- குதிரைகளில் நடேசனும், நண்பரும் - |
பதிவுகள் இணைய இதழில் எழுத்தாளர் நடேசன் எழுதும் 'பஹல்காம் (Pahalgam) நினைவுகள்' பயணத் தொடரின் முதல் அத்தியாயம்.
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
- குதிரைகளில் நடேசனும், நண்பரும் - |
![]() |
- கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் - |
![]() |
- எழுத்தாளர் குந்தவை - |
*digital art techology by Ramanitharan Kandiah
யதார்த்தம், காலம் பற்றிய வானியற்பியல் அறிஞர் பிரையன் கிறீனின் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டும் சிந்தனைகள்...
வானியற்பியல் அறிஞர் பிரையன் கிறீனின் 'காலம்' பற்றிய இச்சிந்தனை இது பற்றிய விரிவான சிந்தனையைத் தூண்டுவது. எம் பிரபஞ்சத்தில் ,எம் இருப்பில் கணந்தோறும் நடைபெறும் செயல்களை, அடுத்தடுத்த கணங்களின் தொடரில் ஒழுங்கமைத்து நாம் காலத்தை அனுபவிக்கின்றோம். ஆனால் , ஏனைய அண்டவெளி உயிரின நாகரிகங்கள் நாம் உணர்வது போல் காலத்தை உணராமல் இருந்தால், இன்னுமொரு விதமாக அவர்கள் இருப்பு இருந்தால், எமக்குக் காலம் என்னும் பரிமாணம் இருப்பது போல் ,அவ்வுயிரினங்களுக்கு யதார்த்தம் என்பதை உணர்வதற்கு இன்னுமொரு பரிமாணம் இருந்தால்... எத்துணை அற்புதமான சிந்தனை! இவ்வகையான சிந்தனைகளை இவரது எழுத்துகளில் காணலாம். அவை என்னைக் கவர்ந்தவை. இவ்வகையான இவரது சிந்தனைகள்தாம் இவரை என் அபிமானத்துக்குரிய வானியற்பியல் அறிஞர்களில் ஒருவராக்கியுள்ளது
https://www.facebook.com/share/p/1BRw8CpfEP/
பிரபஞ்சங்களை இணைக்கும் 'புழுத்துளை' (wormhole)
மிஷியோ ஹகோ எனக்குப் பிடித்த வானியற்பியல் அறிஞர்களில் மற்றொருவர். இவரது வானியற்பியல்சார்ந்த எழுத்துகளும் எம் சிந்தனையை விசாலிக்க வைப்பவை. ஐன்டைனின் 'பொதுச்சார்பியல் தத்துவம்' எதிர்வு கூறும் 'புழுத்துளை' (Wormhole) பற்றிய எளியமையான, தெளிவான தன் கருத்துகளை இக்காணொளியில் மிஷியோ ஹகோ விபரிக்கின்றார்.
'புழுத்துளை' என்பது இரு வேறு பிரபஞ்சங்களை இணைப்பதற்கான அல்லது ஒரே பிரபஞ்சத்தில் தொலைதூரத்து இடங்களை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்கான குறுக்குப் பாதை என்பதை ஐன்ஸ்ட்டைனின் இக்கருதுகோள் எடுத்துரைக்கின்றது.
https://www.facebook.com/share/p/16wVnFAvu1/
[பதிவுகள் இணைய இதழ்
(https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம்
ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும்
தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும்
இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர்
திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில்
வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப்
படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ்
இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள்
எடுத்துரைக்கும். ]
டாக்டர் நடேசனின் 'வாழும் சுவடுகள்' தமிழ் இலக்கிய உலகிற்கு நல்லதொரு வரவு. புது முயற்சியும் எனலாம். 'நாலுகால் சுவடுகளே' 'வாழும் சுவடுகளான' தலைப்பு மாற்றத்தினை நூலிற்கான எஸ்.பொ.வின் முன்னீடு தெரிவிக்கின்றது. மனிதரின் மிருக அனுபவங்களை வைத்துப் புனைகதைகள் பின்னப்படும் இக்காலகட்டத்தில் 'வாயில்லாச் சீவன்களுடனான' மனிதரின் அனுபவங்களை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் கூறும் 'வாழும் சுவடுகள்' இன்னுமொரு விதத்திலும் சிறந்து விளங்குகின்றது. ஆசிரியரின் எழுத்தாற்றல் காரணமாக அவர்தம் அனுபவங்கள் ஈசாப் கதைகளைப் போல் சில சமயங்களில் தீர்வினைத்தரும் குறுங்கதைகளாக விளங்கிச் சிறக்கின்றன. வித்தியாசமான அனுபவங்கள் நல்ல சிறுகதைகளைப் போல் படிப்பதற்குச் சுவையாகவிருக்கின்றன.
