1980இல் தினகரன் (இலங்கை) பத்திரிகையின் கவிதைச் சோலை பகுதியில் வெளியான எனது கவிதைகளான 'சீடர்கள்' , ' எதிர்பார்ப்பு' ஆகிய இரு கவிதைகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது இக்கவிதை.. யு டியூப்பில் கேட்க - https://www.youtube.com/watch?v=2BoJqz8w87s
நாங்கள் கவிகள்
புல்லின் நுனிகளில் பொலிந்திடும் எழிலினில்
மெல்லிய முருங்கைகளில் தொங்கிடும்
தூக்கணாங் குருவிக் கூடுகளின்
இனிமையான அழகுகளில்
மெய்ம்மறந்திடும் எங்கள் நெஞ்சங்கள்;
சோகங்கள் கண்டு நகருகையில்
அமைதி அடைவதில்லை.
வாழ்க்கைக் காடுகளில் வழிமாறித் துடித்திடும்
மனித ஜீவன்களுக்கு
வழிகாட்டுதற்காய், கவி வடித்திடும் வழிகாட்டிகள்
நாங்களே!