[பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து, 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்துகொள்வோம்' என்னும் தாரகமந்திரத்துடன் ,எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் இணைய இதழ். ஆரம்பத்தில் முர்சு அஞ்சல் எழுத்துருவில் தொடங்கி, பின்னர் திஸ்கி எழுத்துருவுக்கு மாறி, தற்போது ஒருங்குறி எழுத்துருவில் வெளியாகின்றது. இப்பகுதியில் பதிவுகள் இணைய இதழின் ஆரம்பக் காலத்துப் படைப்புகள் ஆவணப்படுத்தப்படும். கணித்தமிழின் வளர்ச்சியை, புகலிடத்தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை , இணைய இதழ்களின் வளர்ச்சியை இப்படைப்புகள் எடுத்துரைக்கும். ]
பதிவுகள் டிஸம்பர் 2003 இதழ் 48
பதிவுக'ளில் அன்று - பண்டிதர் வி.சீ.கந்தையாவின் ”மட்டக்களப்புத் தமிழகம்” பாரிஸ் நகரில் எக்ஸில் வெளியீடாக.... - இன்பவல்லி -
உடல் உழைப்பாளர்களையும், அடித்தட்டு மக்களையும் அதிகளவில் கொண்ட பாரிஸ் - 18 இல் கடந்த 16-11-2003 அன்று மட்டக்களப்பு தமிழகம் எனும் வரலாற்று நு¡ல் வெளியீட்டு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழர்கள் வணிகரீதியாக மையங்கொண்டுள்ள லாசப்பல் (டுய ஊ¡யிநடடந) எனும் இடத்தில் அமைந்துள்ள தமிழர் வித்தியாலயத்தில் சுமார் மாலை 5மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு இரவு 9 மணிவரை நீடித்தது. ”எக்ஸில்” வெளியீட்டகத்தின் மூன்றாவது வெளியீடாக அமைந்த மட்டக்களப்பு தமிழகம் ஜரோப்பாவில் இரண்டாவது தடவையாக வெளியிடப்பட்டுள்ளது. முதலாவது தடவையாக சுவிஸ் -சூரிச் நகரில் 12.10.2003 வெளியீட்டு வைக்கப்பட்டது. 1962 ம் ஆண்டு கிழக்கிலங்கை தோறும் ஆலயங்களிலும், பண்டைத்தமிழ்ப் புலவர்களிடத்திலும் அடங்கிக்கிடந்த கல்வெட்டுக்கள் தொகுக்கப்பட்டு விளக்கவுரையுடன் முதன்முதலில் ”மட்டக்களப்பு மான்மிகம்” அச்சுருவம் பெற்றது. இதையடுத்து வீ.சி.கந்தையா பண்டிதர் அவர்கள் 1949 இலிருந்து எழுதிவந்த ஆராய்ச் சிக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு முழுமையான ஒரு வரலாற்று நு¡லாக 1964 இல் ”மட்டக்களப்பு தமிழகம்” எனும் நு¡ல் வெளியிடப்பட்டது. தமிழர் குடியேற்றம், நாட்டுக்கூத்துகள், பாடுமீன், புலவர் பரம்பரை, பண்டைய வழிபாட்டுமுறைகள், மந்திரவழக்கு, அரசியல் வரலாறு என்று குறித்த சமூகத்தின் சகலவித அசைவியக்க அம்சங்களையும் ஒன்றுசேர்த்து தொகுக்கப்பட்ட இந்நு¡ல் எதிர்கால ஆய்வுகளுக்கு சிறந்தவொரு ஆதாரமையமாகும்.
நூல்வெளியீட்டுக்கு தலைமையேற்ற ஓவியரும், எழுத்தாளருமான அ.தேவதாசன் அவர்கள் 2500 வருடங்களுக்கு முன்பே அமைக்கப்பட்ட தீகவாபி குகையில் இருந்து மட்டக்களப்பின் புராதன வரலாறு தொடங்குவதை தொட்டுக்காட்டி தனது பேச்சை ஆரம்பித்தார். கிறிஸ்துவுக்கு முன் 545 ஆம் ஆண்டு விஐயன் வந்ததில் இருந்து துட்டகைமுணு ஈறாக நீண்டகால அரசியல் வரலாற்றை இக்குகை கொண்டிருப்பதனையும் பெளத்த, சமண, சைவ, இஸ்லாம், கிறிஸ்தவம் என்று பல்வித மதங்களையும் பின்பற்றிய சிற்றரசர்கள் தீகவாபியில் இருந்து மட்டக்களப்பு பிரதேசத்தை ஆட்சிசெலுத்தியிருப்பது குறித்து சிலாகித்தார்.