- இசை & குரல் ; AI SUNO | ஓவியம்: AI
யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=6i9fbpElLOs
எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு - வ.ந.கிரிதரன் -
நான் பிரபஞ்சத்தில் அல்லது பிரபஞ்சங்களில் எம்மையொத்த, கீழான அல்லது மேலான உயிர்கள் இருக்கும் என்பதைத் திடமாக நம்புபவன். அவற்றின் பரிமாணங்கள் எம்மைப்போல் முப்பரிமாணங்களுக்குள் அகப்பட்டவையாக இருக்கத்தேவையில்லை என்பதையும் நம்புகின்றேன். அவை நாம் உருவாக்கப்பட்ட இரசாயனப்பொருட்கள் மூலம் உருவாகியிருக்க வேண்டிய அவசியமும் இல்லையென்பதையும் திடமாக நம்புபவன்.
'எங்கோயிருக்கும் ஒரு கிரகவாசிக்கு' என்னுமிக் கவிதை எண்பதுகளின் ஆரம்பத்தில் என் குறிப்பேடொன்றில் முதன் முதலில் எழுதப்பட்டது. கனடாவிலிருந்து வெளியான தாயகம் பத்திரிகையில் வெளியானது. பின்னர் எனது கவிதைத்தொகுதிகளான எழுக அதிமானுடா, ஒரு நகரத்து மனிதனின் புலம்பல் ஆகிய தொகுப்புகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இக்கவிதையை சில மாற்றங்களுடன் இங்கு பாவித்துள்ளேன்.
எங்கோ இருக்கும் கிரகவாசியே!
என் உனக்கான கடிதமிது.
உன்னை நான் பார்த்ததில்லை.
உன்னை நான் பார்க்கப்போவதுமில்லை.
உனக்கும் எனக்கும் இடையிலோ
ஒளியாண்டுத் தடைச் சுவர்கள்.
காலத்தின் மாய வேடங்கள்.
ஆம்!
உன்னை நான் பார்த்ததில்லை.
உன்னை நான் பார்க்கப்போவதுமில்லை.
எங்கோ இருக்கும் கிரகவாசியே!
என் உனக்கான கடிதமிது.