கலைஞன் பதிப்பகம் அண்மையில் நேர்த்தியான வடிவமைப்பில், இரண்டு தொகுப்புகளாகத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை 'Modern Tamil Poetry - A Miniature canavas ' என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது.
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' (Sharing Knowledge With Every One)!
Wednesday, October 30, 2024
மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்புகள்: 'Modern Tamil Poetry - A Miniature canavas ' (1 & 2)
கலைஞன் பதிப்பகம் அண்மையில் நேர்த்தியான வடிவமைப்பில், இரண்டு தொகுப்புகளாகத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை 'Modern Tamil Poetry - A Miniature canavas ' என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது.
அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்,கவியரசன்) 'எதிர்காலச் சித்தன் பாடல்'! - கவிதைத்தொகுப்பு!
இலங்கையின் நவீனத் தமிழ்க்கவிதையின் முன்னோடிகளில் ஒருவராக நான் நிச்சயம் கவீந்திரனைக் (அ.ந.கந்தசாமி) குறிப்பிடுவேன். மகாகவி பாரதியாரை தவிர்த்து விட்டு நவீனத் தமிழ்க் கவிதையைப் பற்றிப் பேச முடியாது. அதுபோல் இலங்கையின் நவீனத் தமிழ்க்கவிதையைப் பற்றி அதன் முன்னோடிகளைப் பற்றிப் பேசும் எவரும் அ.ந.கந்தசாமியைத்தவிர்க்க முடியாது என்பது என் கருத்து.
அ.ந.கந்தசாமியின் 'நான் ஏன் எழுதுகிறேன்?' - கட்டுரைகள் , சிறுகதைகள், கவிதைகள் அடங்கிய தொகுதி!
எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 'மனக்கண்' (நாவல்)
எழுத்தாளர் அ.ந.கந்தசாமி எழுதித் தினகரன் பத்திரிகையில் தொடராக வெளியான நாவல் 'மனக்கண்'. வெளிவந்தபோது வாசகர்கள் மத்தியில் அமோக ஆதரவைப்பெற்ற நாவல். அவர் சங்கீதப் பிசாசு என்னுமொரு சிறுவர் நாவலையும் சிரித்திரன் சஞ்சிகையின் ஆரம்ப காலத்தில் எழுதியிருக்கின்றார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு எழுத்தாளர் எமிலி ஷோலாவின் 'நானா' நாவலையும் மொழிபெயர்த்து அவர் சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது அதில் தொடராக வெளியிட்டார்.
வ.ந.கிரிதரனின் கட்டுரைகள் - தொகுப்பு 2
எனது 52 கட்டுரைகள் அடங்கிய இரண்டாவது தொகுதி தற்போது அமேசன் - கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. ஏற்கனவே எனது கட்டுரைகளின் முதற் தொகுதி வ.ந.கிரிதரன் கட்டுரைகள் என்னும் தலைப்பில் ஜீவநதி பதிப்பக வெளியீடாக 2022இல் வெளிவந்துள்ளது. https://www.amazon.com/dp/B0DK7RDQFR
வ.ந.கிரிதரனின் பாடல்கள் - தொகுப்பு 2
எனது யு டியூப் சானலான 'வ.ந.கிரிதரன் பாடல்கள்' சானலில் வெளியான பாடல்களின் இரண்டாவது தொகுதி 'இன்று புதிதாய்ப் பிறந்தேன்' என்னும் தலைப்பில் , பதிவுகள்.காம் வெளியீடாக அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது - https://www.amazon.com/dp/B0DJYKTPNS
வ.ந.கிரிதரனின் 'நவீனக் கட்டடக்கலைச் சிந்தனைகள்'
நவீனக் கட்டடக்கலையின் முக்கிய கோட்பாடுகளாக "லூயிஸ் சல்லிவனின் (Louis Sullivan) செயற்பயனைத் தொடரும் வடிவம் (Form follows function), ஃப்ராங்க் லாயிட் ரைட் அவர்களின் சேதனக் கட்டடக்கலை (Organic Architecture), கட்டடக்கலைஞர் லட்விக் மீஸ் வான் டெர் ரோவின் (Ludwig Mies Van der Rohe) ''குறைவில் நிறைய (Less is more) ' போன்ற கோட்பாடுகளையும் மற்றும் லெ கொபூசியேவின் (Le Corbusier) நவீனக்கட்டடக்கலைக் கருதுகோள்கள் போன்றவற்றையும் குறிப்பிடலாம்.
Thursday, October 24, 2024
வ.ந.கிரிதரன் பாடல் - காதலை அறிய வைத்தாய் கண்ணா!
இசை & குரல் - AI SUNO | ஓவியம் - AI
காதலை அறிய வைத்தாய் கண்ணா
காதலை அறிய வைத்தாய் கண்ணா
ஆதலால் நெஞ்சில் நிறைந்தாய் கண்ணா
காதல் பிரதிபலன் எதிர்பார்ப்பது இல்லை.
காதல் சுயநலம் மிகுந்தது அல்ல.
உண்மைக் காதலைப் பற்றிக் கூறினேன்.
உணர்ச்சிக் காதல் பற்றி அல்ல.
