கட்டடக்கலைஞர் இ. மயூரநாதனின் 'யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948) ' மிக முக்கியமானதொரு வரலாற்று ஆவணம். 493 பக்கங்களைக் கொண்ட இநந நூலை குமரன், எழுநா,ஆதிரை பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. மிகுந்த உழைப்பின் அறுவடை இவ்வாய்வு நூல். அதற்காக நூலாசிரியர் மயூரநாதனுக்கும், வெளியிட்ட பதிப்பகங்களுக்கும் அதன் பின்னணியில் இருந்தவர்களுக்கும் நாம் அனைவரும் நன்றிக் கடன்பட்டிருக்கின்றோம். நூலைபெறுவதற்கு உதவிய ஓராயம் அமைப்பினருக்கும் நன்றி.
தமிழரசர் காலத்து நல்லூர் தொடக்கம், போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலகட்டங்களைச் சேர்ந்த யாழ்ப்பாண நகரம் பற்றிய, சரித்திரக் குறிப்புகள், நில வரைபடங்கள் , வெளிக்கள ஆய்வுத் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மயூரநாதன் இந்நூலை உருவாக்கியுள்ளார். இந்நூலை உருவாக்க மயூரநாதன் பாவித்துள்ள ஆதாரங்கள் மேலும் பலரின் ஆய்வுகளுக்கு அத்திவாரங்களாக உதவக்கூடியவை.
![]() |
- கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன் - |
இந்நூலின் நல்லூர் பற்றிய பகுதியில் மயூரநாதன் எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலையும் கவனத்திலெடுத்து தன் கருத்துகளை முன் வைத்திருக்கின்றார். அதற்காக என் நன்றி அவருக்குண்டு.