைக்குழுவில் தன் இசைப்பயணத்தை ஆரம்பித்தவர்.  நான் அக்காலகட்டத்தில் என் பால்ய, பதின்மப் பருவத்தில் பல இசைக்குழுக்களின் இசை நிகழ்வுகளை ஆலயத்திருவிழாக்கள், திருமண நிகழ்வுகளில்  நண்பர்களுடன் கேட்டு இரசித்திருக்கின்றேன்.  ஆனால் அப்போதெல்லாம் அங்கு பாடிய பெண் பாடகிகளின் பெயர்கள் நினைவிலில்லை. இவரும் பாடியிருந்திருக்கலாம். பெயர் அறியாமல் இவர் பாடலை இரசித்திருப்பேன். ஆனால் இவரது பெயரை நான் முதன் முதலில் அறிந்து கொண்டது 'கோமாளிகள்' திரைப்படத்தில் இவர்  பாடிய " ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்' என்னும்  பாடல் மூலம்தான்.

எழுத்தாளர்களின் கவனத்துக்கு - இணையத்தின் வலிமை!


எனது  'குடிவரவாளன்'  நாவலின்,  எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனின் ஆங்கில மொழிபெயர்ப்பு   An Immigrant  . இதனை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்.  என்  கூகுள் தேடலொன்றில் அண்மையில் இந்நாவல் பற்றிக் கிடைத்த தகவலிது:  தமிழகத்தைச் சேர்ந்த , உதவிப் பேராசிரியராகப் பணி புரியும் முனைவர்  பி.முத்துலக்சுமி  இந்நாவல் பற்றி ஆங்கிலத் திறனாய்வொன்றினைச் சர்வதேச இலக்கியக் கருத்தரங்கொன்றில் சமர்ப்பித்திருக்கின்றார். அவ்வாய்வுக் கட்டுரையின் தலைப்பு - 'Ethnic Conflict in V.N. Giritharan’s An Immigrant,'

ஏற்கனவே முனைவர் தாரணி அகில் இந்நாவல் பற்றி ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள் இரண்டினை  எழுதியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவை பற்றிய விபரங்கள் வருமாறு:

Sunday, January 25, 2026

கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டமும் , தமிழரின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பகுதிகளும்! - வ.ந.கிரிதரன் -


அண்மைக்காலமாக ஊடகங்களில் கிவுல் ஓயா  நீர்ப்பாசனத் திட்டம் பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. இது  பற்றிய முழுமையான அறிக்கையினை இன்னும் நான் பார்க்கவில்லை. இத்திட்டம் பற்றிய விரிவான வரைபடங்களுடன் கூடிய அறிக்கை இணையத்தில் இருந்தால் அறியத்தாருங்கள். 

இத்திட்டம் பற்றிய முழுமையான விபரங்கள் எவையுமில்லாமல் என்னால் உறுதியான கருத்துகள் எவற்றையும் தற்போது வைக்க முடியாது. ஆனால் ஒன்றை மட்டும் கூறுவேன். வவுனியாவின் எல்லைப்பகுதிகளில் குறிப்பாக மருதோடை , காஞ்சிரமோடை பகுதிகள் பல தமிழர்தம் சரித்திர முக்கியத்துவம் மிக்கவை. குறிப்பாகக் காஞ்சிரமோடை பற்றியொரு கட்டுரையினை நான் எழுநா சஞ்சிகையிலும் எழுதியுள்ளேன். அதனை இப்பதிவின் கீழ் தந்திருக்கின்றேன்.

இவ்விதமான சரித்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியவை. இதுவரையில் போதிய ஆய்வுகள் இவை பற்றிச் செய்திருக்கின்றார்களா என்பதும் சரியாகத்தெரியவில்லை. இவ்விதமான பகுதிகளை இத்திட்டம் அழிக்கும் வகையில் அமைந்திருந்தால் இத்திட்டம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், அப்பகுதி மக்களின் குடி பரம்பலை மாற்றி அமைக்காதிருந்தால், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்டால் , இத்திட்டம் அப்பகுதி மக்களுக்கு மிகுந்த பயனை அளிப்பதாக இருந்தால் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவது நல்லதே.

காலத்தால் அழியாத கானம்: 'நீல நிறம். வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்'


'என் அண்ணன்' திரைப்படத்தில் இடம்  பெற்றுள்ள , கவிஞர் கண்ணதாசனின் எழுத்தில், டி.எம்.எஸ் & எஸ்.ஜானகி குரலில், எம்ஜிஆர் & ஜெயலலிதா நடிப்பில், கே.வி.மகாதேவன் இசையில் ஒலிக்கும் இனியதொரு காலத்தால் அழியாத கானமிது. இத்திரைப்படத்தை முதல் நாள் காலைக் காட்சியாக யாழ் வெலிங்டன் திரையரங்கில் பார்த்த நினைவுகள் படமாக விரிகின்றன. 