காதலை அறிய வைத்தாய் கண்ணா
ஆதலால் நெஞ்சில் நிறைந்தாய் கண்ணா
வ. ந. கிரிதரன் அவர்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பில் வெளிப்பட்டு நிற்கும் அந்நியமாதல் கருத்துநிலை - ஓர் ஆய்வு! - அ.எப்தா நிஷான் A.Abdhan Nishan , மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -
வ. ந. கிரிதரன் அவர்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பில் வெளிப்பட்டு நிற்கும் அந்நியமாதல் கருத்துநிலை - ஓர் ஆய்வு! - அ.எப்தா நிஷான் A.Abdhan Nishan , மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -
அறிமுகம்
தமிழிலக்கிய வரலாற்றில் 'புலம்பெயர்வு", 'புலம்பெயர்தல்" ஆகிய சொற்கள் பற்றிய கருத்துக்களைப் பரவலாகக் காணமுடிகின்றது. மனிதநாகரிகத்தின் வளர்ச்சிநிலைகளில் புலம்பெயர்வு தொடர்ச்சியாகவே இடம்பெற்று வந்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ்விலக்கியத்துக்கூடாகப் பேசப்படுகிறது. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை, உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.
'புலம்பெயர்வு" என்பது ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டுப்பெயர்ந்து சமூக அரசியல் பண்பாட்டுச் சூழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு அரசியல் சமூக பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களையே இங்கு 'புலம்பெயர் இலக்கியம்" அல்லது 'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்" என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கின்றோம். இதனை ஆங்கிலத்தில் னுயைளிழசய டுவைநசயவரசந என குறிப்பிடுவர்.
Thursday, October 17, 2024
வ.ந.கிரிதரன் பாடல்: அன்பின் வலிமை!
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
அன்பின் வலிமை!
மனtதொன்றி நினைத்தால் நினைத்தது நடக்கும்.
மனதொன்றி நினைப்போம் வாழ்வில் வெல்வோம்.
அன்பே! எண்ணங்களின் வலிமையை அறிந்தேன்
அன்பின் வலிமையினை உணர்ந்தேன் உன்மூலம்.
தொலைவில் இருந்தாய். நினைவில் வந்தாய்.
மலைக்க வைத்தாய். மனதொன்றி நினைத்தாய்.
மனதொன்றி நினைத்தால் நினைத்தது நடக்கும்.
மனதொன்றி நினைப்போம் வாழ்வில் வெல்வோம்.
Tuesday, October 15, 2024
எழுத்தாளர் ஃபியதோர் தத்தயேவ்ஸ்கி சூதாட்டக் கடன்களைத் தீர்க்க எழுதிய நாவல் 'சூதாடி', எழுத்தாளர் சுந்தர ராமசாமி கூறுவது போல் 'குற்றமும் தண்டனை'யும் அல்ல!
எழுத்தாளர் ஃபியதோர் தத்தயேவ்ஸ்கி பற்றி எழுத்தாளர் சுந்தர ராமசாமி 'தாத்யயேஸ்கி என்ற கலைஞன்' என்னுமொரு நீண்ட கட்டுரையினை எழுதியிருக்கின்றார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட சு.ரா.வின் 'அந்தரத்தில் பறக்கும் கொடி' என்னும் தொகுப்பிலுள்ளது. எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் ஒருவர் ஃபியதோர் தத்தயேவ்ஸ்லி. அவரைப் பற்றி கட்டுரைகள் எவை கண்ணில் தட்டுப்பட்டாலும் வாசிக்கத் தவறுவதில்லை. இந்தக் கட்டுரையை முன்பொரு தடவை வாசித்ததாகவும் நினைவு. இம்முறை ஆழ்ந்து வாசித்தேன். இவ்விதம் வாசிக்கையில் சு.ரா அவர்களின் பின்வரும் கூற்று என் கவனத்தை ஈர்த்தது:
"....கடன்காரர்கள் அவன் கழுத்தில் சுருக்கைப் போட்டு இழுக்கின்றார்கள். துன்பத்திலும், வறுமையிலும் ,தனிமையிலும் உழல்கிறான். அப்போது அவன் எழுதத்தொடங்கிய நாவல்தான் 'குற்றமும் தண்டனையும்'
இதனை வாசித்தபோது சு.ரா எவ்விதம் இவ்விதமானதொரு வரலாற்றுத் தவறினை விட்டிருக்க முடியும் என்னும் சிந்தனை ஓடிற்று. காலச்சுவடு பதிப்பகம் மிகவும் அவதானமாகப் பிழை, திருத்தம் செய்பவர்கள் என்ற கருத்தொன்றும் நிலவுகின்றது. இது முக்கியமான வரலாற்றுத் தவறு.
Monday, October 14, 2024
சுவடிகள் திணைக்கள முன்னாள் இயக்குநர் கே.டி.ஜி. விமலரட்ன, எழுத்தாளர் காத்யான அமரசிங்க ஆகியோரின் உதவும் மனப்பான்மையும், தமிழ்ப் பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்களுக்கான ஒரு தாழ்மையான வேண்டுகோளும்
தமிழ்ப் பத்திரிகை, சஞ்சிகை ஆசிரியர்களே! உங்களுக்குத் தாழ்மையான ஒரு வேண்டுகோள். உங்கள் பத்திரிகைகளை நிச்சயம் நீங்கள் உங்கள் நிறுவன நூலகங்களில் ஆவணப்படுத்தி வைத்திருப்பீர்கள். அப்படி வைத்திருந்தால் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் சேகரித்து வையுங்கள். உங்கள் பத்திரிகைகள் , சஞ்சிகைகளில் வெளியான ஆக்கங்களைப் பற்றிய ஆய்வுகள் செய்ய விரும்பும் எவருக்கும் உறுதுணையாக இருங்கள். படைப்புகளைத் தேடி வேண்டுகோள்கள் வரும்போது நிச்சயம் உதவி செய்யுங்கள். நீங்கள் உங்கள் சேவைக்கு இலவசமாக உதவிகளைச் செய்யத்தேவையில்லை. சேவைக்குரிய நியாயமான கட்டணங்களை நீங்கள் அறவிடுங்கள். இதன் மூலம் நீங்கள் உங்கள் பத்திரிகைகள் பற்றிய ஆய்வுகளை ஊக்கப்படுத்துகின்றீர்கள். உங்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியான படைப்புகளை எழுதியவர்கள் பற்றிய ஆய்வுகளை ஊக்கப்படுத்துகின்றீர்கள். தமிழ் இலக்கியத்தை வளப்படுத்த உதவி செய்கின்றீர்கள்.