'நடுக்காட்டில் பிரேத பரிசோதனை' யானைக்கு நடந்த பிரேத பரிசோதனையைக் கூறும். ஆசிரியரின், டாக்டரின் ஆரம்ப அனுபவம் 'துப்பறியும் சாம்பு' கதையொன்றை வாசித்தது போலொரு கதையாக உருவான நல்லதோர் அனுபவம். சிக்கலான பிரச்சினைகளை எவ்விதம் சாதாரண அனுபவ அறிவு மூலம் தீர்க்க முடியுமென்பதற்கு உதாரணமாக இக்கதையினைக் கூறலாம். ஆரம்பத்தில் பயந்து கொண்டு சென்ற டாக்டர் தனது சமயோசிதத்தால் நல்லதொரு தீர்வினைத் தனது தடுமாற்றத்தினை வெளிக்காட்டாமல் தீர்த்துத் துப்பறியும் சாம்புவாய்ப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் முன்னால் நிமிரும் போது வாசிப்பவர் இதழ்க் கோடியில் புன்னகையும் கூடவே தோன்றி விடுகின்றது.
'கலப்பு உறவுகள்' சிறிய இனப் பசுவொன்றிற்குப் பெரிய இனக்காளையன்றுடன் சினைப்படுத்தியதால் உண்டான பிரசவச் சிக்கலைக் கூறும். மனிதருக்கும் இது பொருந்துமாவென்பதை பிரசவ வைத்திய கலாநிதிகள் தான் ஆய்ந்து அறிவிக்க வேண்டும். 'ராமசாமி கோனாரின் கவலைக்கு மருந்து' அவரது வாழ்வுப் பிரச்சினை அவரது மாடுகளின் அனுபவத்தினூடு ஒப்பிட்டு ஆராயப்படும் பொழுது சிறுகதைகளுக்குரிய அம்சங்களுடன் விளங்குகின்றது. இக்கதையில் தமிழகத்தில் தமிழ்ச் சொற்களாகப் பரவிக்கிடக்கும் ஆங்கிலச் சொற்களின் பாவனையும் அங்கதத்துடன் சுட்டிக்காட்டப் படுகிறது. தமிழ் நாட்டில் 'சோப்பு' என்ற தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்ததைக் கூறும் அனுபவம் அது.
![]() |
- இயக்குநர் மிருணாள் சென் - |
இவ்வருடத்தய தாதா சாகேப் பால்கே விருது மிருனாள் சென்னுக்குக் கிடைத்துள்ளது. விக்ரம் - சிறந்த நடிகர் விருதை பிதாமகனுக்காகப் பெற்றிருக்கிறார். பாடம் ஒன்னு ஒரு விலாபம் என்ற மலையாளப் படத்திற்காக மீரா ஜாஸ்மினுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளது. மிருனாள் சென்னுக்கு விக்ரமைப் போல சரியாக இருமடங்கு வயது. (விக்ரம் 1964ம் ஆண்டு பிறந்தவர். ம்ருனாள் சென் 1923ம் ஆண்டு பிறந்தவர்). இன்றைய வங்காளதேசத்தில் பிறந்து பின் (இன்றைய) மேற்கு வங்கத்துக்கு குடிபெயர்ந்தவர் அவர். கம்யூனிச கட்சியின் கலாச்சாரப் பிரிவில் தன்னை இணைத்துக் கொண்டு மக்களின் போராட்டங்களைத் தான் கண்ட பாதிப்பில் படங்களை எடுத்தவர் ம்ருனாள் சென். கம்யூனிச கோட்பாட்டின் வர்க்க எதிரி முறையை இந்தியக் கண்ணோட்டத்தில் எதிர் கொண்டு, ஒரே வர்க்கத்தினுள் நிலவும் முரண்பாடுகளை, எதிர் சக்திகளை மையப் படுத்தி அவர் எடுத்த படங்கள் உலகளாவிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஐம்பது வருடங்களாக தொடர்ந்து சினிமாத்துறையில் தமது பங்களிப்பை செய்திருக்கின்றார் . விருதுக்குப் பின்னும் தமது பணி தொடரும் என்று தெரிவித்துள்ளார் மிருனாள் சென்.
