"நல்ல எழுத்தாளர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். மோசமான எழுத்தாளர்கள் சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். - --சுந்தர ராமசாமி"
டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, ஜெயகாந்தன், பஷீர், தகழி, ஜானகிராமன், புதுமைப்பித்தன், பாரதியார்.. தனது குறுகிய கால வாழ்வில் இவர்களைப்போல் பலர் நிறைய எழுதியவர்கள். ஜெயமோகன் போன்றவர்கள் நிறைய எழுகின்றவர்கள். சுந்தர ராமசாமியே சுறுசுறுப்பாய் இயங்கிவர்தான். நிறைய எழுதியவர்தான். எனவே சு.ரா.வின் கூற்றைப் பொதுவானதொரு கூற்றாக எடுக்க முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இவ்விதம் கூறுவது சிலருக்கு வாடிக்கை. என்னைப்பொறுத்தவரையில் உண்மையான எழுத்தாளர் பாரதியைப்போல் நிறைய வாசிப்பவர்; நிறைய எழுதுபவர்; நிறைய சிந்திப்பவர். அருந்ததி ராயைப்போல் , மெளனியைப்போன்றவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் அரிதானவர்கள்.


