கவிஞர் கண்ணதாசன், எம்ஜிஆர், கே.வி.மகாதேவன் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத கானங்கள்தாம். பொதுவாக அவரது இவ்விதமான பாடல்கள் டி.எம்.எஸ் &  பி.சுசீலா குரலில் ஒலிப்பவை. ஆனால் இது டி.எம்.எஸ் & எஸ்.ஜானகி குரலில் ஒலிக்கின்றது.  இதுவும் சிறப்பாகத்தானுள்ளது. 

வரலாற்றில் நிலைத்து நிற்கப்போகும் கனடியப் பிரதமரின் உரை!


கனடியப் பிரதமர் மார்க் கார்னியின் இந்த உரை வரலாற்றில் நிலைத்து நிற்கபோகும் உரை! தற்போதுள்ள சூழலில் , டொனால்ட் ட்ரம் அமெரிக்க அதிபராக இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்த உரை முக்கியத்துவம் மிக்கது.

https://www.youtube.com/watch?v=btqHDhO4h10

அலெக்ஸ் பிரிட்டியின் மானுட நேயத்திற்காகத் தலை வணங்குவோம்! - வ.ந.கி -


மின்னியாபொலிஸ் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடிவரவாளர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடர்கிறது. அவரது தலைமையிலான ICE குண்டர்களின் அட்டகாசம் தொடர்கிறது. எவ்வித மானுட நேயமுமற்று பெண்களை, முதியவர்களைம் குழந்தைகளை அவர்கள் அவமானப்படுத்தும் வகையில் கைது செய்வதும், அவர்கள் மேல் தேவைக்கு அதிகமான அளவில் பலாத்காரம் புரிவதும் தொடர்கிறது. 

Tuesday, January 20, 2026

யு டியூப் ஆய்வாளர்கள்!


இணையத்தின் வருகை சமூக ஊடகங்கள் உருவாக வழி வகுத்தது. இது இதுவரை காலமும் அர்ப்பணிப்பும் , கடும் உழைப்பும், அறிவும், தேடலும், ஆய்வும் மிக்கவர்களே   சிறந்த ஊடகவியலாளர்களாக, ஆய்வாளர்களாக இருந்தார்கள்.  யாரும் ஊடகவியலாளர்களாம், யாரும் எழுத்தாளர்களாகலாம், யாரும் சஞ்சிகைகள் நடத்தலாம், யாரும் எழுதலாம், நடிக்கலாம் என்னும் நிலையினைச் சமூக ஊடகங்கள் உருவாக்கின. சமூக ஊடகங்கள் மூலம் சம்பாதிக்கலாம் என்னும் நிலை வந்ததும், சம்பாதிப்பதையே நோக்காகக் கொண்டு எல்லாருமே உண்மைகளைக்க குழி தோண்டிப் புதைத்து விட்டு, பரபரப்பினைத் தரும், உணர்வினைத் தூண்டி விடும், செய்திகளை , உண்மையினைத் திரித்து  எழுதவும், பேசவும் வழி வகுத்தது. அதிகமானவர்களைத் தம்மிடம் அழைப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு எல்லாரும் இயங்கத்தொடங்கினார்கள்.  இது சமூக ஊடகங்களால் உருவான எதிர்மறை அம்சங்களில் ஒன்று.

Monday, January 19, 2026

பாதுகாக்கப்பட வேண்டிய மந்திரிமனை! இன்னும் காலம் கடந்து போய்விடவில்லை! பாதுகாப்போம்! வரலாற்றைப் பேணுவோம்!


ஏற்கனவே  போதிய பராமரிப்பற்ற நிலையில் இருந்த யாழ் மந்திர்மனைக் கட்டடம் அண்மைக்காலப் பெருமழையினால் மேலும் சிதைவுகளுக்குள்ளாகியுள்ளதாகியுள்ளது. அதன் நிலையினை வெளிப்படுத்தும் காட்சிகள் இவை. மந்திரிமனைக்கு இந்நிலை ஏற்படாமல் தடுத்திருக்கும் வல்லமை எமக்கிருந்தது. ஆனால் அதனை நாம் செய்யவில்லை. இது வருந்தத்தக்கது.

கட்டடங்கள் பல காரணங்களால் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஒரு குறிப்பிட்ட காலக் கட்டடம் என்னும் வகையில், கட்டடக்கலைப் பாணிகளை வெளிப்படுத்துகின்றன என்னும் வகையில், வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை என்னும் வகையில்,  இனமொன்றி ன் வரலாற்று அடையாளம் என்னும் வகையில் கட்டடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை. அவ்வகையில் இக்காரணங்கள் அனைத்தும் மந்திரிமனைக்குப் பொருந்தும். 