[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
மார்ச் 2010 இதழ் 123 -
![]() |
- பொ. கருணாகர்மூர்த்தி - |
![]() |
வசீகரன், நோர்வே |
![]() |
- தாஜ் (சீர்காழி) - |
- கவிஞர் கண்ணதாசன் - |
"முற்றாத இரவொன்றில் நான் வாட..
முடியாத கதை ஒன்று நீ பேச..
உற்றாரும் காணாமல் உயிரொன்று சேர்ந்தாட..
உண்டாகும் சுவையென்று ஒன்று..
வெகுதூரம் நீ சென்று நின்றாலும் - உன்
விழி மட்டும் தனியாக வந்தாலும்..
வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று..
பெறுகின்ற சுகமென்று ஒன்று".. - கவிஞர் கண்ணதாசன் -
இவ்விதம் எளிமையான சொற்றொடர்களில் , அனுபவத்தில் தோய்ந்த காதல் போன்ற மானுடர்தம் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிறந்தவர் கவிஞர் கண்ணதாசன்.
'முற்றாத இரவு' அற்புதமான படிமம். முற்றாத என்னும் சொல்லை நாம் இரு வகைகளில் தமிழில் பாவிக்கின்றோம். ஒரு விடயம் முடிவுக்கு வராத விடயத்தைக்குறிக்கப் பாவிக்கின்றோம். அதே சமயம் முற்றாத கனி என்றும் பாவிக்கின்றோம்.
இரவு நீண்டிருக்கின்றது. முடிவற்று விரிந்து கிடக்கின்றது. முடிவற்ற கனியாகவும் இருக்கின்றது இரவு. இந்த இரவில் அவனது காதல் உணர்வுகளுக்குத் தீர்வுமில்லை. முடிவுமில்லை. எவ்வளவு சிறப்பாகக் கவிஞர் கண்ணதாசன் முற்றாத இரவு சொற்றொடர் மூலம் காதலால் வாடும் அவனது உள்ளத்தை, அதே சமயம் கனியாத, முற்றாத அவனது காதலின் தன்மையை வெளிப்படுத்துகின்றார். கனியாத, முடிவுக்கு வராத அவனது காதலுணர்வுகள் அவனை வாட்டுகின்றன அந்த முற்றாத இரவைப்போல்.
முன்பெல்லாம் அரங்காடலைச் சேர்ந்தவர்கள் இந்த பள்ளிக்கூட ஒன்றுகூடல்கள் மற்றும் வானவில் திரையிசை நடனங்களை நக்கலடிப்பார்கள். குறிப்பாக ஊரைப்பற்றி எடுக்கும் நாடகங்களை அவர்கள் மிகவும் மோசமாக விமர்சிப்பார்கள். இன்று அவர்களே அந்த இடத்தில்தான் வந்து நிக்கிறார்கள்! சென்ற அரங்காடல்களைப் பற்றியும் இதே மாதிரியான மனப்பதிவே மிஞ்சுகிறது. இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பின்பு வந்த அரங்காடல்கள் தம் கலைத்தன்மையை முற்றாக இழந்து விட்டன. இனி என்கிற நம்பிக்கையும் போய்விட்டது. வெறும் கேளிக்கையாகவும், அரங்காடல் என்பது ஒரு உயர்வர்க்கத்தினர் விழாவாகவும் ஆகிவிட்டது.
