- இசை & குரல் : AI Suno
ஆண் ஒருவனின் காதல் அனுபவத்தை விபரிப்பது. அவன் தன் இளமைப்பருவத்தில் எழுதிய காதல் கடிதம் பற்றியது. அதற்கு ஏற்பட்ட விளைவு பற்றி எடுத்துரைக்கின்றது.
யு டியூப்பிக் இப்பாடலைக் கேட்க - https://www.youtube.com/watch?v=_5GT7fiNEL0
முதற் காதல் கடிதம் - வ.ந.கிரிதரன்
நான் முதன் முதல் அனுப்பிய கடிதம்
நினைவில் இருக்கிறதா?
அன்பே. நினைவில் இருக்கிறதா?
என் அன்பே, நினைவில் இருக்கிறதா?
ஒரு காலைப்பொழுதில் கடிதம் தந்தேன்.
அன்பே, நினைவில் இருக்கிறதா?
மறு பேச்சில்லாமல் நீ கடிதம் பெற்றாய்.
உன்
முகம் பார்க்கும் சக்தியற்று நான்
ஓடி மறைந்தேன்.
நினைவில் இருக்கிறதா?
என், அன்பே உன்
நினைவில் இருக்கிறதா?
விரும்பினால் உன் கூந்தலில் மலர் சூடி வாவென்றேன்.
விரும்பாவிட்டால் கடிதத்தைக் கிழி என்றேன்.
அன்பே, நினைவிருக்கிறதா?
என் அன்பே நினைவிருக்கிறதா?
மீண்டும் வந்தபோது நீ மலர் சூடவில்லை.
மனமொடிந்து நானும் கிடந்தேன்.
ஒருவருக்கும் சொல்லாதே என்றேன்.
நீயோ
ஊர் முழுவதும் சொல்லித் திரிந்தாய்.
காதலைத் தெரிவித்தேன் அன்பே.]
குற்றம் என்ன கண்டாய். ஏன்
கூறினாய் ஊர் முழுவதும்.
அன்பே, ஏன் கூறினாய்
இருந்தாலும் நானுன் மேல் கோபம் கொள்ளவில்லை.
இன்னும் அன்பின் ஆழம் பெருகியது.
ஆனால்
அதன்பின் உன் இருப்பில் நான் குறுக்கிடவில்லை.
எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி விலகினேன்.
அன்பே, நினைவிருக்கிறதா?
முதுமையில் மீண்டுமுன்னைக் கண்டபோது கேட்டேன்.
மறுப்பைக் கூறாமல் ஏன் ஊர்முழுவதும் பரப்பினாய் என்று.
முறுவலித்தபடி நீ கூறினாய்
முதிர்ச்சி இல்லாத பருவத்தின் விளைவு என்று.
காதலிப்பது குற்றமல்ல அன்பே.
காதலை எடுத்துரைப்பதும் குற்றமல்ல அன்பே.
காதல் மனிதரின் வளர்ச்சிப் படிக்கட்டுதானே.
காதலைக் கண்டு காத தூரம் ஓடுவதுமேன்.
நான் முதன் முதல் அனுப்பிய கடிதம்
நினைவில் இருக்கிறதா?
அன்பே. நினைவில் இருக்கிறதா?
என் அன்பே, நினைவில் இருக்கிறதா?
ஒரு காலைப்பொழுதில் கடிதம் தந்தேன்.
அன்பே, நினைவில் இருக்கிறதா?
மறு பேச்சில்லாமல் நீ கடிதம் பெற்றாய்.
உன்
முகம் பார்க்கும் சக்தியற்று நான்
ஓடி மறைந்தேன்.
நினைவில் இருக்கிறதா?
என், அன்பே உன்
நினைவில் இருக்கிறதா?
No comments:
Post a Comment