நான் முன்பு பல தடவைகள் எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் மனக்கண் நாவல் பிரதிகளுக்காக தினகரன் பத்திரிகை ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதியிருந்தேன். அவை எவற்றுக்கும் பதில் கிடைத்ததேயில்லை. பின்னர் இலங்கைச் சுவடிகள் திணக்களத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அக்காலகட்டத்தில் அதன் இயக்குநராகவிருந்த K.D.G.விமலரட்ன அவர்கள் உண்மையிலேயே சிறந்த பண்பு மிக்கவர் மட்டுமல்லர்.உதவும் மனப்பான்மை மிக்கவராகவும் இருந்தார். அதனால் அவர் எனக்குச் சுவடிகள் திணக்களத்திலிருந்து மனக்கண் நாவல் வெளியான பக்கங்களைப் புகைப்படப் பிரதிகளாக எடுத்து , நியாயமான கட்டணத்துக்கு அனுப்பி உதவினார். அதை ஒருபோதுமே மறக்க மாட்டேன்.
அவ்விதம் அவர் அனுப்பிய மனக்கண் அத்தியாயங்கள் அத்தியாயம் முப்பது மட்டும் கிடைக்கவில்லை. அதன் பிரதி சுவடிகள் திணைக்களத்தில் இல்லை. அதன் பின்னர் அதனைத்தேடிப் பல தடவைகள் தினகரன் பத்திரிகை ஆசிரியருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பினேன். பதில்கள் வந்ததேயில்லை. பின்னர் எழுத்தாளர் காத்யான அமரசிங்கவிடம் இது பற்றிக் கூறியபோது அவர் லேக் ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவருடன் தொடர்புகொண்டு, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நூலகத்திலிருந்து அந்த தேடப்பட்ட அத்தியாயத்தை எடுத்து அனுப்பினார். இவரையும் ஒருபோதுமே மறக்க மாட்டேன். இவர்கள் இருவரின் ஒத்துழைப்பால் மட்டுமே இன்று அ.ந.கந்தசாமியின் வெளியான ஒரேயொரு முக்கிய நாவலான 'மனக்கண்' நாவலை நீங்கள் யாவரும் வாசிக்க முடிகின்றது.
இத்தருணத்தில் இன்னுமொரு விடயத்தையும் பதிவு செய்ய வேண்டும். அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது 'தணியாத தாக'த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். அவரும் அ.ந.கந்தசாமியும் இளமைப்பருவத்திலிருந்து நண்பர்கள். அ.ந.க.வின் படைப்புகளைச் சேகரித்து வைத்திருந்தார். அ.ந.க.வின் மதமாற்றம் தேசிய கலையிலக்கியப் பேரவை வெளியீடாக வெளிவரக் காரணம் அவர் அதனைச் சேகரித்து வைத்திருந்ததால்தான். அவரையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.
Sunday, October 13, 2024
வ.ந.கிரிதரன் பாடல் - சிந்திப்பீர் மானுடரே!
இசை & குரல் : AI SUNO | ஓவியம் - AI
சிந்திப்பீர் மானுடரே!
சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.
கேட்பவற்றை அப்படியே நம்பாதே.
காண்பவற்றையும் அப்படியே நம்பாதே.
கேட்பவை, காண்பவை அனைத்தையுமே
கவனத்தில் எடுத்தே சிந்திப்பாய்.
சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.
மந்தையாக மாறிக் கிடக்காதே.
மனத்தில் இருத்தி சிந்திப்பாய்.
விந்தைமிகு இருப்பின் அர்த்தம்
விளங்கிக் கொள்ளச் சிந்திப்பாய்.
சிந்திப்பது மனிதரின் தனிச்சிறப்பு.
சிந்திப்பதால் ஞானம் பெருகும்.
Saturday, October 12, 2024
தென்கொரிய எழுத்தாளர் ஹான் கங்குக்கு இலக்கியத்துக்கான நோபல் விருது !
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மேனாட்டு நூல்கள் பலவற்றை வாசித்து அவை பற்றீய எண்ணப்பதிவுகளை அடிக்கடி எழுதுபவர். அவை பல தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. ஒரு தடவை அவர் புக்கர் விருது பெற்ற நாவலொன்றைப் பற்றிச் சிறு குறிப்பொன்று 'உணவை மறுத்தவள்' என்னும் தலைப்பில் எழுதியிருந்தார். அவர் அந்த நாவலை வாசித்ததற்கு முக்கிய காரணம் அதற்கு புக்கர் விருது கிடைத்ததுதான் என்பதை அப்பதிவை வாசிக்கும் எவரும் புரிந்துகொள்வர். அவரை அந்த நாவல் கவரவில்லையென்பதை அப்பதிவின் இறுதி வரிகள் வெளிப்படுத்தின. அவ்வரிகள் வருமாறு;
'எளிமையான இந்த நாவலுக்கு மேன் புக்கர் விருது கிடைத்திருப்பது குருட்டு அதிர்ஷ்டம் என்றே கருதத்தோன்றுகிறது.'