Sunday, January 18, 2026

முகநூலில் தொடரும் விவாதம் (2) : எழுத்தாளர் மாலனின் இந்தித்திணைப்பு பற்றிய கருத்துகளும்ம் எதிர்வினைகளும்

 எழுத்தாளர் மாலன் 

மாலன் நாராயணன்:


நீங்கள் கூறியுள்ளவற்றிற்கான பதில்கள் என்னுடைய பதிவிலேயே இருக்கிறது உதாரணமாக, இந்தி ஆட்சி மொழி என்பது திடீரென எடுக்கப்ப்ட்ட முடிவு அல்ல, அது சுதந்திர இந்தியாவின் அரசு அமைந்த போதே அரசமைப்பு அவையால் எடுக்கப்பட்டது, அந்த 15 ஆண்டு கெடு அப்போதே எடுக்கப்பட்ட முடிவு, 1958லிருந்து தமிழ் தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக இருந்தது அது தமிழ்நாட்டில் ஆட்சிமொழியாக நீடிப்பதில் 1965 ல் ஆபத்து ஏதும் நேர்ந்துவிடவில்லை, 1965 போராட்டத்தை தொடங்கி முன்னெடுத்தது திமுக மாணவர் அணி . இவை பற்றி விரிவாகவே என் பதிவில் ஆதாரங்களோடு தகவல் கொடுத்திருக்கிறேன் அதையேதான் நீங்கள் உங்கள் பதிவில் எழுதியிருக்கிறீர்கள் அவற்றில் ஏதும் பிழை இருக்கிறதா? 2. நீங்கள் கீழ்க்கண்டவற்றை மறுக்கிறீர்களா? 1. 1965 போராட்டத்தின் கோரிக்கை தமிழை மத்திய அரசின் ஆட்சிமொழி ஆக்கு என்பதல்ல, ஆங்கிலத்தை அகற்றாதே என்பது 2. இந்தி ஆட்சி மொழி என்ற நிலையை 1965 போராட்டம் மாற்றியிருக்கிறதா? 3. இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்றிருந்தால் தமிழுக்கு பதில் மாணவர்கள் இந்தி படித்திருப்பார்கள் என்கிறீர்கள் சரி ஆங்கிலமும் ஆட்சிமொழி என்பதால் ஆங்கிலம் படிக்கவில்லையா? ஆங்கிலம் நம் தாய்மொழியா? அதுவும் அயல்மொழிதானே? இந்தி திணிப்பு கூடாது ஆனால் ஆங்கிலத் திணிப்பு சரியா? 3.திமுக மத்தியில் ஆட்சியில் இருந்த போது கூட தமிழை ஆட்சிமொழி ஆக்க முடியவில்லை ஏன்? கீழ்கண்ட இதனை விளக்குங்கள்: 1963ல் ஆங்கிலம் தொடரும் என்று சட்டம் வந்துவிட்டால் 1965 ல் போராட்டம் ஏன்? மற்ற மாநிலங்களில் நடந்த போராட்ட்ம் நடந்ததா என்பது பற்றி தனியாக எழுதுகிறேன் நீங்கள் ஒரு தரப்பான அரசியல் பிரசுரங்களை மட்டும் படிக்காமல் அரசமைப்புச் சட்ட விவாதங்களையும் படிப்பது நல்லது அங்கு எல்லா தரப்பினரும் இருந்தார்கள். ஒருவர் கூட தமிழை ஆட்சிமொழியாக்க கோரவில்லை உணர்ச்சி களை மட்டுப்படுத்திக் கொண்டு யதார்த்தங்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

வ.ந.கிரிதரன் 

வணக்கம் மாலன், ' 1963ல் ஆங்கிலம் தொடரும் என்று சட்டம் வந்துவிட்டால் 1965 ல் போராட்டம் ஏன்?' என்று கேட்டிருக்கின்றீர்கள். இதற்கான பதிலாகப் பின்வரும் விக்கிபீடியாக் கட்டுரையின் பகுதிகளைத் தருகின்றேன்:
"1963ஆம் ஆண்டு சனவரி 21 அன்று இந்த வரைவுச்சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. திமுக உறுப்பினர்கள் வரைவுச்சட்டத்தின் மூன்றாம் அங்கத்தில் ஆங்கிலம் இந்தியுடன் தொடரலாம் என்றிருப்பதனை எதிர்த்து ஆங்கிலம் இந்தியுடன் தொடரும் என மாற்ற வேண்டும் என திருத்தம் கொணர்ந்தனர். தொடரலாம் என்பதைப் பின்வரும் அரசினர் தொடராமலுமிருக்கலாம் என பொருள் கொள்ள வாய்ப்பு உள்ளதாக வாதிட்டனர். சிறுபான்மையினரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுக்கப்படாமல் போகலாம் என்றும் கூறினர்.

