- இசை & குரல் - AI Suno | ஓவியம் - AI
இக்கவிதை தாயகம் (கனடா) பத்திரிகை, பதிவுகள், திண்ணை இணைய இதழ்களில் வெளியான கவிதை. எண்பதுகளில் என் குறிப்பேட்டில் நான் எழுதி வைத்திருந்த கவிதைகளில் ஒன்று. கனடாவில் மங்கை பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'எழுக அதிமானுடா' என்னும் எனது முதலாவது கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் ஒன்று.
வ.ந.கிரிதரன் பாடல்: அதி மானுடரே! நீர் எங்கு போயொளிந்தீர்?
Concrete! Concrete! Concrete!
சுவர்கள்! கதிருறிஞ்சிக் கனலுதிர்த்திடுங்
கள்ளங்கரவற்ற வெண்பரப்புகள்.
'சீமெந்து' சிரிக்கும் நடைபாதைகள்.
அஞ்சா நெஞ்சத் தூண்களின்
அரவணைப்பில் மயங்கிக்
கிடக்கும் இட வெளிகள்.
வாயுப் படைகளின் வடிகட்டலில்
வடியுமுஷ்ணக் கதிர்கள்.
பனித் துளிகளின் குமிண் சிரிப்பினில்
சிலிர்த்திடும்
புல்வெளிகள் பற்றிய கற்பனைகளின்
இனிமையில், நீலப்படுதாவின் கீழ்
குளிர்ந்து கிடக்கும் நிலமடந்தை
பற்றிய சோக நினைவுகள்.
தலைகவிழ்ந்து அரவணைக்கும்
விருட்ஷக் கன்னியர்தம் மென்தழுவல்
ஸ்பரிசக் கனவுகள்.
செயற்கையின தாக்கங்கள்
படர்ந்திட்ட
இயற்கையின் தேக்கங்கள்.