பதிவுகள்.காம் வெளியீடாக வெளியான எனது கவிதைத் தொகுதியான 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' தொகுப்புக்கு எழுத்தாளரும், திறனாய்வாளருமான ரஞ்ஜனி சுப்பிரமணியம் எழுதிய விமர்சனம் SRS தமிழ் வானொலியின் விமர்சன அரங்கத்தில் ஒலி பரப்பாகியுள்ளது. அதனை ஒலி வடிவில் வழங்கியவர் நாடகவியலாளர் ஆனந்தராணி பாலேந்திரா.
சிறப்பாக எனது கவிதை நூலுக்கு விமர்சனம் எழுதிய ரஞ்ஜனி சுப்பிரமணியம் அவர்களுக்கும், அதனைச் சிறப்பாக வாசித்த நாடகவியலாளர் ஆனந்தராணி பாலேந்திரா அவர்களுக்கும், இதற்குச் சந்தர்ப்பம் வழங்கிய SRS தமிழ் வானொலியின் 'விமர்சன அரங்க'த்துக்கும் என் நன்றி. -
விமர்சன உரையினைக் கேட்பதற்கான இணைய இணைப்பு -
https://www.youtube.com/watch?v=DSLCdTHruDM
'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' கவிதைத் தொகுப்பினை வாசிக்க - https://noolaham.net/project/1139/113856/113856.pdf