Friday, January 16, 2026

முகநூலில் தொடரும் விவாதம் (1)) : எழுத்தாளர் மாலனின் இந்தித்திணிப்புக்கெதிரான போராட்டம் பற்றிய கருத்துகள் பற்றி... - வ.ந.கிரிதரன் -

எழுத்தாளர் மாலன் 

எழுத்தாளர் மாலன்  1965இல் தமிழ்நாட்டில்  நடந்த இந்தித்திணிப்புக்கெதிரான போராட்டம் பற்றி ஒரு முகநூற் பதிவிட்டிருந்தார். அதில் அவர் பின்வருமாறு கூறியிருப்பார்:

"அந்தப் போராட்டம் ஆங்கிலம் அகற்றப்படுவதை எதிர்த்த போராட்டம்  தமிழுக்கானது அல்ல. தமிழுக்கு அப்போது ஆபத்தில்லை.   தமிழைக் காக்க  நடந்த போராட்டம் என்பது கட்டமைக்கப்பட்டது. ஆங்கிலத்தை அகற்றுவதை எதிர்த்த போராட்டம் என்றால் மக்களிடையே பெரிய எழுச்சி இருக்காது என்பதால் (அன்று தமிழ்நாட்டில் ஆங்கிலம் அறியாத மக்கள் பலர்) கிளர்ச்சியை திமுக தமிழோடு சம்பந்தப்படுத்தி முன்னெடுத்தது"

இவை  திராவிடத்தை எதிர்க்கின்றோம் என்னும் பெயரில் மாலனால்  இந்தித்திணிப்புக்கெதிராகத்  தமிழக மக்களால் நடத்தப்பட்ட நியாயமான போராட்டத்தின் முக்கியத்தைக் குறைப்பதற்காகக் கூறப்பட்ட  கூற்றுகளாகவே கருத வேண்டியுள்ளது. இந்தித்திணிப்புக்கெதிராக நடத்தப்பட்ட போராட்டம் அண்ணா தலைமையிலான திமுக மாணவர்கள், பொது மக்கள் என அனைவருடனும்  இணைந்து நடத்திய போராட்டம்.  இதற்காக மாணவர்கள் தீக்குளித்திருக்கின்றார்கள். பொதுமக்கள் காவற் துறை, இந்திய இராணுவத்தால்  தாக்கப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் போராடியது தமிழ் மொழிக்காக, இந்தித்திணிப்புக்கெதிராக.  மாலன் அதனை வெறும் ஆங்கில மொழியினை நீடிப்பதற்காக என்று மலினப்படுத்தியிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. 

Wednesday, January 14, 2026

இனிய பொங்கல் வாழ்த்துகள்!


அனைவருக்கும் அடியேனின் 
அன்புப் பொங்கல் வாழ்த்துகள்!

அகிலத்தின் ஆணிவேர் 
அயராதுழைக்கும் கதிர்தன் ஒளி.
அகிலத்தின் உயிர்நாடி உழவு.
காக்கும் கதிருக்கும், 
கடுமுழைப்பால் எம்மிருப்பின் 
காரணகர்த்தாக்களான 
உழவருக்கும், அவர்க்கு
உதவிடும் ஆவினத்துக்கும்
நாம் மானுடர்  ஆற்றும்
நன்றிக் கடனே
நம் தமிழர் பொங்கல்
நன்னாளாம்! இன்னாளாம்!
பொங்கட்டும் இன்பம் எங்கும்.
தங்கட்டும் மங்கலம் எங்கும்.
பொங்கலோ! பொங்கல்!
பொங்கலோ! பொங்கல்!

* டிஜிட்டல் ஓவியம் கூகுள் நனோ பனானா வழியாக வ்நகி.



Tuesday, January 13, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: நீல நிறத்தில் நெஞ்சம் இழப்பேன்!


வ.ந.கிரிதரன் பாடல்:  நீல நிறத்தில் நெஞ்சம் இழப்பேன்!

இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI

[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]

நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.

நீல நிறம், மெல்லிய நீல நிறம்
நெஞ்சுக்கு நெருக்கமானது. என் 
நெஞ்சுக்கு நெருக்கமானது.
அடி, கண்ணம்மா அந்த நிறம்
அடியே உனக்குக் கூடப் பிடித்த நிறம்தான்.
அடிக்கடி நீ கூறுவாய் 
அதுதான் உனக்கும் பிடித்த நிறமென்று.
இல்லையா கண்ணம்மா! நீயே கூறு!

நீல நிறத்தில் நெஞ்சமிழப்பேன்.
காலவெளியின் ஆழம் உணர்வேன்.

Monday, January 12, 2026

வ.ந.கிரிதரன் பாடல் : கனடாத் தமிழர்!


வ.ந.கிரிதரன் பாடல் : கனடாத் தமிழர்!

இசை &  குரல்: SUNO AI  ஓவியம்: Google Nano Banana AI

[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]

கனடா  பூவுலகின் சொர்க்கம் என்றே
கனடாக் கனவுகள் கண்டேன்.  வந்தேன்.

இட்லி, தோசை,ம் இடியாப்பம் எல்லாம்
இல்லாமல் போகுமோ என்றே பயந்திருந்தேன்.
பிள்ளையார் கோயில் , துர்க்கை அம்மன் கோயில்
ஐயப்பன் கோயில்  கந்தசாமி கோயில் 
இல்லாமல் இருக்குமோ என்று பயந்திருந்தேன்.
இங்கே எல்லாமே இருக்கக் கண்டேன்.

கனடா  பூவுலகின் சொர்க்கம் என்றே
கனடாக் கனவுகள் கண்டேன்.  வந்தேன்.