![]() |
- C. அண்ணாமலை - |
மேலும் 'தமிழர்கள் சுவிஸ் நாட்டின் பெரிய நாடகக்குழுக்கள் அரங்கேற்றும் இடங்களில் தமிழ் நாடகங்களும்; டொய்ச் - தமிழ் படைப்புகளும் மேடையேறுவது அடுத்தகட்டமாக இருக்க முடியும்' என்கிறார். எண்பதுகளின் தொடக்கம் உலகம் முழுவதும் தங்கள் விருப்பங்கட்கு மாறாய் வாழ நேர்ந்த ஈழத்தமிழர்கள், சுவிஸ் நாட்டிற்கு வந்தபோது குளிர்தான் பெரும் பிரச்னையாக இருந்திருந்தது. 'நான் நமது நாட்டுச்சூழலுக்கேற்ற உடையுடன் வந்திருந்தேன். குளிருக்கேற்ற எந்தவித உடுப்புகளுடனும் வரவில்லை. ஐஸ்கட்டிகளை எடுத்து விளையாடினேன். முதலில் ஒன்றும் தெரியவில்லை பின்னர் அதன் குணத்தை முழுதாய் உணர்ந்து நடுங்கினேன்' என்கிறார் அன்ரன் பொன்ராசா.
![]() |
- அஜீவன் (ஜீவன் பிரசாத்) - |
[பதிவுகள் இணைய இதழ் (https://www.geotamil.com, https://www.pathivukal.com ) 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
ஜூன் 2008 இதழ் 102
ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நடைபெற்ற சிட்னி அரபுத் திரைப்படவிழா 2008 இல், பலஸ்தீனப் படங்கள் பிரிவில் திரையிடப்பட்ட இரும்புச் சுவர் (The Iron Wall) என்ற திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இஸ்ரேலிய அரசு தனது சியோனிசவாத (Zionism) இன அழிப்புக் கொள்கைகள் மூலம் பலஸ்தீன மக்களை எவ்வாறு தொடர்ந்து நிர்மூலமாக்கி அழித்து வருகிறது என்பதை படம் தெளிவாக எடுத்துக் காட்டியது. 52 நிமிடங்களில் ஒரு மக்கள் கூட்டம் அனுபவிக்கும் துன்பங்களையும் கொடுமைகளையும் மனதில் தைக்கும் வண்ணம் சிறந்த முறையில் வெளிப்படுத்திய ஆவணப்படம் இது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது திரையரங்கில் கேட்ட பல விசும்பல் ஒலிகள் படம் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிப்படுத்தின.
படத்தின் இயக்குனர் மொஹமட் அல்அதார் ஒரு பலஸ்தீனர். மனித உரிமைகளுக்காக நீண்டகாலமாகப் போராடிவரும் செயல்வீரர். 2002 இல் மானிட உயர்வுக்கான மார்ட்டின் லூதர் கிங் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பலஸ்தீனர்களுக்கு இஸ்ரேலிய அரசினாலும், சியோனிஸ யூதர்களாலும் இழைக்கப்படும் கொடுமைகளை, பலஸ்தீனர் அல்லாதவர்களே படத்தில் விபரிக்கிறார்கள். இஸ்ரேலிய அரசின் நடவடிக்கைகள் அநீதியானவை என்று கருதும் இஸ்ரேலிய யூத அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், இஸ்ரேலிய இராணுவத்திலிருந்து விலகிய போர்வீரர்கள் எனப் பலதரப்பினரும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அவர்களுடைய கருத்து சரியானது என நிரூபிக்கும் வகையில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவங்கள் படத்தில் காட்சிகளாக விரிகின்றன. இக்காட்சிகள் படத்திற்காக அமைக்கபட்டனவாக இல்லாமல், அவை உண்மையாக நடைபெறும் போது படம் பிடிக்கப்பட்டவையாக இருப்பதால், அக்காட்சிகளின் வீரியம் மனதில், மனச்சாட்சியில் ஓங்கி ஆணி அடிக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
பதிவுகள் பெப்ருவரி 2004 இதழ் 50
'பதிவு'களில் அன்று - சாகித்ய அகாதெமியின் கருத்தரங்கு!
[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முரசு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
பதிவுகள் யூலை 2004 இதழ் 55
எழுத்தாளர் மா.அரங்கநாதனின் படைப்புலகம்!