அந்த நாவலை எழுதியவருக்கு 2024ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் விருது கிடைத்துள்ளது. அவருக்கு இந்த விருது கிடைக்க அந்த நாவலும் ஒரு காரணம். அவருக்கு நோபல் விருது கிடைக்க முக்கிய காரணங்கள் இந்நாவலிலுள்ள அவரது கவித்துவமான நடையும், வரலாற்றுத் துயரங்களை எதிர்கொண்ட தன்மையும், நொருங்கக்கூடிய மானுட வாழ்க்கையினை வெளிப்படுத்திய போக்கும் என்று கூறப்படுகின்றது.
வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்
இசை & குரல்; AI SUNO | ஓவியம் - AI]
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
என்று சொன்னான் மகாகவி பாரதி
நன்றாய் நாளைக் கழித்திட வேண்டி.
என்றும் இருப்பில் இன்பம் நாடி.
நன்று சொன்னான் என்று சொல்வேன்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
வ.ந.கிரிதரன் பாடல் - இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்!
இசை & குரல்; AI SUNO | ஓவியம் - AI
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
இன்று புதிதாய்ப் பிறந்தேன் நான்.
என்று சொன்னான் மகாகவி பாரதி
நன்றாய் நாளைக் கழித்திட வேண்டி.
என்றும் இருப்பில் இன்பம் நாடி.
நன்று சொன்னான் என்று சொல்வேன்.
Friday, October 11, 2024
புலம்பெயர் தமிழ் இலக்கியம் - வ.ந.கிரிதரனின் அமெரிக்கா நாவலை முன்வைத்துச் சில குறிப்புகள்! , - அப்தான் நிஷான், மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -
அண்மையில் கிழக்குப் பல்கலைககழகத்தின் கலை, கலாச்சாரப் பீடத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்கும் மூன்றாம் வருட மாணவன் அப்தான் நிஷான் Abdhan Nishan எனக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் புலம்பெயர் இலக்கியங்கள் என்னும் பாடத்துக்காக எனது 'அமெரிக்கா' என்னும் சிறு நாவலைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையினைத் தான் சமர்ப்பித்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். இதுவே தனது முதலாவது ஆய்வு என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் 'தொடர்ந்து புலம்பெயர் சிறுகதைகளில் அந்நியமாதல் (தனிமைப்படுத்தப்படல்) என்ற விடயம் வெளிப்படுமாற்றினை ஆய்வு செய்யுமாறு கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறையினால் பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தங்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்று சிறுகதைத் தொகுப்பை ஆய்வுக்காக தெரிவு செய்துள்ளேன்.' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முதலில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும். மாணவர்களை இதுபோன்ற விடயங்களில் கவனத்தைச் செலுத்துமாறு தூண்டுவது ஆரோக்கியமான விடயம். மேலும் போர்ச்சூழலை அடுத்து ஆயிரக்கணக்கில் இலங்கைத் தமிழர்கள் புலம் பெயர்ந்தார்கள். இன்றும் புலம்பெயர்கின்றார்கள். இன்றுள்ள தலைமுறையினருக்குப் புகலிட வாழ்க்கை பற்றிய விபரங்களை, புலம்பெயர்ந்ததற்கான காரணங்களைப் புகலிட இலக்கியப் படைப்புகள் எடுத்துக்காட்டுகின்றன., அவ்வகையில் புகலிடத் தமிழ் இலக்கியம் நோக்கியும் மாணவர்களின் கவனத்தைத் திருப்பியிருப்பதும் ஆரோக்கியமானது. இத்தருணத்தில் எண்பதுகளில் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பேராசிரியர் நா. சுப்பிரமணியன் , பேராசிரியர் கா.சிவத்தம்பி போன்றோர் மாணவர்களை இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றியும் கவனத்தைத் திருப்ப ஊக்குவித்தது நினைவு வருகின்றது. அதன் பயனாக இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுகள் வெளிவந்தன.
அப்தான் நிஷானின் ஆய்வு முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்.
************************************************************************
தமிழிலக்கிய வரலாற்றில் 'புலம்பெயர்வு, 'புலம்பெயர்தல்" ஆகிய சொற்கள் பற்றிய கருத்துக்களைப் பரவலாகக் காணமுடிகின்றது. மனிதநாகரிகத்தின் வளர்ச்சிநிலைகளில் புலம்பெயர்வு தொடர்ச்சியாகவே இடம்பெற்று வந்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ்விலக்கியத்துக்கூடாகப் பேசப்படுகிறது. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை, உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.
Thursday, October 10, 2024
எழுத்தாளர் அ.ந.கந்தசாமியின் 20 கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுதி 'எதிர்காலச்சித்தன் பாடல்' என்னும் தலைப்பில் அமேசன் - கிண்டில் மின்னூலாக வெளிவந்துள்ளது. அதனை வெளியிட்டிருப்பது பதிவுகள்.காம்.