வ.ந.கிரிதரன் பாடல் : கனடாவில் கிட்டார் அடிக்கும் கலைஞன் நானே


வ.ந.கிரிதரன் பாடல் : கனடாவில் கிட்டார் அடிக்கும் கலைஞன் நானே

இசை &  குரல்: SUNO AI  ஓவியம்: Google Nano Banana AI

[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி.]


கனடா வந்தபோது வேலை தேடிச் சென்றேன்.
கனடா அனுபவம் இல்லாமல் வேலை தேடிச் சென்றேன்.

நண்பன் சொன்னான் கிட்டார் அடிக்க விருப்பமா என்று.
நண்பா யாருக்குத்தான் விருப்பம் இல்லை என்றேண்.
அப்படியென்றால் உனக்கு ஒரு வேலை ரெடி என்றான்.
எப்படியென்றாலும் வேலை கிடைத்தால் போதுமென்றேன்.

கனடா வந்தபோது வேலை தேடிச் சென்றேன்.
கனடா அனுபவம் இல்லாமல் வேலை தேடிச் சென்றேன்.

Sunday, January 11, 2026

வ.ந.கிரிதரன் பாடல் - ஊர் திரும்புதல்!


[வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி] 

வ.ந.கிரிதரன் பாடல் - ஊர் திரும்புதல்!

இசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI

யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.

மண்ணை விட்டுப் பிரிந்த போது
எண்ணத்தில் பதிந்த நினைவுகள் விரிய
மீண்டும் மண்ணைப் பார்க்கும் ஆவலில்
எண்ணப் பறவைகள் சிறகடித்துப்  பறந்தன.

யுத்தம் முடிந்தது. ஊருக்குத் திரும்பினேன்.
எத்தனையோ கனவுகள் நிறைந்த மனத்துடன்.

என்னுடன் படித்த , என்னுடன் திரிந்த
என்னினிய நண்பர்கள் எங்கே. எங்கே.
என்னுடன் திரிந்த நண்பர் எவரும்
எங்குமற்ற மண்ணைக் கண்டேன்.

Saturday, January 10, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: நல்ல நாள்!


வ.ந.கிரிதரன் பாடல்: நல்ல நாள்! 


இசை & குரல் : AI SUNO  | ஓவியம்: AI

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.

ஒவ்வொரு காலையும் புதுக்காலையே.
இவ்விதம் எண்ணி எழுந்தால்
நல்லநாள் எனவே விடியும்.
எல்லா இடரும் உலர்ந்துபோகும்.

பொழுது புலர்ந்தது. பூரித்தேன்.
எழுந்தேன் புதுநாளை வரவேற்று.


நடந்தவற்றை ஒதுக்கிக் கடப்போம்.
நடப்பவற்றை துதித்து ஏற்போம்.
நடப்பவை எல்லாமே இனிதாய்
நடக்கும் என்பதை அறிவோம்.

வ.ந.கிரிதரன் பாடல்; பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.


வ.ந.கிரிதரன் பாடல்; பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.

இசை & குரல் - Suno AI  ஓவியம் - AI

பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.

மூடத்தனம் நிறைந்த உலகம் இது.
மூர்க்கம் நிறைந்த உலகம் இது.
போர்கள் நிறைந்த உலகம்  இது.
பிரிவுகள் மலிந்த உலகம் இது.

பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.

வாயுக் குமிழ் போன்றது  நம் வாழ்வு.
ஓயும் வரையும் உணராமல் ஓடுகின்றோம்.
சாயும் வரையில் சரிபிழை தெரிவதில்லை.
மாயும் வரையில் சிந்திக்காமல் வாழுகின்றோம்.

பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.

மண்ணைப் பங்கு  போட ஆசை.
பொன்னைப் பெருக்கப் பேர் ஆசை.
ஆசைகளை பூர்த்தி செய்ய ஆடுகின்றோம்.
அல்லும் பகலும் ஓயாது பறக்கின்றோம்.

பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்.

சமத்துவம் அற்ற உலகம் இது.
சமநீதி அற்ற உலகம் இது.
பகுத்து அறிவோம் மேலும் உயர்வோம்
வகுத்து வைப்போம் நல்லதோர் அமைப்பை.

பிரிந்து கிடக்கும் உ லகை ஒழிப்போம்.
எரியும் உலகின் தீயை அணைப்போம்


*********************************************************
வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1 -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.   பாடல்கள் பிடித்திருந்தால் 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவு இச் 'சான'லின் வளர்ச்சிக்கு நன்கு உதவும். நன்றி. 

V.N. Giritharan Songs - https://www.youtube.com/@girinav1 - My songs with music and vocals by Artificial Intelligence. Listen and enjoy. Share your thoughts. If you like the songs, please don't forget to subscribe to the 'V.N. Giritharan Songs' channel. Your support will greatly help in the growth of this channel. Thank you.
***********************************************************

பெரியார், திராவிடம், தமிழ்மொழி பற்றி செயற்கை நுண்ணறிவுடன் விரிவான நேர்காணல். நேர்காணல் கண்டவர் : வ.ந.கி




நான்: 


பெரியார் ஆரியர் தமிழ் மொழியைத் தம் மொழியைக் கலந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பிரித்து விட்டதாகக் கருதுகின்றாரே?

