எனது இக்கவிதை பதிவுகள், திண்ணை இணைய இதழ்களில் வெளியானது. யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=KQHxnAmKGsQ
மண்ணில் புள்!
வனத்தில் புள்!
மனத்தில் புள்!
புள்ளினம் பறந்து செல்லும்.
உள்ளமோ சிறகடிக்கும்.
அவற்றை
அவதானிப்பதில்
அளப்பரிய இன்பம்.
புல்லரிப்பில் களிக்குமென்
உள்ளம்.
இறகசைப்பின் விரிவு கண்டு
ஒரே பிரமிப்பு!
அழுத்த வேறுபாடுகளை
எத்துணை அறிவு!
புள்ளினம் தந்திரம் மிக்கவை.
சிறகசைத்தலற்று விண்ணோக்கி
அல்லது மண் நோக்கி விரைதலில்
அவை பாவிக்கும் அறிவின் ஆழம்..
பிரயோகிக்கும் அறிவியலின் புரிதல்…
இவை கண்டு வியக்காமல் ஒருவரால்
எவ்விதம் இருக்க முடியும்?