அத்தொகுப்புக் கவிதைகளை இங்கு தருகின்றோம். 'அறிமுகம்: கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு!;' என்னும் தலைப்பில் தொகுப்பின் முன்னுரையினை எழுதியிருப்பவர் எழுத்தாளர் வ.ந.கிரிதரன். அ.ந.க.வின் படைப்புகள் சிறுகதைகள்,கவிதைகள், கட்டுரைகள் பல பல்வேறு சஞ்சிகைகள்,பத்திரிகைகளில் வெளிவந்தவை இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை. இவற்றைத் தேடியெடுப்பது முக்கியமானது.
அறிமுகம்: கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு! வ.ந.கிரிதரன் -
"ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால்பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது" என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது.
Wednesday, October 9, 2024
வ.ந.கிரிதரனின் அறிவியல் மின்னூல்: 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்'
என்னுடைய அறிவியற் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் கவிதைகளின் தொகுப்பான 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' நூல் மின்னூலாக இணையக் காப்பகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது.
மின்னூலை இணையக் காப்பகத்தில் அல்லது பதிவிறக்கி வாசிக்கலாம். அதற்கான இணைப்பு
நூலகம் தளத்திலும் வாசிக்கலாம். அதற்கான இணைப்பு
இணையக் காப்பகம் (archive.org) , நூலகம் (https://www.noolaham.org) எழுத்தாளர்கள் அனைவரும் ஆக்கபூர்வமாகப் பாவிக்க வேண்டிய ஆவணத்தளங்கள். உங்கள் படைப்புகளின் பிடிஃப் கோப்புகளை அங்கு சேகரித்து வைப்பதன் மூலம் நீண்ட காலம் இணையத்தில் உங்கள் படைப்புகள் நிலைத்து நிற்கப் போகின்றன. இத்தளத்துக்குச் சென்று உங்களுக்கான கணக்கொன்றை உருவாக்கி, உங்கள் படைப்புகளையும் சேகரித்து வையுங்கள்.
இத்தளங்களில் பல அரிய தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
Sunday, October 6, 2024
வ.ந.கிரிதரன் பாடல் - மண்ணின் குழந்தைகள் நாம்!
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணின் குழந்தைகள் நாம் புரிவோம்.
வெறுமைக்குள் விரையும் வாயுக் குமிழி.
வாயுக் குமிழிக்குள் மட்டுமே பரபரப்பு.
விரிந்திருக்கும் வெறுமை விரவிக் கிடக்கும்
புரியாத காலவெளிக்குள் தனித்துக் கிடக்கின்றோம்.
மண்ணின் குழந்தைகள் நாம் உணர்வோம்.
விண்ணின் குழந்தைகள் நாம் புரிவோம்.
Saturday, October 5, 2024
வ.ந.கிரிதரன் பாடல் - விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
விரிவெளியும், விடைதேடும் நெஞ்சும்
விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம்
புரிந்திட முயற்சி செய்கின்றோம் தெரிந்திட.
ஒளியாண்டுத் தொலைவுகள் பிரமிக்க வைக்கும்.
துளியென எம்இருப்பு இருப்பதும் எதனால்?
தொலைவுகள் பிரிக்கும் பெரு வெளியில்
அலையும் உயிரினம் இதுவரை அறியோம்.
விரிந்திருக்கும் பெரு வெளியில் இருக்கின்றோம்
புரிந்திட முயற்சி செய்கின்றோம் தெரிந்திட.
Friday, October 4, 2024
வ.ந.கிரிதரன் பாடல் - அன்பே வாழ்வின் அடிப்படை!
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாழுவோம். இன்பம் அடைவோம்.
உயிர்கள் இருப்பது அன்பின் வலிமையால்.
உணர்ந்து கொண்டால் இன்பமே இருப்பில்.
உணராது போனால் விளைவதே மோதல்.
உலகில் தினமும் பார்க்கின்றோம் இதனைத்தான்.
அன்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை.
அன்புடன் வாழுவோம். இன்பம் அடைவோம்.
Wednesday, October 2, 2024
எழுத்தாளர் மயிலங்கூடலூர் பி. நடராசனின் 'மறுமலர்ச்சி'ச் சங்கம், 'மறுமலர்ச்சி'ச் சஞ்சிகை பற்றிய 'சஞ்சீவி' கட்டுரைகளும், அவற்றின் முக்கியத்துவமும் பற்றி.. - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் செங்கை ஆழியான் (க.குணராசா) அவர்களின் கட்டுரைகள் பலவற்றில் தவறான வரலாற்றுத் தகவல்கள் இருப்பதை அவ்வப்போது கண்டிருக்கின்றேன். சுட்டிக்காட்டியுமிருக்கின்றேன். தான் எடுக்கும் முடிவுகளுக்கேற்ப எழுதும் கட்டுரைகளைக் கூட மாற்றி எழுதுவதுமுண்டு. உதாரணத்துக்கு நல்லூர் இராஜதானி, யாழ்ப்பாணத்துச் சாமி பற்றிய அவரது கட்டுரைகளில் இவற்றைக் காணலாம். அவை பற்றி என் கட்டுரைகளில் குறிப்பிட்டுமிருக்கின்றேன்.