செயற்கை நுண்ணறிவு AI:


ஆம், பெரியார் ஈ.வெ.ரா. ஆரியர்கள் தமிழ் மொழியைக் கலந்து, மற்ற திராவிட மொழிகளைப் பிரித்து விட்டதாகக் கருதினார் என்பது உண்மை. இது திராவிட இயக்கம் முன்வைத்த ஒரு முக்கியமான கோட்பாடு மற்றும் பெரியாரின் தமிழ் மொழி குறித்த பார்வையின் ஒரு முக்கிய அம்சமாகும்.

பெரியாரின் வாதம் சுருக்கமாக:

பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தினர் முன்வைத்த வாதத்தின் சாரம் இதுதான்:

    தமிழ் தான் மூல மொழி: திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் தான் மிகவும் தொன்மையானதும், தனித்துவமானதுமான மூல மொழி என்று பெரியார் கருதினார். மற்ற திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை தமிழிலிருந்து பிரிந்தவை என்றும், அல்லது தமிழின் கிளை மொழிகள் என்றும் நம்பினார்.

Thursday, January 8, 2026

வ.ந.கிரிதரனின் பாடல் -கல்லுண்டாய் நினைவுகள்!


வ.ந.கிரிதரனின் பாடல்  -கல்லுண்டாய் நினைவுகள்!
இசை & பாடல் - SUNO AI   ஓவியம் - Google AI


அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

நகருக்குப் படையெடுப்பர் தொழிலாளர்.
நானும் கூடவே சைக்கிளில் செல்வேன்.
அராலி வடக்கில் நான் வசித்தேன்.
அக்கால நினைவுகள் விரிகின்றன.

அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

அராலிப் பாலத்தில் இறால் பிடிப்பர்
அதிகாலையில் தொழில் செய்யும் தொழிலாளர்.
அங்குதான் வழுக்கியாறு கடலுடன் சங்கமிக்கும்.
அதுவோர் அகத்தின் இனிய நினைவு.;

அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

தொலைவில் நவாலி ம்ணற் குன்றுகள்.
தவமியற்றும் துறவிகள் போலிருக்கும்.
காற்றிலாடும் பசும் வயல்கள்.
கிளிகளும் கூட்டமாகப் பறக்கும்.

அதிகாலைகளில் , அந்திவேளைகளில் 
அன்று கல்லுண்டாய் வீதியில் பயணித்தேன்.

தந்தை பெரியாரின் பார்வையில் தமிழரும், திராவிடரும், தென்னிந்தியரும்!


திராவிடம் என்னும் சொல் தமிழம் த்ரமிளம், த்ரவிடம், திரவிடம்,  திராவிடம் என்னும் வட சொல்லாக மீண்டும் தமிழுக்கு வந்த சொல்.இந்தியாவின் பூர்வ குடிகள் தமிழர். ஆரியர் தமிழரைத் திராவிடர் என்றழைத்தனர். வடக்கில் திராவிடரிடமிருந்து ஆதிக்கத்தைப் பெற்றதும் தமிழர்கள் (திராவிடர்) தென்னிந்தியாவில் ஒடுங்கினர். 
 
அவ்விதம் ஒடுங்கிய தமிழர் பேசும் மொழி இருக்கும் பிரதேசங்களுக்கேற்ப வேறுபாட்டுடன் விளங்கியது. இன்று கூட கோவை, மதுரை, தஞ்சாவூர்த் தமிழ் வித்தியாசமாக் இருக்குதல்லவா., அதுபோல். இவ்வேறுபாட்டைப் பாவித்து வடக்கில் திராவிடரை அடக்கிய ஆரியர் , தெற்கிலும் தம் மொழி, சமயம் இவற்றைப்பாவித்துத் தமிழைக் கன்னடம், தெலுங்கு, மலையாளமாக மேலும் பிரித்தனர், இது ஆரியர் தமிழைப்பலவீனப்படுத்தச் செய்தது. 

Wednesday, January 7, 2026

நூல் அறிமுகம் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 'திரவிடத்தாய்'


நூல் அறிமுகம் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரின் 'திரவிடத்தாய்'


தமிழம் -> திரவிடம் -> திராவிடம்!

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் எழுதிய நூல் 'திரவிடத்தாய்'. இதன் பதிப்பாசிரியர் புலவர் அ.நக்கீரன். திராவிடம் என்னும் சொல் தமிழம் என்னும் சொல்லிலிருந்து உருவான சொல் என்பது தேவநேயப் பாவாணரின் கருத்து,. இதனை வலியுறுத்தும் இந்நூல் முக்கியமானது.  