ஐம்பதுகளில் பிரசண்ட விகடன், பொன்னி, புதுமை ஆகிய இலக்கிய இதழ்களில் எழுதியவர். சாகித்ய அகாதமிக்காக சிறுகதைகள் மொழிபெயர்த்துள்ளவர். தமிழக அரசு நாவல் பரிசு, கோவை வில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, திருப்பூர்த் தமிழ்ச் சங்கப் பரிசுகள் பெற்றவர். 'பொருளின் பொருள் கவிதை' என்ற கட்டுரை நூல், வீடு பேறு, ஞானக்கூத்து, காடன்மலை முதலிய மீன்று சிறுகதைத் தொகுப்புகள், 'பறளியாற்று மாந்தர்' என்ற புதினம் ஆகியவற்றின் படைப்பாளி. தமிழின்பால் அபரிமிதமான அபிமானம் கொண்டவர். எண்பதுகளில் 'மூன்றில்' என்ற சிற்றிதழின் நிறுவனர்- ஆசிரியர் மற்றும் 'மூன்றில் ' என்ற இலக்கிய அமைப்பின் வாயிலாக பல நல்ல புத்தகங்களையும் வெளியிட்டவர். இத்த்னை சிறப்பிற்கும் உரிய திரு. மா.அரங்கநாதனுக்கு 17-04-01 அன்று சென்னையில் இலக்கிய ஆர்வலர்களால் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. திரு.ச.சீ.கண்ணனை அடுத்து அமர்நதா, 'வெளி' ரெங்கராயன், லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் மா.அரங்கநாதனின் படைப்புத் திறனுக்கான பதில் மரியாதையாக ஏற்பாடு செய்திருந்த கூட்டம் இது.
கூட்டத்தில் மா.அரங்கநாதனின் படைப்புலகம் பற்றியும், அவருடைய 'மூன்றில்' சிற்றிதழின் இலக்கியப் பங்களிப்பு குறித்தும் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. மூன்றில் ஏறத்தாழ 20 இதழ்களுக்கு மேல் வெளியாகியது. பலதரப்பட்ட இலக்கியப் போக்குகளுக்கும் அது இடமளித்தது. அதன் முதல் சில இதழ்களுக்கு திரு.க.நா.சு ஆசிரியராக இயங்கினார். 'மூன்றில்' சார்பில் நடத்தப்பட்ட மூன்றூ நாள் இலக்கியக் கருத்தரங்கம் 'First of Kind' என்று சொன்னால் மிகையாகாது. மேலும் மூன்றில் என்பது வெறும் இலக்கிய இதழாக மட்டும் செயற்படாமல், ஒரு சிறு பத்திரிகை இயக்கமாகவும் செயல்பட்டது. மூன்றில் பதிப்பகம் மூலம் நல்ல பல புத்தகங்கள் வெளியாகின. கோபிக்கிருஷ்ணனின் 'சமூகப்பணி- அ-சமூகப்பணி-எதிர்-சமூகப்பணி' மற்றும் 'உள்ளேயிருந்து சில குரல்கள்' முதலிய புத்தகங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சென்னை மாம்பலம் ரங்கநாதன் தெருவில் இயங்கிய மூன்றில் அழுவலகம் இலக்கியவாதிகள் இளைப்பாறும், உத்வேகம் பெறும் இடமாக இருந்தது என்றால் மிகையாகது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும் நினைவு கூர்ந்தார்கள்.
நடிகர் ரஞ்சனின் நினைவு தினம் செப்டம்பர் 12. என் தந்தையார் காலத்து 'சுப்பர் ஸ்டார்'கள் எம்.கே.டி பாகவதர் & பி.யூ.சின்னப்பா. எம் காலத்து எம்ஜிஆர் & சிவாஜி போல். எம் காலத்து இளம் சுப்பர் ஸ்டார்கள் ரஜனி & கமல் போல் அவர் காலத்து இளம் சுப்பர் ஸ்டார்கள் எம்.கே.ராதா & ரஞ்சன்.