அண்மையில் அவர் தொகுத்து வெளிவந்த மறுமலர்ச்சிக் கதைகள் தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரையிலும் இவ்விதமான தகவற் பிழைகளைக் கண்டேன்.அது இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய அமைப்பான மறுமலர்ச்சிச் சங்கம் பற்றியது. அதில் அவர் பின்வருமாறு கூறுவார்:
"1943 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இலக்கிய ஆர்வம் மிக்க இளம் எழுத்தாளர்கள் சிலர் ஒன்றிணைந்து தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் என்ற பெயரில் எழுத்தாளர் சங்கம் ஒன்றினை நிறுவிக்கொண்டனர். இலங்கையில் உருவாக்கப்பட்ட முதல் எழுத்தாளர் சங்கம் இதுவெனலாம். இந்தச் சங்கத்தை உருவாக்கவேண்டுமென்ற எண்ணத்தை யாழ்ப்பாண இந்துக் கல்லூரி ஆசிரியராகவிருந்த அமரர் வை. ஏரம்பமூர்த்தியும் (ஈழத்துறைவன்), அமரர் இரசிகமணி கனகசெந்திநாதனும் முன்னெடுத்தனர். இவர்களோடு அசெமு (அ. செ. முருகானந்தன்), திசவ (தி.ச.வரதாராசன்), ககமா (க.கா.மதியாபரணம்), கசெந (க. செ.நடராசா), சபச (ச.பஞ்சாட்சரசர்மா) அநக (அ.ந.கந்தசாமி) முதலானோரும் இணைந்து கொண்டனர். மறுமலர்ச்சிச் சங்கம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு, 'மறுமலர்ச்சி' என்ற பெயரில் சஞ்சிகையொன்றை வெளியிடுவதெனத் தீர்மானித்தது."
இது அப்பட்டமான தவறான வரலாற்றுத் தகவல். எங்கிருந்து இத்தகவலைச் செங்கை ஆழியான் பெற்றுக்கொண்டாரோ தெரியவில்லை. தானாகவே வரலாற்றை மாற்றத்தீர்மானித்து இவ்விதம் எழுதினாரோ தெரியவில்லை.
Monday, September 30, 2024
வ.ந..கிரிதரன் பாடல்: சிந்திப்போம்!
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
சிந்திப்போம்!
சிந்திப்பது என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.
தனிமையில், இயற்கையை இரசிப்பேன் எப்போதும்.
இனியதோர் இன்பம் அதுபோல் வேறுண்டோ/
மனிதரின் பெரும் சொத்து சிந்திப்பே.
மனத்தில் இன்பம் சேர்ப்பதும் சிந்திப்பே.
சிந்திப்பது என்றால் பேரின்பம் எனக்கு.
எந்த நேரமும் சிந்திப்பது என்வழக்கம்.
Saturday, September 28, 2024
அநுரா குமார திசாநாயக்காவின் வாசிப்புப் பழக்கம் பற்றி....
ஊடகவியலாளர் டி.பி.எஸ்.ஜெயராஜ் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார் திசாநாயக்க பற்றிச் சுருக்கமான ஆனால் முக்கியத்துவம் மிக்க கட்டுரையொன்றினை 'அநுரா குமார திசாநாயக்க; “இடதுசாரி” நட்சத்திரம் இலங்கையில் உதயம்' என்னும் தலைப்பில் டெய்லி மிரர் (இலங்கை) பத்திரிகையில் எழுதியுள்ளார். அதிலவர் அநுரா குமார திசாநாயக்கவின் வாசிப்பு மற்றும் நீச்சல் பழக்கம் பற்றியும் விபரித்துள்ளார். அவற்றின் மூலம் அநுரா எவ்விதமான நூல்களை வாசிப்பார், எத்தகைய தேகப்பயிற்சி அவருக்குப் பிடித்தது போன்ற விடயங்களை அறிய முடிகின்றது.
Friday, September 27, 2024
வ.ந.கிரிதரன் பாடல் - புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.
நாடு முன்னேற ஒற்றுமை அவசியம்.
பாடு படுவோம் ஒற்றுமை பேண.
பிரிந்து கிடந்தது இனியும் வேண்டாம்.
புரிந்து கொண்டே பயணத்தைத் தொடர்வோம்.
புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.
இனவாதம் வேண்டாம் மதவாதம் வேண்டாம்.
இருக்கும் பிரிவுகள் இனியும் வேண்டாம்.
கடந்தவை பாடங்களாக இருக்கட்டும். படிப்போம்.
நடப்பவை நல்லதாகத் தொடரவே நினைப்போம்.
புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.
வ.ந.கிரிதரன் பாடல் - புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.
நாடு முன்னேற ஒற்றுமை அவசியம்.
பாடு படுவோம் ஒற்றுமை பேண.
பிரிந்து கிடந்தது இனியும் வேண்டாம்.
புரிந்து கொண்டே பயணத்தைத் தொடர்வோம்.
புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.
இனவாதம் வேண்டாம் மதவாதம் வேண்டாம்.
இருக்கும் பிரிவுகள் இனியும் வேண்டாம்.
கடந்தவை பாடங்களாக இருக்கட்டும். படிப்போம்.
நடப்பவை நல்லதாகத் தொடரவே நினைப்போம்.
புதிய பாதையில் பயணம் தொடரட்டும்.
எதிர்காலம் வளமாக அமையட்டும். நம்புவோம்.
Tuesday, September 24, 2024
நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலும், வடகிழக்கு வாக்காளார்களின் தெரிவுகளும் பற்றி...
நடந்து முடிந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பல ஆரோக்கியமான முக்கியமான விடயங்களை நான் காண்கின்றேன். புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் அனுர குமார திசாநாயக்க இத்தேர்தலை ஆரோக்கியமாகக் கையாண்டுள்ளார். அவற்றைப் பட்டியலிட்டால் முக்கியமானவையாக நான் கருதுவது இவற்றைத்தான்.