திராவிடம் என்று வடக்கு நாட்டவர்  தமிழை அழைத்தனர். அதனால்தான் கால்ட்வெல் தமிழிலிருந்து வந்த மொழிகளைத் திராவிட மொழிகள் என்றழைத்தார்.  அதாவது தமிழ் மொழிகல், தமிழை அடியாகக் கொண்ட  மொழிகள். முனைவர் அரியேந்திரன் மொழியியல் அறிஞர் தமிழ் வேர்ச்சொல்லிலிருந்து வடமொழி உட்படப் ஐரோப்பிய மொழிச் சொற்கள் பல தோன்றின என்பதையிட்டு ஆய்வுகள் பல செய்தவர். அவர்  பாவாணரின் வழி வந்தவர். 

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் , திராவிடம் தெக்கணம் பற்றி...


"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து 
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! "

இப்பாடல்  மனோன்மணீயம் பெ. சுந்தரனார் எழுதிய மனோன்மணீயம் காப்பியத்தில் வரும் தமிழ்த்தெய்வ வணக்கம் என்னும் பாயிரத்தில் வரும் வரிகள்.  இப்பாடல் தெளிவாகத் தென்னிந்தியாவைத் தெக்கணம் என்றும் , தமிழ் நாட்டைத்  திராவிட நல்  திருநாடு என்றும் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். இதனால்தான் 1914ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்திலுள்ள தமிழ்ச்சங்கங்கள் பலவற்றில் தமிழ்த்தாய் வாழ்த்தாக இப்பாடல் பாடப்பட்டு வந்தது. 

அதனால்தான் தமிழ் மொழிக்காக, அதன் வளர்சசிக்காகத் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்,திராவிடக் கழகத்தினர் திராவிடம் என்னும் சொல்லைத்  தமிழகத்தைக் குறிக்கப்பாவித்தனர். திராவிடக் கழகத்தினர் திராவிட் மொழி என்று குறிப்பிட்டது தமிழை. திராவிட நாடு என்று குறிப்பிட்டது தமிழ் நாட்டை.

அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தபோது இப்பாடலைத்தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக்க வேண்டுமென்ற கோரிக்கை பலமாக எழுந்தது. அதை அவர் நிறைவேற்றுவதற்குள் அறிஞர் அண்ணா மறைந்து விட்டார். அதனால்தான் கலைஞர் அதன் பின் ஆட்சிக்கு வந்ததும் அக்கோரிக்கையை நிறைவேற்றினார்.

Tuesday, January 6, 2026

வ ந கிரிதரன் பாடல் காட்சியும் சித்து விளையாட்டும்!


[ வ.ந.கிரிதரன் பாடல்கள்  - https://www.youtube.com/@girinav1  -   செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் கொடுக்கப்பட்ட எனது பாடல்கள். கேட்டு மகிழுங்கள். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 'சான'லை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள்.]
 

வ ந கிரிதரன் பாடல்   காட்சியும் சித்து  விளையாட்டும்!
இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

சிந்தையின் சித்து விளையாட்டு என்றால்
விந்தைமிகு விரிஉலகம் அனைத்தும் பொய்மையா?
பொய்மையை உண்மையென எண்ணி இருப்பதே
வையகத்தில் நம்வாழ்வு என்பதும் சரியா?

கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?

Monday, January 5, 2026

இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர் பாலு மகேந்திரா!


இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவாளருக்காக  இந்திய  மத்திய அரசின் தேசிய விருதினை பெற்றவர் பாலு மகேந்திரா!  - வ.ந.கி -

இந்தியச் சினிமா உலகில் இரு தடவைகள் சிறந்த ஒளிப்பதிவுக்காக இந்திய மத்திய அரசின் தேசிய விருதினைப் பெற்றவர் இவர். இவர் இயக்கத்தில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள் மூன்று தடவைகள் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன.  ஆறு  தடவைகள் சிறந்த இயக்குநருக்கான பிலிம்ஃபெயர் விருதினைப் பெற்றவர். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இப்பொழுது இவர் யாரென்று அறிந்திருப்பீர்கள். ஆம்! இவர்தான் பாலு மகேந்திரா.

வ.நகிரிதரன் பாடல் - வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு!


வ.நகிரிதரன் பாடல் - வாழ்க்கை ஒரு சதுரங்க விளையாட்டு!

இசை & குரல் - SUNO AI  ஓவியம் - AI

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமொரு விளையாட்டே.

சதுரங்கத்தில் வெற்றி பெறுவதற்கே
சிந்தித்து நகர்தல் முக்கியமே.
மண்ணில் வெற்றி பெறுவதற்கே.
எண்ணி நகர்தல்; அவசியமே.

சதுரங்கம் என்பதொரு விளையாட்டு.
அதுபோல் வாழ்வுமிங்கே விளையாட்டே.

Saturday, January 3, 2026

வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே!


வ.ந.கிரிதரன் பாடல்: எழுக அதிமானுடரே!

இசை & குரல் - SUNO AI   ஓவியம் - Google AI
பாடல் வரிகள் - வ.ந.கிரிதரன் 

'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்!
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்!

