பல்வேறு இலக்கியச் சிறப்பிதழ்கள், தொகுப்பு நூல்கள், மலர்கள் ஆகியவற்றில் வெளியான என் , வ.ந.கிரிதரனின், படைப்புகள் இவை. இவை முழுமையான பட்டியல் அல்ல. ஒரு சில விடுபட்டிருக்கலாம்.
பல்வேறு இலக்கியச் சிறப்பிதழ்கள், தொகுப்பு நூல்கள், மலர்கள்
ஆகியவற்றில் வெளியான என் , வ.ந.கிரிதரனின், படைப்புகள் இவை. இவை
முழுமையான பட்டியல் அல்ல. ஒரு சில விடுபட்டிருக்கலாம்.
1. 'அறிவுத்தாகமெடுத்தலையும் வெங்கட் சாமநாதனும், அவரது கலை மற்றும் தத்துவயியற் பார்வைகளும்'
- வ.ந.கிரிதரன் - கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அரை
நூற்றாண்டு எழுத்தியக்கப்பணியினைக் கெளரவிக்கும் முகமாக சந்தியா பதிப்பகம்
(தமிழ்நாடு) 'வெங்கட் சாமிநாதன் வாதங்களும், விவாதங்களும்' தொகுப்பு
நூல். தொகுப்பாசிரிர்கள்: எழுத்தாளர்கள் பா.அகிலன்,. திலீப்குமார் &
சத்தியமூர்த்தி.
2. இணையத்தின் வரவும் , கணித்தமிழின் விளைவும், பதிவுகளின் உதயமும்! - வ.ந.கிரிதரன் - 'வடக்கு வாசல்' (புது தில்லி) 'இலக்கிய மலர் 2008' வ் ஆசிரியர் எழுத்தாளர் பென்னேஸ்வரன்.
3. 'கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!' - வ.ந.கிரிதரன் - தமிழ்க்கொடி 2006 ஆண்டு மலர், ஆழி பப்ளிஷர்ஸ்; ஆசிரியர் - 'ஆழி' செந்தில்நாதன்.
4. இரு கட்டுரைகள்: . 'அண்டவெளி ஆய்விற்கு அடிகோலும் தத்துவங்கள் ' & 'பண்டைய இந்துக்களின் நகர அமைப்பும், கட்டடக் கலையும்' - வ.ந.கிரிதரன் - கணையாழி தொகுப்பு (1995 -2000)
5. சிறுகதை- சொந்தக்காரன் - வ.ந.கிரிதரன் - கணையாழி கனடாச் சிறப்பிதழ்