1. முதன் முறையாகப் பிரதான தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிங்களத் தேசியம், இனவாதம் போன்ற மக்களை உணர்ச்சியிலாழ்த்தும் விடயங்களை முக்கிய பிரச்சாரமாகக் கைக்கொண்டு பிரச்சாரம் செய்யவில்லை.
2. அனுரா குமார திசாநாயக்கவின் சில உரைகளை நான் கேட்டேன். ஓர் உரையில் அவர் தோட்டத்தொழிலாளர்களின் நிலையினை , அவர்கள்தம் அவலங்களைத் தோலுரித்துக் காட்டியிருந்தார்.
Monday, September 23, 2024
வ.ந.கிரிதரன் பாடல் - உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
உழைப்பவர் உருவாக்குவதே வரலாறு.
வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு உற்பத்திச் சக்திகளின் வரலாறு.
உழைக்கும் தொழிலாளர் உருவாக்குவதே வரலாறு.
உலகின் வரலாற்றைப் படைப்பவர் இவரே.
உழைப்பவர் வேர்வை, உழைப்பில் உருவாவதே
உண்மையான வரலாறு தெரிந்து கொள்வோம்.
வரலாறு என்பது தனிமனிதர் வரலாறு அல்ல.
வரலாறு உற்பத்திச் சக்திகளின் வரலாறு.
Saturday, September 21, 2024
வ.ந.கிரிதரன் பாடல்: என் பிரியம் மிகு யாழ் மண்ணே!
- இசை & குரல்: AI SUNO - ஓவியம் : AI
என் பிரியம் மிகு யாழ் மண்ணே!
உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.
பிறந்து உருண்டு தவழ்ந்த மண்.
பருவக் கனவுகள் பூத்த மண்.
போர்க்களங்கள் எத்தனை சந்தித்தாய் வரலாற்றில்.
பாரில் உயர்ந்து நிற்கின்றாய் யாழ்மண்ணே.
உணர்வுடன் , உயிருடன் கலந்த மண்ணே.
உள்ளத்தில் நிலைத்திருக்கும் பிரிய யாழ்மண்ணே.
Friday, September 20, 2024
வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளி நாம்
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
காலவெளி நாம்
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.
சொல்லவிந்து ஊர் துஞ்சும்
நள்யாமப் பொழுதுகளில்
உன் நினைவால் வாடுகின்றேன்.
எனையே நான் சாடுகின்றேன்.
முதற் பார்வையில் மயங்கினேன்.
அதற்காகவே இன்று வாழ்கின்றேன்.
எதற்காக இந்தச் சந்திப்பு? கண்ணா,
எதற்காக இந்தச் சிந்திப்பு?
காலவெளி நாமன்றோ கண்ணா.
காலவெளி நாமன்றொ கண்ணா.
Thursday, September 19, 2024
வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!
இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI
மனத்தை மயக்கும் இந்தநிலா!
உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.
வந்தியத் தேவன் குந்தவை பார்த்தநிலா.
வரலாற்றைப் பார்த்து நிற்கும் இந்தநிலா.
கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா.
புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா.
உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.
வ.ந. கிரிதரன் பாடல்: மனத்தை மயக்கும் இந்தநிலா!
இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI
மனத்தை மயக்கும் இந்தநிலா!
உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.
வந்தியத் தேவன் குந்தவை பார்த்தநிலா.
வரலாற்றைப் பார்த்து நிற்கும் இந்தநிலா.
கவிஞர் பலர் கற்பனையில் திளைக்கும்நிலா.
புவியில் காதலர் களிக்கும் இந்தநிலா.
உயரத்தில் தெரியும் இந்தநிலா.
துயரத்தைத் தணிக்கும் இந்தநிலா.
Wednesday, September 18, 2024
வ.ந.கிரிதரன் பாடல்: காட்சியும் சித்(த)து விளையாட்டும்!
இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI
யு டியூப்பில் கேட்டுக் களித்திட: https://www.youtube.com/watch?v=snzGyWR-BwE
காட்சியும் சித்(த)து விளையாட்டும்!
கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?
சிந்தையின் சித்து விளையாட்டு என்றால்
விந்தைமிகு விரிஉலகம் அனைத்தும் பொய்மையா?
பொய்மையை உண்மையென எண்ணி இருப்பதே
வையகத்தில் நம்வாழ்வு என்பதும் சரியா?
கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?
நாம் காண்பதாக உணர்வது என்பதெல்லாம்
நம் மூளையின் மின்சமிக்ஞை என்றால்
வெளியில் இருப்பதாக எண்ணுவது எல்லாம்
உள்ளத்தின் மாயத் தோற்றங்கள் தானா?
கண்ணெதிரே விரிந்திருக்கும் காலவெளி எல்லாம்
என்னுள்ளம் உருவாக்கிய சித்து விளையாட்டா?
வ.ந.கிரிதரன் பாடல்: ஏணி பாம்பு விளையாட்டு
இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI
ஏணி பாம்பு விளையாட்டு
ஏணி பாம்பு விளையாட்டு தெரியுமா?
எம் வாழ்க்கையும் அதுபோல்தான் புரியுமா?
ஏறுவதும் இறங்குவதும் மீண்டும் ஏறுவதும்
எல்லாமே சகஜம் நம்வாழ்விலும் புரிந்துகொள்.
ஏறினால் பெருமிதத்தில் ஆழ்ந்து விடாதே.