'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்!
காணும்  திசையெல்லாம்
'காங்ரீட்'காடுகள்.
'காங்ரீட்' காடுகள்.
'காங்ரீட்''காங்ரீட்''காங்ரீட்'

'காங்ரீட்''காங்ரீட்' 'காங்ரீட்!
'காங்ரீட்''காங்ரீட்' 'காங்ரீட்!

கதிர்களை உறுஞ்சும் சுவர்க்ள்.
கதிர்களை உறுஞ்சும் சுவர்க்ள்.
'காங்ரீட்' சுவர்கள்!

வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!


வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!


இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

ஆதி மானுடர் அண்ணாந்து  பார்த்த  இந்தநிலா
அரிஸ்டாட்டில் அன்று பார்த்தநிலா.
கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா.
புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா.

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

தண்ணொளி பொழிந்து மயக்கும் இந்தநிலா.
மண்ணகத்தார் வாழ்வில் நிறைந்த இந்தநிலா.
எண்ணத்தில் கற்பனை ஏற்றும் இந்தநிலா.
அண்ணாந்து பார்க்க வைக்கும் இந்தநிலா.

வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கையைப் பேணுவோம்.



வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கையைப் பேணுவோம். 

இசை & குரல்: AI SUNO| ஓவியம்: AI

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

விரிந்து கிடக்கிறது இயற்கை எங்கும்.
விரியும் அழகில் என்னை மறக்கின்றேன்.
விரிவான் என்னை எப்பொழுதும் மயக்கும்.
வியக்க வைக்கும் பசுமைமிகு வயல்கள்.

இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும் நான்
இயற்கையை இரசிப்பேன் எப்பொழுதும்.

Friday, January 2, 2026

பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்! - வ.ந.கிரிதரன் -




பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!

இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
அது மட்டுமா,
ஆம்! 
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.

அது மட்டுமா,
அவை  உரையாடவும் செய்கின்றன.
அவை  உரையாடவும் செய்கின்றன.

 தெரியுமா நண்பர்களே!
 தெரியுமா நண்பர்களே!

வ.ந.கிரிதரன் - பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!

 

வ.ந.கிரிதரன் - பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!

இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!
பேணுவோம்! மரங்களைப் பூசிப்போம்!


இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
அது மட்டுமா,
ஆம்! 
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
இரவில் மரங்கள் தூங்குகின்றன.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.
இரவில் 
மரங்களைத் தூங்க விடுங்கள்.

Thursday, January 1, 2026

வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!


வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!


இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

வந்தியத் தேவன் குந்தவை பார்த்தநிலா.
வரலாற்றைப் பார்த்து நிற்கும் இந்தநிலா.
கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா.
புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா.

உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.

தண்ணொளி பொழிந்து மயக்கும் இந்தநிலா.
மண்ணகத்தார் வாழ்வில் நிறைந்த இந்தநிலா.
எண்ணத்தில் கற்பனை ஏற்றும் இந்தநிலா.
அண்ணாந்து பார்க்க வைக்கும் இந்தநிலா.

அறிமுகம்: 'வ.ந.கிரிதரனின் பாடல்கள் ' (V.N.Giritharan Songs) 'யு டியூப் சானல்'!


என்னுடைய V.N.Giritharan Songs ( வ.ந.கிரிதரன் பாடல்கள்)  என்ற யூடியூப் சேனலில் , தளத்தின் வடிவமைப்புக்குரிய என் பாடல்களின் காணொளிகளை இணைத்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.  என் பாடல் வரிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு மூலம் இசை, குரல் இணைத்து உருவாக்கப்பட்ட பாடல்கள் இவை. அண்மையில் இணைக்கப்பட்ட பாடல்கள் சில வருமாறு:

1. என் குருமண் காடே! 
2. காலவெளி நாம்
3. இன்று புதிதாய்ப் பிற்ந்தேன் நான்.
4.  இயற்கையைப் பேணுவோம்!
5. மனத்தை மயக்கும் இந்த நிலா!

இவற்றுடன் மேலும் பல தமிழ்ப் பாடல்கள் , அவற்றுடன்  ஆங்கிலப் பாடல்கள் சிலவும் உள்ளன. அவற்றைக் கேட்டுப்பாருங்கள்.  உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் Subscribe பட்டனை அழுத்தி ஆதரவளியுங்கள். இதற்காக நீங்கள் பணமெதுவும் செலுத்த வேண்டியதில்லை. உங்களுடைய ஆதரவும் ஊக்கமும்  மிகவும் அவசியம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், மேற்படி  யூடியூப் சேனலுக்குச் சென்று, "Subscribe" பட்டனை அழுத்தி,  பாடல்களுக்கான காணொளிகளைப் பார்த்து மகிழ்வதுடன், உங்கள் கருத்துக்களையும் தெரிவிப்பதுதான்.

வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை.

வ.ந.கிரிதரன் பாடல்: நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. இசை & குரல்:  SUNO AI    ஓவியம்: AI நினைவுகள் இல்லையென்றால் இருப்பில்லை. நினைவு...

பிரபலமான பதிவுகள்