ரஞ்சன் வாள் வீச்சு, குதிரையேற்றம் போன்றவற்றில் வல்லவர் என்றும், M.Lit பட்டதாரியென்றும், விமானம் ஓட்டும் அனுமதிப்பத்திரம் உள்ளவர் என்றும் , பாடும் வல்லமை மிக்கவர் என்றும் அப்பா அடிக்கடி நடிகர் ரஞ்சனைப் புகழ்வதுண்டு. அப்போதெல்லாம் ரஞ்சன், எம்.கே.ராதா & டி.ஆர்.ராஜகுமாரி நடித்த ஜெமினி ஸ்டியோ தயாரிப்பாக , எஸ்.எஸ்.வாசனின் இயக்கத்தில் தமிழ் , ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்து பெரும் வசூலைப்பெற்றுச் சாதனைகள் நிலைநாட்டிய சந்திரலேகா (1948) திரைப்படம் பற்றியும் குறிப்பிடுவார். அதன் காரணமாகவே நான் படம் பார்க்கும் பதின்ம வயதுகளில் மீள் வெளியீடாக வெளிவந்த சந்திரலேகா திரைப்படம் பார்த்தேன். பிரமித்தேன்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, வங்கமொழி எனப் பன்மொழிகளிலும், 10,000ற்கும் அதிகமான பாடல்களைக் குறுகிய காலத்தில் பாடிப் புகழ் பெற்ற பாடகி.
'கருத்தம்மா' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் அவருக்கு இந்திய மத்திய அரசின் சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றுத்தந்த பாடல். கவிஞர் வைரமுத்துக்குச் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினையும் பெற்றுத்தந்த பாடல். கூடவே சிறந்த குடும்பச்சித்திரத்துக்கான தேசிய விருதினையும் கருத்தம்மா பெற்றுள்ளது. 'கருத்தம்மா'வின் இசை ஏ.ஆர்.ரகுமான். இயக்கம் - பாரதிராஜா.
இன்று, செப்டம்பர் 11, மகாகவி பாரதியார் நினைவு தினம். கவிஞர்களில் என்னை ஈர்த்தவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பாரதியார்.
குறுகிய அவர் வாழ்வில் அவர் சாதித்தவை பிரமிப்பினையூட்டுபவை. , தேசிய விடுதலையை, வர்ண விடுதலையை, வர்க்க விடுதலையை, மானுட விடுதலையைப் பாடிய கவிஞர் அவர். நாட்டு, உபகண்ட , சர்வதேச அரசியலை நன்கு அறிந்தவர் அவர். அதை அவரது எழுத்துகள் புலப்படுத்தும். அவை கூடவே அவரது பரந்த வாசிப்பையும், சிந்தனையின் ஆழத்தையும் வெளிப்படுத்தும்.
அவரது சொற்கள் எளிமையானவை. தெளிவானவை. அதே சமயம் ஆழமானவை. அத்துடன் தர்க்கச்சிறப்பையும், இருப்பு பற்றிய தேடலையும் கொண்டவை. அத்துடன் அவை தீர்க்க தரிசனம் மிக்கவை. தான் வாழ்ந்த காலத்தை மீறிச் சிந்தித்த , செயற்பட்ட எழுத்தாளர் அவர். அதனால்தான் அவரால் அக்காலகட்டத்தில் தான் வாழ்ந்த சூழலை மீறிப் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுக்க முடிந்தது. தீண்டாமைக்கெதிராகக் குரல் கொடுத்த முடிந்தது.
கவிதை, புனைகதை, மொழிபெயர்ப்பு, அரசியல் ஆய்வு, வசன கவிதை என அவரது இலக்கியப் பங்களிப்பு பரந்து பட்டது. அவரது நினைவு நாளான இன்று எனக்குப் பிடித்த அவர்தம் கவிதை வரிகளில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கின்றேன். அத்துடன் டிஜிட்டல் ஓவியத் தொழில் நுட்பவியலாளரான எழுத்தாளர் இரமணிதரன் கந்தையா (Ramanitharan kandiah) அண்மையில் வரைந்த பாரதியாரின் ஓவியத்தையும் நன்றியுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.
- எழுத்தாளர் அ.ந.கந்தசாமி - *அ.ந.கவுக்கான டிஜிட்டல் ஓவியத்தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி - வ.ந.கி இலங்கை முற்போக்குத் தமிழ் இலக்க...