- இசை & குரல்: AI SUNO -
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=HMvwPQdqfiA
கனவில் வந்தாய்! - வ.ந.கிரிதரன் -
கனவில் வந்தாய் அன்பே என் அதிகாலைக்
கனவில் வந்தாய்
உன்னைக் காணாமல் உருகும் நெஞ்சுக்கு
உன் வருகையால் ஒத்தடம் தந்தாய்.
என்னை மறக்க வைத்தாய்
உன்னை நினைக்க வைத்தாய்.
கனவில் வந்தாய் அன்பே. என் அதிகாலைக்
கனவில் வந்தாய்
நிச்சயம் உன் ஆழ் நினைப்போ
அச்சமயம் கனவைத் தந்ததோ நானறியேன்.
உண்மை அன்பு நினைக்க வைக்கும்
நினைப்பவரை நினைக்க வைக்கும் என்பாய் நீ.