இறங்கினால் இடிந்துபோய் இருந்து விடாதே.
ஏணி பாம்பு விளையாட்டு தெரியுமா?
எம் வாழ்க்கையும் அதுபோல்தான் புரியுமா?
Tuesday, September 17, 2024
வ.ந.கிரிதரன் பாடல்: இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.
இசை & குரல் : AI SUNO | ஓவியம்: AI
இயற்கைத்தாய்க்கு ஒரு வேண்டுதல்.
கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.
ஒழுங்குள்ள வாழ்வில் இன்பம் உண்டு.
ஒழுங்குதனை என்வாழ்வில் ஒழுகிட அருள்வாய்.
இயற்கைத்தாயே உனை இறைஞ்சிக் கேட்பதெல்லாம்
இதனைத்தான், இதனைத்தான். அறிவாய் அம்மா.
கோள்கள் , சுடர்கள் குறித்தபடி செல்வதுபோல்
வாழும் வாழ்வுதனை வாழவிடு இயற்கைத்தாயே.
Monday, September 16, 2024
வ.ந.கிரிதரன் பாடல்: பூவுலகின் குழந்தைகள் நாம்!
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
பூவுலகின் குழந்தைகள் நாம்!
பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.
பிரிவினைகள் அற்ற வாழ்வே இன்பம்.
எரியும் உலகை இல்லாது ஒழிப்போம்.
புரிந்து கொண்டே பய ணம் தொடர்வோம்.
தெரிந்து கொள்வோம் பிறப்பின் பயனை.
பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.
வாயுக் குமிழியென வெளியில் விரையும்
ஓயுதல் அற்ற இயக்கத்தில் பூமி.
இருப்பதை உணர்ந்தால் மோதல் இல்லை.
விருப்புடன் வாழ்வை அணுகுவோம் உண்மை.
பூவுலகின் குழந்தைகள் நாம் புரிவோம்.
பூசல்கள் அற்று வாழ்வோம் மகிழ்ந்தே.
வ.ந.கிரிதரன் பாடல்: கணந்தோறும் பிறப்போம்.
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
கணந்தோறும் பிறப்போம்!
ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.
கணப்பொழுதின் சிறுதுளிக்குள் நுண்ணுயிர் இருப்பு.
காலம் அதற்கு முழுவட்டம் அறிவோம்.
அதற்குள் கூடிப்பெருகி வாழ்ந்து உதிரும்.
அதனை உணர்ந்தால் வாழ்வு புரியும்.
ஒவ்வொரு கணமும் வாழுவோம்.
இவ்வாழ்வின் தத்துவம் உணருவோம்.
Sunday, September 15, 2024
வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளிப் பயணம்.
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
காலவெளிப் பயணம்!
முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.
காலவெளிப் பயணம் அர்த்தமென்ன?
கட்டவிழ்ந்து சிறகடிக்கும் சிந்தனை.
ஓலமிடும் நெஞ்சோ விடைதேடும்.
ஞாலத்தின் இருப்பு அலைமோதும்.
முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.
சிந்திக்கச் சிந்திக்க இன்பமே.
சிந்திக்கச் சிந்திக்க உற்சாகமே.
சிந்திக்கச் சிந்திக்கத் தெளிவே.
சிந்திப்பில் உள்ளது வாழ்க்கை.
முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.
வ.ந.கிரிதரன் பாடல்: காலவெளிப் பயணம்.
இசை & குரல்: AI SUNO | ஓவியம்: AI
காலவெளிப் பயணம்.
முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.
காலவெளிப் பயணம் அர்த்தமென்ன?
கட்டவிழ்ந்து சிறகடிக்கும் சிந்தனை.
ஓலமிடும் நெஞ்சோ விடைதேடும்.
ஞாலத்தின் இருப்பு அலைமோதும்.
முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.
சிந்திக்கச் சிந்திக்க இன்பமே.
சிந்திக்கச் சிந்திக்க உற்சாகமே.
சிந்திக்கச் சிந்திக்கத் தெளிவே.
சிந்திப்பில் உள்ளது வாழ்க்கை.
முப்பரிமாணக் காலப்பயணம் எம்பயணம்.
இப்பயணம் முடிவற்ற தொடர்பயணம்.
வ.ந.கிரிதரனின் கணையாழி சஞ்சிகைக் கட்டுரைகள்
கணையாழி சஞ்சிகைக்கு எப்பொழுதும் என் இதயத்தில் நன்றி கலந்த உணர்வுடன் கூடியதோர் இடமிருக்கும். கணையாழி சஞ்சிகை பெருந்தொற்றுக் காலகட்டத்தை ...
பிரபலமான பதிவுகள்
-
பாடல் வரிகள்: வ.ந.கிரிதரன் | இசை & குரல்: AI Suno நான் பிரபஞ்சத்துக் குழந்தை என்று தலைப்பிட்டுக் கீழுள்ள வரிகளை எழுதிச் செயற்கை நுண்ணறிவ...
-
- ஆஸ்ரேலிய கலை, இலக்கியச் சங்கம் வழங்கிய மெய்நிகர் நிகழ்ச்சியான 'புலம்பெயர் இலக்கியத்தில் செல்நெறி' என்னும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்...
-
எழுத்தாளர்களான கல்கி, நா.பார்த்தசாரதி (மணிவண்ணன்) ஆகியோர் வாசகர்களைக்கவரும் வகையில் எழுதுவதில் மட்டுமல்ல , நெஞ்சையள்ளும் கவிதைகளைப் பு...