ஏப்ரில் 2007 இதழ் 88
'பெரியார்' வருகிறார்!
![]() |
| - தாஜ் (சீர்காழி) - |
இன்னொருப் பக்கம் சமூக இழுக்குகளை சாடிய முற்போக்கான நாடகங்களுக்கு தடையில்லாமல் பலமுறை தலைமை ஏற்றிருக்கிறார், பலவற்றைப் பாராட்டியும் இருக்கிறார். அதில் நடித்த சில நடிகர்களுக்கு பட்டங்கள்கூட தந்திருக்கிறார். மேடை ஊடகங்கள் என்கிறவகையில் நாடகமும், சினிமாவும் ஒன்றின் இரண்டுப்பக்கங்களே. அந்த வகையில் பார்த்தால், முற்போக்கான அந்த மேடைநாடகங்கள் மாதிரி நமது சினிமாவும், மூடத்தனங்களிலிருந்து நம் மக்கள் விடுப்பட உதவக்கூடியதாக இருந்திருக்கும் பட்சம் அதை அவர் பாராட்டவே செய்திருப்பார்.
திரைப்படத்தில் பெரியார் என்பது புதிய செய்தியல்ல! 'இயக்குனர் ஞானசேகரின் பெரியார்' என்பதுதான் புதிய செய்தி. நடிகை ஜெயதேவியும், இயக்குனர் பிரபாகரனும் பெரியாரை திரையேற்றிக் காட்டியிருக்கிறார்கள். பெரியாருடைய பல்வேறு கருத்தாக்க ங்களைக்கூட கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தொடங்கி, இன்றைய சத்தியராஜ், மணிவண்ணன், விவேக் வரையிலான பல கலைஞர்கள் திரையில் மக்கள் வரவேற்புடன் வெளிப்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். கூட அந்தப் பட்டியலில் இருந்திருக்கிறார். நடிகர்வேல் எம்.ஆர்.ராதா அந்தவகையில் திரையில் புரட்சி செய்தவராக அறியப்படுகிறார். ஆனால் இந்த சமூகம் அவ்வளவையும் ரசித்து, சிரித்து, உள்வாங்கி ஜீரணித்துவிட்டு தன்போக்கில்தான் போய்கொண்டிருக் கிறது. 'இந்த' மகத்துவம் பொருந்தியச் சமூகத்திற்காகத்தான் இன்றைக்கு இந்த 'பெரியார்' படம்! நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.





























